செய்திகள் :

முதல்வரின் லண்டன் பயணம்: “அறுவை சிகிச்சையை முன்பே திட்டமிட்டேன்; ஆனால்...” - அமைச்சர் கீர்த்தனா

post image

கடந்த செப்டம்பர் 10-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை தொழில்முறை பயணத்திற்காக லண்டன் சென்றிருந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.

‘முதலீட்டை ஈர்ப்பதற்காக’ என்று கூறப்பட்ட இந்தப் பயணத்தில் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா இல்லாதது விமர்சனங்களைக் கிளப்பியது.

அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று பின்னர் கூறப்பட்டாலும், அது குறித்த எந்தத் தெளிவான விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில், தான் ஏன் லண்டன் செல்லவில்லை என்பது குறித்து கீர்த்தனா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் கீர்த்தனா
அமைச்சர் கீர்த்தனா

என்ன பிரச்னை?

“கடந்த சில நாள்களாக, மாண்புமிகு முதலமைச்சரின் லண்டன் பயணத்தின்போது நான் கலந்துகொள்ளாதது குறித்தும், அதனைத் தொடர்ந்து எனது உடல்நலம் குறித்தும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. உண்மைகளை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்வது அவசியம் என நான் கருதுகிறேன்.

செப்டம்பர் முதல் வாரத்தில், எனக்குக் கடந்த காலத்தில் ஏற்பட்ட ஒரு காயத்திற்காகப் பொருத்தப்பட்ட பழைய இம்ப்ளான்ட் காரணமாக வலியும் அசௌகரியமும் ஏற்படத் தொடங்கின.

மருத்துவ ஆலோசனைக்குப் பிறகு, அது சிக்கல்களை ஏற்படுத்தத் தொடங்கியிருந்ததால், அந்த இம்ப்ளான்ட்டை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

முன்பே செய்துகொள்ள...

நான் ஆரம்பத்தில் இந்த அறுவை சிகிச்சையை முன்பே செய்துகொள்ளத் திட்டமிட்டிருந்தேன். ஆனால், செப்டம்பர் 9 அன்று ஹெச்டி ஹூண்டாய் குழுவினருடன் ஒரு முக்கியக் கூட்டம் திட்டமிடப்பட்டிருந்ததால், முதலில் அந்தப் பணியை முடித்துவிட முடிவு செய்தேன்.

செப்டம்பர் 10 அன்று எனக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன் பிறகு போதுமான ஓய்வும் மருத்துவப் பராமரிப்பும் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டேன்.

ஒருவரின் உடல்நலம் என்பது முற்றிலும் தனிப்பட்ட விஷயம் என்று நான் நம்புவதால், இதை முன்பே வெளிப்படுத்த வேண்டாம் எனத் தீர்மானித்தேன்.

கீர்த்தனா அறிக்கை
கீர்த்தனா அறிக்கை
கீர்த்தனா அறிக்கை
கீர்த்தனா அறிக்கை

மருத்துவமனையிலும், அதைத் தொடர்ந்து வீட்டிலும் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தபோது கூட, மாண்புமிகு முதலமைச்சரின் லண்டன் பயணம் தொடர்பான ஏற்பாடுகளையும் முதலீட்டுச் சந்திப்புகளையும் நான் தொடர்ந்து ஒருங்கிணைத்து வந்தேன்.

அறுவை சிகிச்சை முடிந்த நான்கே நாட்களில், நான் மீண்டும் பணிகளுக்குத் திரும்பினேன்.

மாநிலமே முதன்மை

நான் நலமாக மீண்டு வருகிறேன். தமிழக மக்கள் எனக்கு அளித்த பொறுப்பின் மீது மட்டுமே எனது முழு கவனமும் உள்ளது.

பொதுவாழ்க்கையில் விமர்சனங்கள் எப்போதும் இருக்கத்தான் செய்யும். மக்கள் சேவையில் இறங்கும்போது நாம் ஏற்றுக்கொள்ளும் பொறுப்பின் ஒரு பகுதிதான் அது.

ஒருவரின் தனிப்பட்ட உடல்நலம் குறித்த ஊகங்கள், அவர்களின் பொதுப் பணியை மதிப்பீடு செய்வதற்கு மாற்றாக ஒருபோதும் மாறக்கூடாது.

தமிழ்நாட்டுக்கு ஆற்ற வேண்டிய முக்கியமான பணிகள் இன்னும் நிறைய உள்ளன. முதலீடுகளைக் கொண்டுவர வேண்டும், வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், தொழில்துறைகளை வளர்க்க வேண்டும், நமது இளைஞர்களுக்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும்.

அங்குதான் எனது கவனம் இருக்க வேண்டும்.

எப்போதும் மாநிலமே முதன்மை. - தமிழ்நாடு!”

SIR சர்ச்சை: "பாஜக, RSS, தேர்தல் ஆணையம் ஆகியவை தேசத் துரோகம் செய்துள்ளன” - ராகுல் காந்தி

நேற்று ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தித்தாள் தேர்தல் ஆணையம் குறித்துச் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் உள்ள தேர்தல் ஆணையர்களுக்கு இடையே அதிருப்தி நிலவுகிறது என்று கூறப்ப... மேலும் பார்க்க

"ஈரானை அழித்துவிடுவேன்"- ட்ரம்ப் பேச்சு; 'பகவந்த் கேசரி' பாலய்யாவை வைத்து ட்ரம்பை கலாய்க்கும் ஈரான்

ஈரான் போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்க அதிபர் திரும்பத் திரும்பக் கூறி வருவது ஒன்றே - “ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் போடப்படும் அல்லது ஈரானை முற்றிலும் அழித்துவிடுவேன்” என்பதுதான்.நேற்று முன்தினம் (செப்... மேலும் பார்க்க

அரசுப்பேருந்து வாங்க ரூ.40 லட்சம் வழங்கிய தொழிலதிபர்; "வரலாற்றில் முதன்முறை"- கேரள முதல்வர் பாராட்டு

கேரளத்தில் பொதுப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக, அரசின் 100 நாள் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக பேருந்துகளை ஸ்பான்சர் செய்யும் வாய்ப்பை கே.எஸ்.ஆர்.டி.சி ஏற்படுத்தி உள்ளது. கே.எஸ்.ஆர்.டி.சி ச... மேலும் பார்க்க

``ஈரானைத் தவிர்க்க ‘IMEC’ பொருளாதாரப் பாதை" - முழு ஆதரவு தெரிவித்த ட்ரம்ப்

மத்திய கிழக்கு நாடுகளின் மீது ஈரான் நடத்தி வரும் கடல்வழித் தாக்குதல்களை முறியடிக்கவும், வர்த்தகப் பாதைகளைப் பாதுகாக்கவும் 'இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதாரப் பாதை' (IMEC) திட்டத்திற்கு அமெ... மேலும் பார்க்க