செய்திகள் :

`இடைத்தேர்தல்; இணைந்த கைகள் வெற்றி' - தூத்துக்குடியில் பரபரப்பைக் கிளப்பிய விஜய் - அஜித் போஸ்டர்!

post image

எம்.ஜி.ஆர்- சிவாஜி, ரஜினி- கமல் ஆகிய ஹீரோக்களின் வரிசையில் நடிகர்களான விஜய்- அஜித் திரையுலகில் முன்னணில் இருந்த காலக்கட்டத்தில் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளின்போது இருவரின் படங்களும் ஒரே நேரத்தில் திரைக்கு வருவதும் ரசிகர்கள் கொண்டாடுவதும் வழக்கத்தில் இருந்து வந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய், ’தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கிய பிறகு திரையுலகை விட்டு முற்றிலும் விலகினார். இந்த நிலையில், கடந்த 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மை இடங்களை வென்றது.

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றார். இந்த நிலையில், அஜித் ரசிகர்கள் தங்களது ‘தல’யும் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என சமூக வலைதளங்களில் அவ்வப்போது தங்களின் விருப்பத்தைத் தெரிவித்து வந்தனர்... வருகின்றனர். சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற கார் பந்தயத்தை விஜய் தொடக்கி வைத்தார். அப்போது இருவரும் கட்டியணைத்து கைகளை உயர்த்தி ‘போஸ்’ கொடுத்தனர். இது விஜய், அஜித் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பகுதியில் அஜித் ரசிகர் மன்றத்தினர் ‘தமிழக மக்கள் கழகம்’ என்ற கட்சியையும், இரண்டாவது கட்சியாக காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் ’அனைத்து நண்பர்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியையும் தொடங்கியுள்ளனர். வரும் 2031-ம் ஆண்டுக்குள் அஜித்தை முதல்வராக்குவதே இலக்கு எனக் குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து, தூத்துக்குடி மாநகரப் பகுதி முழுவதும் லண்டனில் விஜய்-அஜித் இருவரும் போஸ் கொடுத்த படத்தைப் போட்டு அதில், `இடைத்தேர்தல் வெற்றி; இணைந்த கைகள் வெற்றி’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

அஜித் - விஜய்

இது அஜித் ரசிகர்களிடையே கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த போஸ்டர்கள் குறித்து தூத்துக்குடி சண்முகபுரம் லக்கி ஸ்டார் அஜித் நற்பணி மன்றம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்... அதன் தலைவர் மாடசாமி, `நடிகர் அஜித் பல்வேறு சந்தர்ப்பங்களில் தனது பெயரையோ, ரசிகர்களையோ எந்தவொரு அரசியல் பயன்பாட்டிற்கும் பயன்படுத்த வேண்டாம் என்ற நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில், தல அவர்களின் புகைப்படத்தைப் பயன்படுத்தி தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பின்னணியில் ‘இடைத்தேர்தல் வெற்றி’ போன்ற வாசகங்களுடன் தூத்துக்குடியில் ஒட்டப்பட்டுள்ள விளம்பர போஸ்டர், அஜித் ரசிகர்கள் மத்தியில் மன வேதனையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. அஜித் அவர்கள் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவாக இருப்பதாக அறிவிக்கவில்லை.

தூத்துக்குடி அஜித் நற்பணி மன்றத்தின் அறிக்கை

இந்த நிலையில், அவரது புகைப்படம் மற்றும் ரசிகர்களின் உணர்வுகளை அரசியல் பிரசாரத்துடன் தொடர்புபடுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு. அஜித் அவர்களின் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் எனவும், அரசியல் சார்பற்ற நிலைப்பாட்டை உணர்ந்து மதித்து செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் விவகாரம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் 7 நாள்களில் ஹார்முஸ் நீர்ச்சந்தி திறக்குமா? அமெரிக்காவில் ஈரான் குழு! விரைவில் குட் நியூஸ்?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஒரு வாரமாகவே தொடர்ந்து சரிந்து வருகிறது.இப்போது சர்வதேச சந்தையில் WTI கச்சா எண்ணெய் 90 டாலர் அருகே வர்த்தகமாகி வருகிறது... Brent கச்சா எண்ணெய் 99-100 டாலர் எ... மேலும் பார்க்க

ECI `பல உத்தரவுகள் எங்கள் அனுமதி இன்றியே வெளியாகின்றன'- SIR விவகாரத்தில் தேர்தல் ஆணையர்கள் அதிருப்தி

இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) நாடு முழுவதும் மேற்கொண்ட ‘சிறப்பு தீவிர திருத்தம்’ (SIR) நடவடிக்கையின்போது, சுமார் 1.3 கோடி வாக்காளர் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இது பெரிய பொது விவாதத்தை... மேலும் பார்க்க

பாலியல் வழக்கு; ``தவெகவினருக்காக மட்டும் 'Compromise' செய்துகொள்கிறாரா முதல்வர்?" - டிடிவி தினகரன்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களில் அடுத்தடுத்து சிக்கும் தவெக நிர்வாகிகள் குறித்து அமமுக தலைவர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டிருக்கு... மேலும் பார்க்க

GEM வீரமணி வழக்கு: ``அரசியல்வாதிகளையும் காவல்துறையையும் விசாரிக்க வேண்டும்" - அண்ணாமலை வலியுறுத்தல்

GEM கிரானைட்ஸ் உரிமையாலர் வீரமணி மீதான போக்சோ வழக்கில் ஆரம்பத்தில் தமிழ்நாடு காவல்துறை காட்டிய அலட்சியமும், நீதிமன்ற தலையீட்டிற்குப் பின் எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகளும் அதிகார வர்க்கத்தின் பின்னணிய... மேலும் பார்க்க

"IIT-களில் 45 மாணவர்கள் தற்கொலை; 62%க்கும் மேல் SC/ST/OBC மாணவர்கள்" - மாணிக்கம் தாகூர் கண்டனம்

"SC/ST/OBC மாணவர்களின் பாதுகாப்பு, சமத்துவம் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்ய மோடி அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?" என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியிருக்கிறார்.... மேலும் பார்க்க

"ரஷ்ய எண்ணெய்க்காக அமெரிக்கா இந்தியா மீது வரி விதிப்பதற்கு முன் யோசிக்க வேண்டும்.!" - JP Morgan CEO

அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழ்சபை ஒப்புதல், மேல்சபை ஒப்புதல், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கையெழுத்து எனத் தேவையான அனைத்து ஒப்புதலும் பெற்றுவிட்டது அமெரிக்காவின் ‘ரஷ்ய தடைச் சட்டம்’.இந்தச் சட்டத்தின் மூல... மேலும் பார்க்க