செய்திகள் :

மதுரை: பல்லுயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு; 500 மாணவர்கள் இணைந்து உருவாக்கிய ‘மனித பட்டாம்பூச்சி’

post image

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் பசுமை மேலாண்மைத் திட்டம் சார்பில் ‘பட்டாம்பூச்சி மாதம்’ என்ற பெயரில், பல்லுயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுமார் 500 மாணவர்கள் பங்கேற்று ‘மனித பட்டாம்பூச்சி’ வடிவத்தை உருவாக்கினர். ‘பலர் – ஒரே நோக்கம் – பசுமையான எதிர்காலம்’ என்ற கருத்தை மையமாகக் கொண்டு, பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பட்டாம்பூச்சி தோட்டத்திற்கு ஆண்டுதோறும் பல்வேறு வகையான பட்டாம்பூச்சிகள் வருவதாகத் தெரிவித்தனர். குறிப்பாக மேகமலை பகுதிகளில் இருந்து பட்டாம்பூச்சிகள் வந்து சில காலம் தங்கி பின்னர் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்வதாகவும், இங்கு சுமார் 45 வகையான பட்டாம்பூச்சிகள் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதனை காண உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகை தருகின்றனர்.

பட்டாம்பூச்சிகளின் சூழலியல் முக்கியத்துவம், மகரந்தச் சேர்க்கையில் அவற்றின் பங்கு, இயற்கை வளங்கள் மற்றும் பல்லுயிர்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மதுரை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய மனித பட்டாம்பூச்சி

நிகழ்ச்சிக்கு அமெரிக்கன் கல்லூரி முதல்வரும் செயலருமான டாக்டர் ஜே. பால் ஜெயகர் தலைமை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எம்.பிஜூலா குமால், இயக்குநர் டாக்டர் பி.வெள்ளைத்துரை, பசுமை மேலாண்மைத் திட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேற்கு வங்கம்: நதியில் தத்தளித்த யானை குட்டி; உயிரைப் பணயம் வைத்து மீட்டு தாயுடன் சேர்த்த மீனவர்கள்

மேற்கு வங்க மாநிலம் பைகுந்தபூர் வனச்சரக பகுதிக்கு உட்பட்ட கஜோல்டோபா தடுப்பணைக்கு அருகில் ஐந்து யானைகள் கொண்ட ஒரு கூட்டம் ஆற்றைக் கடக்க முயன்றது. அப்போது அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால், ஆற... மேலும் பார்க்க

கூடலூர்: கூண்டுக்குள் சிக்கிய ஆட்கொல்லி புலி, முடிவுக்கு வந்த ஒரு மாத போராட்டம்! | Photos

வனத்துறை வனத்துறைவனத்துறைவனத்துறைஆட்கொல்லி புலிவனத்துறைஆட்கொல்லி புலி வனத்துறை ஆட்கொல்லி புலி வனத்துறைவனத்துறைவனத்துறைஆட்கொல்லி புலி வனத்துறைவனத்துறைவனத்துறைவனத்துறைவனத்துறைபுலி கூண்டுக்குள் சிக்கிய ச... மேலும் பார்க்க

Man Eater: கூண்டுக்குள் சிக்கிய ஆட்கொல்லி புலி; முடிவுக்கு வந்த ஒரு மாத போராட்டம்! - அடுத்து என்ன?

நீலகிரி மாவட்டம்,` கூடலூர் ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட லார்ஸ்டன் மற்றும் மஞ்சுஸ்ரீ எஸ்டேட் பகுதிகளில் நடமாடி வந்த ஆட்கொல்லி புலி அடுத்தடுத்து இரண்டு மனிதர்களைத் தாக்கி கொன்றது. ஆகஸ்ட் 9- ம் தேதி பாலகிர... மேலும் பார்க்க

அமைச்சர் வன்னிஅரசுடன் ஆய்வுக்கு வந்த கார் டிரைவர்; செல்பி எடுத்தபோது கடித்த மலைப்பாம்பு!

நெல்லை மாவட்டம், பாபநாசம் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள காரையாறு காணிக்குடியிருப்பு பழங்குடியின பகுதியில் இயங்கி வரும் அரசு உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்வதற்காகவும், காணிப்பழங்குடி... மேலும் பார்க்க

சாலை விரிவாக்கம்; மரங்களை இழந்து நிற்கும் மேட்டுப்பாளையம்–அன்னூர் சாலை | Drone புகைப்படங்கள்

மேட்டுப்பாளையம்–அன்னூர் சாலை மேல் படம் - மார்ச் 2025 கீழ் படம் - செப்டம்பர் 2026மேட்டுப்பாளையம்–அன்னூர் சாலை மேல் படம் - மார்ச் 2025 கீழ் படம் - செப்டம்பர் 2026மேட்டுப்பாளையம்–அன்னூர் சாலை மேல் படம் -... மேலும் பார்க்க

தூத்துக்குடி: பாதுகாக்கப்பட்ட செம்மண் தேரிப்பகுதியில் கார்கள் சாகசம்; நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டம், குதிரைமொழி தேரிப் பகுதியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சிகப்புக் கம்பளம் விரித்தாற்போல் செம்மண் மேடுகள், மணல் குன்றுகளும் நிறைந்து காணப்படுவதுதான் இந்த தேரிக்காடு. தமிழகத்தில் எ... மேலும் பார்க்க