செய்திகள் :

இன்னும் 7 நாள்களில் ஹார்முஸ் நீர்ச்சந்தி திறக்குமா? அமெரிக்காவில் ஈரான் குழு! விரைவில் குட் நியூஸ்?

post image

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஒரு வாரமாகவே தொடர்ந்து சரிந்து வருகிறது.

இப்போது சர்வதேச சந்தையில் WTI கச்சா எண்ணெய் 90 டாலர் அருகே வர்த்தகமாகி வருகிறது... Brent கச்சா எண்ணெய் 99-100 டாலர் என ஒரு பீப்பாவிற்கு வர்த்தகமாகி வருகிறது.

தற்போது மேலும் இந்தக் கச்சா எண்ணெய் விலைக்கு ஒரு குட் நியூஸ் கிடைத்துள்ளது.

ஈரான் சமீபத்தில் அமெரிக்காவிடம் 7 கோரிக்கைகளை வைத்துள்ளது. அது நிறைவேற்றப்பட்டால் ஹார்முஸ் நீர்ச்சந்தி திறக்கப்படும் என்று கடந்த வார இறுதியில் ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் காலிபாப் கூறியிருந்தார்.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

7 நாள்களுக்குள்...

தற்போது Kyodo என்னும் ஜப்பான் செய்தி நிறுவனத்தின், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர், “அமெரிக்கா ராணுவ அழுத்தத்தைக் குறைப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை எடுத்தால், அடுத்த ஏழு நாள்களுக்குள் ஹார்முஸ் நீர்ச்சந்தியை ஈரான் திறக்கும்” என்று தகவல் தெரிவித்துள்ளார்.

ஹார்முஸ் நீர்ச்சந்தி உலக எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய பாதை. இது மூடப்பட்டதுதான் எண்ணெய் விலை உயர்விற்கும், தட்டுப்பாட்டிற்கும் மிக முக்கிய காரணம்.

ஆகையால், ஹார்முஸ் நீர்ச்சந்தி திறந்து, அங்கே நின்றுகொண்டிருக்கும் எண்ணெய் டேங்கர்களின் போக்குவரத்து சரியானால் கச்சா எண்ணெய் விலையும் பழைய நிலைக்குத் திரும்பும்... தட்டுப்பாடும் சரியாகும்.

அமெரிக்காவில் ஈரான்!

இன்று அமெரிக்காவில்தான் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் இருக்கிறார். ஐக்கிய நாடுகளின் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியூயார்க் சென்றிருக்கிறார்.

ஆனால், இவர் அமெரிக்க அதிபர் ட்ரம்பைச் சந்திக்கும் எந்தத் திட்டமும் இல்லை.

ஆனால், அங்கே ஈரான் அதிகாரிகளுக்கும், அமெரிக்க அதிகாரிகளுக்கும் கிட்டத்தட்ட மூன்று மணிநேரப் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. அந்தப் பேச்சுவார்த்தை நன்றாகவே இருந்திருக்கிறது.

இதை ட்ரம்பே உறுதி செய்திருக்கிறார்.

இதையெல்லாம் வைத்து ஹார்முஸ் நீர்ச்சந்தி விவகாரத்தில் சீக்கிரம் விடிவுகாலம் பிறக்கும் என்று நம்பலாம்.

`இடைத்தேர்தல்; இணைந்த கைகள் வெற்றி' - தூத்துக்குடியில் பரபரப்பைக் கிளப்பிய விஜய் - அஜித் போஸ்டர்!

எம்.ஜி.ஆர்- சிவாஜி, ரஜினி- கமல் ஆகிய ஹீரோக்களின் வரிசையில் நடிகர்களான விஜய்- அஜித் திரையுலகில் முன்னணில் இருந்த காலக்கட்டத்தில் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளின்போது இருவரின் படங்களும் ஒரே நேரத்தில்... மேலும் பார்க்க

ECI `பல உத்தரவுகள் எங்கள் அனுமதி இன்றியே வெளியாகின்றன'- SIR விவகாரத்தில் தேர்தல் ஆணையர்கள் அதிருப்தி

இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) நாடு முழுவதும் மேற்கொண்ட ‘சிறப்பு தீவிர திருத்தம்’ (SIR) நடவடிக்கையின்போது, சுமார் 1.3 கோடி வாக்காளர் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இது பெரிய பொது விவாதத்தை... மேலும் பார்க்க

பாலியல் வழக்கு; ``தவெகவினருக்காக மட்டும் 'Compromise' செய்துகொள்கிறாரா முதல்வர்?" - டிடிவி தினகரன்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களில் அடுத்தடுத்து சிக்கும் தவெக நிர்வாகிகள் குறித்து அமமுக தலைவர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டிருக்கு... மேலும் பார்க்க

GEM வீரமணி வழக்கு: ``அரசியல்வாதிகளையும் காவல்துறையையும் விசாரிக்க வேண்டும்" - அண்ணாமலை வலியுறுத்தல்

GEM கிரானைட்ஸ் உரிமையாலர் வீரமணி மீதான போக்சோ வழக்கில் ஆரம்பத்தில் தமிழ்நாடு காவல்துறை காட்டிய அலட்சியமும், நீதிமன்ற தலையீட்டிற்குப் பின் எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகளும் அதிகார வர்க்கத்தின் பின்னணிய... மேலும் பார்க்க

"IIT-களில் 45 மாணவர்கள் தற்கொலை; 62%க்கும் மேல் SC/ST/OBC மாணவர்கள்" - மாணிக்கம் தாகூர் கண்டனம்

"SC/ST/OBC மாணவர்களின் பாதுகாப்பு, சமத்துவம் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்ய மோடி அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?" என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியிருக்கிறார்.... மேலும் பார்க்க

"ரஷ்ய எண்ணெய்க்காக அமெரிக்கா இந்தியா மீது வரி விதிப்பதற்கு முன் யோசிக்க வேண்டும்.!" - JP Morgan CEO

அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழ்சபை ஒப்புதல், மேல்சபை ஒப்புதல், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கையெழுத்து எனத் தேவையான அனைத்து ஒப்புதலும் பெற்றுவிட்டது அமெரிக்காவின் ‘ரஷ்ய தடைச் சட்டம்’.இந்தச் சட்டத்தின் மூல... மேலும் பார்க்க