செய்திகள் :

திருமணம் செய்ய மறுத்த காதலன்; வீடியோ காலில் பேசிக்கொண்டிருக்கும்போது காதலி எடுத்த விபரீத முடிவு

post image

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த நிஷா என்ற பெண் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவர் தனது தோழி ஒருவருடன் தங்கி இருந்தார். அப்பெண் அமராவதியைச் சேர்ந்த 34 வயது வாலிபரைக் கடந்த பல ஆண்டுகளாகக் காதலித்து வந்தார்.

அந்த வாலிபர் புனேயில் பி.எச்.டி படித்துக்கொண்டிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த வாலிபர் தனது நண்பர் ஒருவரை அழைத்துக்கொண்டு நிஷாவின் தாயாரைச் சந்தித்துப் பேசினார். நிஷாவைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.

நிஷாவின் தாயாரும் இதற்கு சம்மதம் தெரிவித்தார். ஆனால் அந்த வாலிபரின் பெற்றோர் இத்திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து அந்த வாலிபர் நிஷாவிடம் தெரிவிக்காமல் தொடர்ந்து உறவைத் தொடர்ந்து வந்தார். ஒவ்வொரு முறையும் நிஷா திருமணம் குறித்து பேசும்போது எதாவது காரணத்தைச் சொல்லி தட்டிக்கழித்து வந்தார்.

ஒரு கட்டத்தில் திருமணம் செய்ய முடியாது என்று அந்த வாலிபர் நிஷாவிடம் தெரிவித்துவிட்டார்.

சம்பவத்தன்று அப்பெண் தனது காதலனுக்கு வீடியோ கால் செய்து பேசிக்கொண்டிருந்தார். திருமணம் செய்யும்படி கேட்டார். ஆனால் அந்த வாலிபர் திருமணம் செய்ய முடியாது என்று தெரிவித்தார். இதனால் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று நிஷா தெரிவித்தார். ஆனால் அதனைத் தடுத்து நிறுத்த அந்த வாலிபர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நிஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்த பிறகும் 23 நிமிடம் தொடர்ந்து வீடியோ கால் ஓடிக்கொண்டிருந்தது. நிஷா திருமணம் செய்யும்படி நிர்ப்பந்தம் செய்ததால் தன்னிடம் இருக்கும் ஆட்சேபகரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகத்தில் வெளியிட்டு விடுவேன் என்று அந்த வாலிபர் மிரட்டியதாகவும், இதனால் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டதாகவும், வீடியோ காலில் இருந்தபோதும் தற்கொலையைத் தடுத்து நிறுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நிஷாவின் பெற்றோர் போலீஸில் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் புகாரைத் தொடர்ந்து நிஷாவின் காதலனைக் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேறொருவருடன் நெருக்கம்; விஷம் கொடுத்து மாணவியை கொன்று `ஸ்கெட்ச்' போட்ட பேராசிரியர் சிக்கியது எப்படி?

தெலங்கானாவில் உள்ள நஸ்பூர் என்ற இடத்தில் இருக்கும் பால்டெக்னிக்கில் பேராசிரியராக இருப்பவர் நவீன் குமார். இவர் பணியாற்றிய பாலிடெக்னிக்கில் தந்திரா (20) என்ற மாணவி படித்து வந்தார். அவரும் நவீன் குமாரும்... மேலும் பார்க்க

ரூ.10,000 சம்பள பாக்கி; ரூ.150-க்கு பெட்ரோல் வாங்கி, ரூ.24 கோடி மதிப்பிலான பொருள்களை எரித்த தொழிலாளி

குஜராத்தில் உள்ள சூரத்தில் ஷ்யாம் சங்கினி ஜவுளி சந்தை என்கிற சந்தை இருக்கிறது.அங்கே உள்ள 639-ம் எண் கடையில், கடந்த ஏப்ரல் மாதம் வினோத் பண்டிட் சாவ்லே கணக்காளராகச் சேர்ந்துள்ளார். ஆனால், அந்த வேலை அவரு... மேலும் பார்க்க

சாதி பாகுபாட்டால் IIT Bombay மாணவர் தற்கொலை; "அவனிடம் நான் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது" - தந்தை

ஐ.ஐ.டி பாம்பேயில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் மாணவர் சாஹில் வாகோடே.இரண்டாம் ஆண்டு மிட் செமஸ்டர் தேர்வின்போது, ChatGPT பயன்படுத்தி தேர்வறையில் பேராசிரியரிடம் இவர் மாட்டியதாகக் கூறப்படுகிறது.... மேலும் பார்க்க

தீய சக்தியை விரட்ட சடங்கு; பூசாரிகளைச் சுட்டுக்கொன்ற கணவன்; மனைவி, மகனுக்கு நேர்ந்த கொடூரம்

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கர் நகரைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் மாலை 6 மணியளவில் வீடு திரும்பியபோது, ​​அவரது மனைவி பபிதா சிங் (32), பூசாரிகள் மகேந்திர பதக் (60) மற்றும் அகிலேஷ் மிஸ்ரா (50) ஆகிய இர... மேலும் பார்க்க

சேகர் ரெட்டி வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் திருட்டு; பணிப்பெண்கள் கைது; நடந்தது என்ன?

வேலூர் மாவட்டம், காட்பாடி உட்கோட்டத்துக்கு உட்பட்ட விருதம்பட்டு காவல் நிலையத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீடு உள்ளது. இந்த வீட்டில் நம்பத் தகுந்த பணியாட்... மேலும் பார்க்க

TVK: வார்டு செயலாளர் பதவி பறிப்பு; தற்கொலை செய்த தவெக நிர்வாகி; மாவட்ட செயலாளர் மீது மனைவி புகார்

ராமேஸ்வரம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பரந்தாமன். முன்னாள் ராணுவ வீரரான இவர் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின் வெளிநாடு சென்று வேலை பார்த்து வந்தார். இவருக்கு தேவகி என்ற மனைவியும், இரு குழந்தை... மேலும் பார்க்க