செய்திகள் :

"ஏ.ஆர்.எஸ் கார்டன் எங்களுக்கு எம்.ஜி.ஆர் இலவசமாகக் கொடுத்தது கிடையாது" - நடிகை அம்பிகா ஓப்பன் டாக்

post image

நடிகை அம்பிகா மீது அவரது சகோதரியும் நடிகையுமான ராதா செக் மோசடி புகார் ஒன்றை சில முன்புகளுக்கு முன்பு கொடுத்திருந்தார்.

அந்தப் புகாரில் 46 கோடி ரூபாய் காசோலை மோசடி செய்ததாக அம்பிகா மீது குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் நடிகை அம்பிகா இந்தக் குற்றச்சாட்டு குறித்து விகடனுக்கு எக்ஸ்க்ளுசிவ் பேட்டி அளித்திருக்கிறார்.

நடிகை ராதா
நடிகை ராதா

அந்தப் பேட்டியில் பேசியிருக்கும் அம்பிகா, "அம்மா இறப்பதற்கு முன்பே இந்தச் சொத்து பிரச்னை ஆரம்பமாகிவிட்டது. என் அம்மாவை எதிர்த்து நான் எந்தக் கேள்வியும் கேட்டதில்லை.

அம்மா இறந்தப் பிறகு சொத்தைப் பிரிப்பதற்கு சரி என்று சொன்னவர்கள் அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பேசுவதற்கு நிறைய முறை முயற்சி செய்தோம்.

ஆனால் அந்தத் தரப்பில்(ராதா) இருந்து சரியான எந்த ஒரு பதிலும் இல்லை. அதன் பிறகு சட்டப்படி இந்தப் பிரச்னையை அணுகினோம்.

சின்ன ஒரு ஷேர்.. அதை எனக்கு கொடுத்தால் என்ன?. என் வீட்டில் வைத்துவிட்டு சென்ற செக்கை நானே திருடுவேனா?

நடிகை அம்பிகா
நடிகை அம்பிகா

அவர்கள் தான் அந்த செக்கை எனக்கு கையொப்பமிட்டு கொடுத்தார்கள்.

ஏ.ஆர்.எஸ் கார்டன் எங்களுக்கு எம்.ஜி.ஆர் இலவசமாகக் கொடுத்தது கிடையாது. தேவர் கம்பெனி பிலிம்ஸில் எங்கள் அம்மா காசு கொடுத்து வாங்கிய இடம். கஷ்டப்பட்டு உழைத்த பணத்தில் வாங்கிய இடம் அது" என்று குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளித்திருக்கிறார்.

முழு வீடியோவைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

"இந்த சமயத்தில் விஜயகாந்த் சார் இருந்திருக்கலாம், அவர் இருந்திருந்தால்.!" - நடிகை அம்பிகா கண்ணீர்

நடிகை அம்பிகா மீது அவரது சகோதரியும் நடிகையுமான ராதா செக் மோசடி புகார் ஒன்றை சில முன்புகளுக்கு முன்பு கொடுத்திருந்தார். அந்தப் புகாரில் 46 கோடி ரூபாய் காசோலை மோசடி செய்ததாக அம்பிகா மீது குற்றச்சாட்டை ம... மேலும் பார்க்க

“பெரிய பெரிய ஹீரோக்கள் எல்லாம் தேடி அலையும் SUBJECT இது..!"- ‘மண்டாடி’ படக்குழுவைப் பாராட்டிய கமல்

நடிகர் சூரியின் 'மண்டாடி’ படத்தைப் பார்த்து படக்குழுவினரை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியிருக்கிறார். மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், சூரி, சத்யராஜ், மஹிமா நம்பியார், சுஹாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான '... மேலும் பார்க்க

பெண்டிங்கில் சாய் `இசையில்' முதல் படம் `டு' பிரமாண்ட Pan India படம் - ராகவா லாரன்ஸின் பிஸி லைன்அப்!

ஹாரர் படங்களின் மூலம் பேய்த்தனமான வெற்றிகளை குவித்து வந்த ராகவா லாரன்ஸ், அடுத்து புராண கதைகளின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். அதன் முன்னோட்டமாக 'மஹாவீர் கர்ணா'வை அறிவித்திருக்கிறார்கள். பூஜ... மேலும் பார்க்க

The Dark Heaven: "அப்படி கமென்ட் பண்ணவங்களுக்கு இந்த ஆக்ஷன்ல பதில் சொல்ல விரும்புறேன்!" - பிரதீப்

இயக்குநர் பாலாஜி இயக்கத்தில், நடிகர்கள் சித்து, ரித்விகா, 'பிக் பாஸ்' தர்ஷிகா ஆகியோர் நடிப்பில் உருவான படம் 'தி டார்க் ஹெவன்'. இந்தப் படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. The Dark Heave... மேலும் பார்க்க

"இந்தத் தேடலில் நிறைய அவமானங்களைச் சந்தித்திருக்கிறேன்; தூக்கம் இல்லாத நாள்கள்..!"- சித்து எமோஷனல்

இயக்குநர் பாலாஜி இயக்கத்தில், நடிகர்கள் சித்து, ரித்விகா, 'பிக் பாஸ்' தர்ஷிகா ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'தி டார்க் ஹெவன்'. இந்தப் படத்தின் வெற்றி விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்ற... மேலும் பார்க்க

இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு சாதனை; ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கிடைத்த அரிய கௌரவம்!

ஒரு நாட்டுடைய பாராளுமன்ற மன்றத்தில் பிற நாட்டு இசைக் கலைஞருக்குச் சிறப்பு அங்கீகாரம் அளிக்கப்படுவது உலக வரலாற்றிலேயே மிக அரிதான நிகழ்வு. தனது முதல் படமான அன்னக்கிளி (1976) மூலம் திரையிசையில் காலடி எடு... மேலும் பார்க்க