செய்திகள் :

தாராபுரம்: `விருப்பப்பட்டவர்கள் விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள்..!' - ஆவேசமான நிர்வாகிகள்!

post image

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 6- ம் தேதி நடைபெற இருக்கிறது. வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

த.வெ.க சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ சத்தியபாமா வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், ஒரு மாதத்திற்குள் தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க- வில் இணைந்து கொண்டார். இந்த நிலையில், தற்போது த.வெ.க சார்பில் அதே தொகுதியில் அவரை வேட்பாளராக களம் இறக்கியிருப்பதால் பல்வேறு தரப்புகளில் இருந்தும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.

வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் மக்கள் சிலர் இவருக்கு எதிராக கோஷங்களையும் கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர். பிரசார கூட்டங்களில் சலசலப்பு மற்றும் வாக்குவாதங்கள் ஏற்படுவதால் இவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தவெக வேட்பாளர் சத்தியபாமா

காவல்துறையினர் புடை சூழ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று தாராபுரம் தொகுதிக்குட்பட்ட பெரிய குமாரபாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த மக்கள் விலைவாசி உயர்வு, பாசன வசதி திட்டம் போன்றவைகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியதுடன் சத்தியபாமாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சத்யபாமாவும் அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் ஆக்ரோஷமாகவும் ஆவேசமாகவும் பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து சத்தியபாமாவிற்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட த.வெ.க நிர்வாகிகள், "தாராபுரம் தொகுதியில் விருப்பப்பட்டவர்கள் மட்டும் விசில் சின்னத்திற்கு வாக்களியுங்ககள். மற்றவர்கள் அவர்களின் விருப்பம் போல் வாக்களித்துக் கொள்ளுங்கள். எங்களுக்கு வாக்களிக்க வேண்டாம்" என மக்களிடம் ஆவேச மொழியில் பேசிவிட்டு கிளம்பியுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றன.

தாராபுரம்: திமுக நிர்வாகிகள் வீட்டில் ரூ.48 லட்சம் பறிமுதல்| தீவிர விசாரணையில் தேர்தல் பறக்கும் படை!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதியில் அக்டோபர்- 6- ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. தி.மு.க தரப்பு வேட்பாளராக வழக்கறிஞர் சுகன்யா களத்தில் ... மேலும் பார்க்க

தாராபுரம்: தவெக வேட்பாளருக்கு வலுக்கும் எதிர்ப்பு; போலீஸார் பாதுகாப்புடன் நடைபெறும் பிரசாரம்!

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 - ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பரப்புரையில் அரசியல் கட்சிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. தாராபுரம் ... மேலும் பார்க்க

"இடைத்தேர்தலைத் திணிப்பவர்களே தேர்தல் செலவையும் ஏற்க வேண்டும்" - தாராபுரத்தில் சீமான் ஆவேசம்

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 6 - ம் தேதியும் வாக்கு எண்ணிக்கை 9-ம் தேதியும் நடைபெற இருக்கின்றன. தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகின்றன... மேலும் பார்க்க

தாராபுரம்: தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மக்கள், பாதியில் நிறுத்தப்பட்ட தேர்தல் பிரசாரம்!

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 - ம் தேதி நடைபெற இருக்கிறது. எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க- வில் இணைந்த சத்யபாமாவை வேட்ப... மேலும் பார்க்க

இடைத்தேர்தல்: ரூ.16.40 கோடி சொத்து, 3 குற்ற வழக்குகள்; 2லும் முதல் இடத்தில் TVK வேட்பாளர் சத்தியபாமா

தாராபுரம் தனித் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு சரிபார்ப்பு நேற்று மாலை நிறைவடைந்துள்ளது. முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 22 வேட்புமனுக்களைத் தேர்வு ஆணையம் ஏற்று... மேலும் பார்க்க

"அஜித் அரசியலுக்கு வந்தால் விஜய்யின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம்" - கொந்தளித்த திண்டுக்கல் சீனிவாசன்

தாராபுரம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க தரப்பில் போட்டியிடும் வேட்பாளர் பானுமதி நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அக்கட்சியின் சார்பில் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் திண்ட... மேலும் பார்க்க