செய்திகள் :

'பெருமையால் அழுகிறேன்..!'- புற்றுநோயை வென்று கதாநாயகியான வளர்ப்பு மகள்; நெகிழ்ந்த விவேக் ஓபராய்

post image

பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயால் சிறுவயதில் தத்தெடுக்கப்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சஹாரா ஷா தற்போது அதில் இருந்து மீண்டு வந்து தனது முதல் நேபாளி திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

தன் வளர்ப்பு மகளின் இந்த வளர்ச்சியைக் கண்டு எமோஷனலாகப் பேசியிருக்கும் விவேக் ஓபராய், "இது எனக்கு மிகவும் பெருமையான ஒரு தருணம். உன் திரையுலகப் பயணத்தில் நீ உச்சியைத் தொட வேண்டும் என்று விரும்புகிறேன். கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்.

வளர்ப்பு மகளுடன் விவேக் ஓபராய்
வளர்ப்பு மகளுடன் விவேக் ஓபராய்

நீ ஒரு வெற்றியாளர் என்பதை எப்போதும் மறந்துவிடாதே; புற்றுநோயை எதிர்த்துப் போராடி வென்று, இன்று வாழ்க்கையில் சாதனை படைத்திருக்கிறாய். நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. பெருமையால் அழுகிறேன்.

இரண்டரை வயதில் சிவந்த கண்களுடனும், வெளிறிய முகத்துடனும் புற்றுநோயை எதிர்த்துப் போராடி கீமோதெரபி சிகிச்சை பெற்ற ஒரு சிறுமியாகத்தான் அவளை நான் பார்த்தேன். ஆனால் அவளிடம் ஒரு போராட்டக் குணம் இருந்தது.

விவேக் ஓபராய்
விவேக் ஓபராய்

அவள் என் விரலை பிடித்த விதத்திலேயே அவள் நிச்சயம் வெல்வாள் என்று எனக்குத் தெரியும். அவளுக்காக தினமும் பிரார்த்தனை செய்தேன். இன்று அவள் புற்றுநோயில் இருந்து முற்றிலும் குணமடைந்து, தன் கடின உழைப்பிற்கான பலனைப் பெறுகிறாள். அவளை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.

Radhika Apte: "அதனால் 4 நாள்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை!" - ராதிகா அப்தே

நடிகை ராதிகா ஆப்தே நடிப்பில் இப்போது 'லஸ்ட் ஸ்டோரீஸ் 3' திரைப்படம் வெளியாகியிருக்கிறது. ராதிகா ஆப்தே | Radhika Apteதனது திரைப்பயணத்தில் எதிர்கொண்ட மிகவும் அதிர்ச்சிகரமான அனுபவம் ஒன்றைக் குறித்து சமீபத... மேலும் பார்க்க

பெண் மேலாளரின் துப்பட்டாவில் முகத்தைத் துடைத்த ஷாருக்கான்; என்ன சொல்கிறார்கள் நெட்டிசன்கள்?

மும்பையில் தற்போது விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. மும்பையில் உள்ள விநாயகர்களில் லால்பாக் ராஜா மிகவும் பிரபலம் ஆகும். இந்த விநாயகரைத் தரிசிக்க பாலிவுட் பிரபலங்கள், அரசியல்வாதி... மேலும் பார்க்க

'துவா'வுக்கு சகோதரி கிடைத்துவிட்டாள்: தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் தம்பதிக்கு மீண்டும் பெண் குழந்தை

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிகர் ரன்வீர் சிங்-ஐ காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கிறார். இரண்டாவதாக தீபிகா படுகோனே மீண்டும் கர்ப்பமாக இருந்தார். கடந்த ஏப்ரல்... மேலும் பார்க்க

சுஷாந்த் சிங் மேலாளர் திஷா சாலியன் மரண வழக்கு: "அவரை எனக்கு தெரியாது" - ஆதித்ய தாக்கரே திட்டவட்டம்

மும்பையில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ரஜபுத் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவரிடம் மேலாளராக இருந்த திஷா சாலியன் அதே ஆண்டு ஜூன் 8ம்... மேலும் பார்க்க

கத்ரீனா கைஃப்: பிரசவத்திற்குப் பின் எதிர்கொண்ட உருவக் கேலி; ₹350 கோடி பிராண்ட் மூலம் பதிலடி!

ஒரு பெண்ணின் அடையாளம் என்பது அவரது உழைப்பு, தொழில் முனைவுத் திறன், சாதனைகள் ஆகியவற்றில் அடங்கியுள்ளதா அல்லது அவர் காட்டும் உடல் எடையிலும் தோற்றத்திலும் அடங்கியுள்ளதா? பாலிவுட் திரையுலகில் இருபது ஆண்டு... மேலும் பார்க்க

அமிதாப் பச்சன் காட்டம்: வலைப்பதிவைத் திரித்து, போலிச் செய்திகளாகக் கூறும் ஊடகங்களுக்கு ஆவேசப் பதில்

இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை அமிதாப் பச்சன். சமூக வலைத்தளங்கள் பிரபலமாவதற்கு முன்பிருந்தே கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாகத் தடையின்றித் தினமும் நள்ளிரவில் தனது தனிப்பட்ட வலைப்பதிவில் (Blog) ... மேலும் பார்க்க