செய்திகள் :

ஜெம் வீரமணி வழக்கு: ``தொடர்புடைய குற்றவாளிகளும், துணைபோன முந்தைய ஆட்சியாளர்களும்"- சீமான் காட்டம்!

post image

பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணியையும், பின்புலத்தில் உடந்தையாக இருந்த குற்றவாளிகளையும் கண்டறிந்து, விசாரணையையும், வழக்கையும் துரிதமாக நடத்தி, மரணத்தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``சமூகத்தில் தொழிலதிபராக அறியப்பட்ட ஜெம் வீரமணி நிகழ்த்திய பாலியல் குற்றங்களும், அதுதொடர்பாக அடுத்தடுத்து வரும் செய்திகளும் பேரதிர்ச்சி தருகின்றன. உலகையே அதிர வைத்த எப்ஸ்டீன் கோப்புகள் போல, பெண் குழந்தைகள் மீது நிகழ்த்தப்பட்ட கோரப் பாலியல் வன்முறைகள் தமிழ்நாட்டையே உறைய வைத்திருக்கின்றன. பெரும் அதிர்வை நாடெங்கிலும் ஏற்படுத்தியிருக்கின்றன.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

கல்விக்கு உதவி செய்வதாகக் கூறி, விளிம்பு நிலையிலிருக்கும் பெண் பிள்ளைகளைக் குறிவைத்து, நடத்தப்பட்ட பாலியல் குற்றங்கள் ஒட்டுமொத்தச் சமூகத்தையும் வெட்கித் தலைகுனியச் செய்திருக்கிறது.

முந்தைய திமுகவின் ஆட்சியிலேயே ஜெம் வீரமணி மீது ஆதாரத்தோடு புகார் அளிக்கப்பட்டபோதிலும் வழக்கு மட்டும் தொடுத்துவிட்டு, கைதுசெய்யாதுவிட்டதும், போதிய ஆதாரங்கள் இல்லையெனக் கூறி, நீதிமன்றத்தில் காவல்துறை கையைவிரித்து, வழக்கை நீர்த்துப் போகச் செய்ய முனைந்ததும் கடும் கண்டனத்திற்குரியது.

பெண் குழந்தை வன்கொடுமை செய்யப்படும் காணொளி ஆதாரம் சமர்பிக்கப்பட்டும், ஜெம் வீரமணி உள்ளிட்டக் குற்றவாளிகளைக் கைதுசெய்யவும், அவர்களது முகத்திரையைக் கிழித்து, தண்டனையைப் பெற்றுத் தரவும் முயற்சி எடுக்காதது வெட்கக்கேடானது. மேடைகளில் பெண்ணுரிமை, சமத்துவம், விளிம்பு நிலை மக்களின் மேம்பாடு என்றெல்லாம் வாய்கிழியப் பேசிவிட்டு, பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்ற வழக்கில் முந்தைய திமுக அரசு காட்டிய மெத்தனப்போக்கானச் செயல்பாடு ஏற்கவே முடியாத கொடுந்துரோகமாகும். இவ்வன்கொடுமை வழக்கில், முந்தைய அரசின் காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையை ஏற்காது, நடவடிக்கை கோரிய சிறப்பு போக்சோ நீதிமன்றத்தின் செயல்பாடே வழக்கில் நீதியை நோக்கிய முன்நகர்வைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், விஜய்
எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின்

ஜெம் வீரமணி பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையைப் பல ஆண்டுகளாக செய்து வந்ததும், அதன் பின்புலத்தில் பெரும் வலைப்பின்னல் இருக்கிறது என்பதுவுமான செய்திகள் இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. இதில் தொடர்புடைய அத்தனைக் குற்றவாளிகளும், துணைபோன முந்தைய அரசின் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டுமென்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எண்ணவோட்டமாக உள்ளது.

பெண் குழந்தைகளுக்கு இவ்வளவு பெரிய பேரவலம் நிகழ்த்தப்பட்டது தெரிந்தும், நடவடிக்கை எடுக்காது அலட்சியம் காட்டி, குற்றவாளிகளைத் தப்பிக்கவிடத் துணிந்த காவல்துறை அதிகாரிகள் அத்தனைப் பேர் மீதும் துறைசார்ந்த நடவடிக்கையும், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டியது பேரவசியமானதாகும். இந்த வழக்கை அரசியல் சண்டையாகவோ, தேர்தல் காலப் பரப்புரைக் கூச்சலாகவோ மட்டும் பயன்படுத்திவிட்டு முடித்துவிடக் கூடாது. இந்த வழக்கின் பின்னணியில் உள்ள அனைத்து நபர்கள், உயர் அதிகாரிகள், இடைத்தரகர்கள் உள்ளிட்ட அனைவரையும் கண்டறிந்து, அவர்களைச் சட்டத்தின் முன்நிறுத்தி, அவர்களுக்கு அதிகபட்சத் தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும்.

வீரமணி போக்சோ வழக்கு
வீரமணி போக்சோ வழக்கு

ஏறக்குறைய அறுபது ஆண்டுகளாக மேலாகத் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வந்த திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுமே பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்வதில் முற்றிலுமாகத் தோற்றுப்போய்விட்டன. பொள்ளாச்சி பாலியல் கொடூரம், சிவகங்கைச்சம்பவம் முதல் நாள்தோறும் செய்தித்தாள்களில் வரும் பிஞ்சுக்குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் வரை தமிழகத்தில் நிலவும் மிக மோசமான நிலையை எடுத்துக் காட்டுகின்றன. குற்றம் செய்தால் பணத்தையும், அதிகாரத்தையும், அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தி மிக இலகுவாகத் தப்பித்துவிடலாம் என்ற எண்ணமே ஜெம் வீரமணி போன்றவர்கள் துளியும் பயமின்றி, இத்தகையக் குற்றங்களில் ஈடுபடக் காரணமாக அமைந்திருக்கிறது.

ஒரு தொழிலதிபர் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பெண் குழந்தைகளைப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார் என்பது எவ்வளவு மோசமான ஒரு இழிநிலை? இந்த 40 ஆண்டுகாலத்தில் இங்கு ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களும், காவல்துறையினரும் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? பெண் குழந்தைகளின் பாதுகாப்பையே முழுமையாகக் கேள்விக்குறியாக்கிவிட்டு, வாக்கு வங்கி அரசியலுக்காகப் பெண்களைப் போற்றி மேடைகளில் பேசியதெல்லாம் எவ்வளவு போலித்தனமானது? என்பதை நாட்டு மக்கள் இனியாவது உணர்ந்துகொள்ள வேண்டும்.

சீமான்

திமுக, அதிமுக, தவெக எனும் மூன்று கட்சிகளுமே பெண்களுக்கு மாதா மாதம் தொகையை வழங்குவதை மட்டுமே தங்களது அதிகபட்சமான பெண்ணுரிமைச்செயல்பாடு எனக் கருதிக் கொண்டு, செயல்படுவது மிக மோசமானப் போக்காகும். ஒரு பெண் வீட்டைவிட்டு வெளியே சென்று, பயமின்றிப் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்கான புறச்சூழலை உருவாக்குவதே அவர்களுக்கு அளித்திட வேண்டிய அடிப்படை உரிமையாகும். இத்தோடு, பெண்களுக்கும், பிஞ்சுக்குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் முற்றிலுமாக ஒழிய வேண்டுமானால், அக்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரணத்தண்டனையை உறுதி செய்ய வேண்டும்.

ஆகவே, பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணி, உடந்தையாக இருந்த குற்றவாளிகளான சாந்தி, மகேந்திரசிம்மன் மட்டுமின்றி, இதற்குப் பின்னால் வலைப்பின்னலில் இருக்கும் அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள் கொண்ட ஒட்டுமொத்த குற்றச் சங்கிலியையும் கண்டறிந்து, அத்தனைப் பேரையும் கைதுசெய்ய வேண்டும் எனவும், இவ்வன்கொடுமை வழக்கையும், விசாரணையையும் துரிதமாக நடத்தி, தொடர்புடைய குற்றவாளிகள் அத்தனைப் பேருக்கும் மரணத்தண்டனைக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

`தேர்தல் முடிவுகள் மீது கடும் சந்தேகங்களை எழுப்புகிறது; ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்!'- ஸ்டாலின்

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம் வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் 1.3 கோடி பெயர்கள் நீக்கப்பட்டது, 'படிவம் 6'-ல் விதிகளை மீறி மாற்றங்கள் செய்தது, தரவுத்தளத்தை மத்தியமயமாக்கியது, தேர்தல் ... மேலும் பார்க்க

`இடைத்தேர்தல்; இணைந்த கைகள் வெற்றி' - தூத்துக்குடியில் பரபரப்பைக் கிளப்பிய விஜய் - அஜித் போஸ்டர்!

எம்.ஜி.ஆர்- சிவாஜி, ரஜினி- கமல் ஆகிய ஹீரோக்களின் வரிசையில் நடிகர்களான விஜய்- அஜித் திரையுலகில் முன்னணில் இருந்த காலக்கட்டத்தில் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளின்போது இருவரின் படங்களும் ஒரே நேரத்தில்... மேலும் பார்க்க

இன்னும் 7 நாள்களில் ஹார்முஸ் நீர்ச்சந்தி திறக்குமா? அமெரிக்காவில் ஈரான் குழு! விரைவில் குட் நியூஸ்?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஒரு வாரமாகவே தொடர்ந்து சரிந்து வருகிறது.இப்போது சர்வதேச சந்தையில் WTI கச்சா எண்ணெய் 90 டாலர் அருகே வர்த்தகமாகி வருகிறது... Brent கச்சா எண்ணெய் 99-100 டாலர் எ... மேலும் பார்க்க

ECI `பல உத்தரவுகள் எங்கள் அனுமதி இன்றியே வெளியாகின்றன'- SIR விவகாரத்தில் தேர்தல் ஆணையர்கள் அதிருப்தி

இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) நாடு முழுவதும் மேற்கொண்ட ‘சிறப்பு தீவிர திருத்தம்’ (SIR) நடவடிக்கையின்போது, சுமார் 1.3 கோடி வாக்காளர் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இது பெரிய பொது விவாதத்தை... மேலும் பார்க்க

பாலியல் வழக்கு; ``தவெகவினருக்காக மட்டும் 'Compromise' செய்துகொள்கிறாரா முதல்வர்?" - டிடிவி தினகரன்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களில் அடுத்தடுத்து சிக்கும் தவெக நிர்வாகிகள் குறித்து அமமுக தலைவர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டிருக்கு... மேலும் பார்க்க

GEM வீரமணி வழக்கு: ``அரசியல்வாதிகளையும் காவல்துறையையும் விசாரிக்க வேண்டும்" - அண்ணாமலை வலியுறுத்தல்

GEM கிரானைட்ஸ் உரிமையாலர் வீரமணி மீதான போக்சோ வழக்கில் ஆரம்பத்தில் தமிழ்நாடு காவல்துறை காட்டிய அலட்சியமும், நீதிமன்ற தலையீட்டிற்குப் பின் எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகளும் அதிகார வர்க்கத்தின் பின்னணிய... மேலும் பார்க்க