செய்திகள் :

திருச்சி மாவட்டம், முத்தரசநல்லூர் குருவாயூரப்பன் கோயில்: திருமணத் தடை நீக்கும் ஆயில்ய நாக பூஜை!

post image

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கரூர் செல்லும் சாலையில் சுமார் 7 கி.மீ. தூரத்தில் உள்ளது முத்தரசநல்லூர் ரயில்வே கேட். அதைத் தாண்டினால், கடைவீதி அக்ரஹாரம் பகுதியில் குருவாயூரப்பன் கோயில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயில் குறித்த பல விஷயங்கள் சுவாரஸ்யமானவை.

மகா பெரியவர் ஒருமுறை முத்தரசநல்லூருக்கு விஜயம் செய்ததாகவும் அப்போது அவர் தங்கியிருந்த இடத்தை மிகவும் புனிதமானது என்று கருதி தான் வாங்கியதாகவும் தெரிவித்தார் தற்போது இந்தக் கோயில் அமைந்திருக்கும் இடத்தின் உரிமையாளர் சிவக்குமார்.

முத்தரசநல்லூர் குருவாயூரப்பன் கோயில்
முத்தரசநல்லூர் குருவாயூரப்பன் கோயில்

இந்த நிலையில், 2013-ம் ஆண்டு கனவில் காட்சிகொடுத்த மகா சுவாமிகள் புன்னகையோடு, “இந்த இடத்தில் ஒரு குளத்தை ஏற்பாடு செய். க்ஷேமமாய் இருப்பாய்” என்று உத்தரவிட்டார். 2015-ம் ஆண்டு அந்த முயற்சியில் இறங்கினார் சிவகுமார். அந்த ஆண்டு கடும் வறட்சி. நீர் கொண்டு சேர்ப்பது எப்படி என்று கவலைப்பட்டார் சிவகுமார்.

சிவக்குமார் பல ஆண்டுகளாக மாதம்தோறும் கேரளா சென்று குருவாயூரப்பனைத் தரிசனம் செய்து வருபவர். அந்த முறை குருவாயூர் சென்றவர், தன் மனக்கவலையை குருவாயூரப்பனிடம் இறக்கி வைத்துவிட்டு, அங்கிருந்த நம்பூதிரி ஒருவரிடமும் பகிர்ந்துகொண்டார்.

அதற்கு அந்த நம்பூதிரி, ''வேட்டைக்`கொருமகன் எனும் வழிபாடு செய்தால் தண்ணீர் பிரச்னை வராது’’ எனக் கூறினார்.

வேட்டைக்கொருமகன் வழிபாடு என்பது 12,008 தேங்காய்களை ஒருவரே தொடர்ந்து உடைக்கும் வழிபாட்டு முறை. சிவகுமாரின் அழைப்பின் பேரில் அதைச் செய்துவைக்க குருவாயூர் நம்பூதிரி முத்தரசநல்லூர் வந்தார். வழிபாடு சிறப்பாக முடிந்தது. அதற்கான பலனும் கிடைத்தது. மழைபெய்து குளம் நிரம்பியது. சிவகுமார் மகாபெரியவரின் கருணையை எண்ணி மகிழ்ந்தார்.

முத்தரசநல்லூர் குருவாயூரப்பன் கோயில்
முத்தரசநல்லூர் குருவாயூரப்பன் கோயில்

அந்த வைபத்தின்போது நம்பூதிரி `திடம்பு விக்ரஹம்’ ஒன்றை சிவகுமாருக்குப் பரிசளித்தார். அந்த விக்ரஹத்தை மகாபெரியவர் படத்துக்கு வலப்பக்கத்தில் வைத்து முறையாகப் பூஜை செய்துவந்தார் சிவகுமார். குருவாயூரப்பனுக்குத் தனியாக ஒரு சந்நிதி அமைக்கலாமா என்ற எண்ணமும் ஏற்பட்டது. இதற்காகப் பிரச்னம் பார்க்க ஏற்பாடு செய்தார். பிரச்னத்தில் பல தேவ ரகசியங்கள் வெளியாகின.

“ஸ்ரீசக்தி சங்கர நந்தவனத்தில் 18 தேவதைகள் வாசம் செய்கின்றன. ஸ்ரீகுருவாயூரப்பனும் ஸ்ரீபரமாசார்யரும் இப்பகுதி மக்களுக்கு அனுக்கிரகம் செய்ய இங்கு எழுந்தருளியுள்ளனர். எனவே இங்கே ஆலயம் அமைத்து உபதேவதைகளுக்கும் சந்நிதி ஏற்படுத்தி வழிபடுவதன் மூலம் இந்தப் பகுதியே சுபிட்சமாகும்” என்று உத்தரவு வந்தது.

சிவகுமார் உடனடியாக அந்த இடத்தில் கோயில் எழுப்ப ஏற்பாடுகளைச் செய்தார். அதன்படி அங்கே அற்புதமான குருவாயூரப்பன் திருக்கோயில் உண்டானது.

குருவாயூருக்குச் சென்று அந்தக் கிருஷ்ணனை தரிசனம் செய்த திருப்தி இங்கு தரிசனம் செய்வதன் மூலம் பக்தர்களுக்குக் கிடைத்துவிடுகிறது. எனவே தமிழகம் மட்டுமல்ல பல மாநிலங்களிலிருந்தும் இந்த ஆலயம் குறித்துக் கேள்விப்பட்டு வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள் பக்தர்கள்.

குருவாயூர் கோயிலில் என்ன பூஜை முறையோ அதுதான் இங்கும். காலை 6 மணிக்கு சந்நிதி திறக்கப்படும். காலை 6.15 மணி வரை நிர்மால்ய தரிசனம். காலை 6.15 சுவாமிக்கு அபிஷேகம், 6.45 மணிக்கு மலர் நிவேதம். 7 மணிக்குச் சின்னதாக ஒரு பூஜை. 9.30 மணிக்கு உச்சிக்கால பூஜை. அதையடுத்து 11 மணிக்கு சந்நிதி மூடப்படும்.

இங்கு கிருஷ்ண ஜயந்தி கோலாகலமாக நடைபெறும். அதேபோல கார்த்திகை மாதத்தில் ‘குருவாயூர் ஏகாதசி’யும் மிகவும் பிரசித்தம்.

முத்தரசநல்லூர் குருவாயூரப்பன் கோயில்
முத்தரசநல்லூர் குருவாயூரப்பன் கோயில்

விழாக்காலங்களான 33 நாள்களில் சுவாமி வெளிப்பிராகாரத்தில் உலா வருவார். இங்கு ஐயப்பனுக்கும் சந்நிதி இருப்பதால் நவம்பர் 15-ம் தேதி முதல் ஜனவரி 15-ம் தேதி வரை மண்டல கால பூஜையும் வெகு விமர்சையாக நடைபெறும். ஜனவரி 15-ம் தேதி மகரஜோதி தரிசனமும் அதை ஒட்டி விசேஷ பூஜைகளும் நடைபெறும். ஆவணி மாதத்தில் ஓணம் பண்டிகை இங்கு பத்துநாள் உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது.

மேலும் இங்கு வேட்டைக்கொருமன், கருப்பண்ண சுவாமி, பிள்ளையார், பக்கத்தி லேயே கிராம தேவியாக பராசக்தி ஆகியோருக்கும் சந்நிதி உள்ளது. மகா பெரியவா, சாயிபாபா போன்ற மகான் களும் இங்கே சந்நிதி கொண்டருள்கிறார்கள். எனவே இங்கு வந்து வேண்டும் பக்தர்களின் கோரிக்கைகள் யாவும் நிறைவேறுகின்றன என்கிறார்கள்.

இங்கு திருவோண பூஜை செய்வதால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இங்குள்ள நாக தெய்வங்களுக்கு மாதம்தோறும் ஆயில்ய நட்ச்சத்திர நாளில் நடைபெறும் நாக பூஜை விசேஷம். இதில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துகொண்டால், சர்ப்ப தோஷங்கள் தீர்வதோடு திருமணத் தடைகளும் நீங்கும்; நோய்கள் விலகும் என்கிறார்கள் பலன் கண்ட பக்தர்கள். மட்டுமன்றி குருவாயூர் போலவே சுற்று விளக்கு, துலாபாரம் ஆகிய வழிபாடு களையும் இந்த ஆலயத்தில் பக்தர்கள் செய்யலாம்.

வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை முத்தரசநல்லூர் சென்று குருவாயூரப்பனை வழிபட்டு வாருங்கள். குருவருளும் திருவருளும் நிச்சயம் கிடைக்கும்.

பாபநாசர் கோயில்: `பக்தர்கள் தானமாக வழங்கும் பசுக்கள் கேரளாவில் விற்பனை?' - அதிர்ச்சி குற்றச்சாட்டு!

நெல்லை மாவட்டம், பாபநாசம் தாமிரபரணிக் கரையோரத்தில் பிரசித்தி பெற்ற உலகம்மை சமேத பாபநாசர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் பரிகார ஸ்தலம் என்பதால், பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வரு... மேலும் பார்க்க

தஞ்சாவூர் மாவட்டம், தாராசுரம் சக்கராயி அம்மன் கோயில்: சுகப்பிரசவம் அருளும் அம்பிகை!

கும்ப கோணம்-தஞ்சாவூர் முக்கிய சாலையில் கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது தாராசுரம். இங்குள்ள ஐராவதேஸ்வரர் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது சக்கராயி கோயில். இந்த ஆலயத்தின் சிறப்புகள் அநேகம். இங்கு வழிபட்டால... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு ஸ்ரீசக்கரபாணி பெருமாள்: பிரச்னை தீர்க்கும் நெய்தீப வழிபாடு!

பெருமாளின் ஆயுதங்களில் முக்கியமானது சக்கரம். பெருமாளுக்கு என்ன பெருமை உண்டோ அது அவரின் சக்கரத்துக்கும் உண்டு என்பார்கள். அதனால்தான் அவரை சக்கரத்தாழ்வார் என்று போற்றும் வழக்கமும் இருக்கிறது. சக்கரத்தாழ... மேலும் பார்க்க

திருச்சி மாவட்டம், கோபுரப்பட்டி ஸ்ரீஆதிநாயகபெருமாள்: இவரை தரிசித்தால் வாழ்வில் உணவுப் பஞ்சமே வராது!

புரட்டாசியில் பெருமாள் வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதிலும் பழைமையான பெருமாள் ஆலயங்களைச் சென்று தரிசனம் செய்வது மிகவும் விசேஷம். அப்படி ஒரு தலம் தான் கோபுரப்பட்டி. திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர... மேலும் பார்க்க

திருப்பதி போக நேரமில்லையா? இங்கே போங்க... பிரச்னைகள் தீர்க்கும் மட்டைத் தேங்காய் பிரார்த்தனை!

புரட்டாசி என்றாலே பெருமாள் வழிபாடுதான். அதுவும் திருப்பதி பெருமாளை வழிபடுவது இந்த மாதத்தில் மிகவும் விசேஷம். திருப்பதியில் இந்த மாதம் முழுவதுமே கூட்டம் அதிகம் இருக்கும். எனவே திருப்பதி செல்லப் பலர் தய... மேலும் பார்க்க

நெல்லை: அழகியகூத்தர் சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம்; ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் | Photos

நெல்லை: தாமிரசபை இராஜவல்லிபுரம் செப்பறை ஸ்ரீ அழகியகூத்தர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் விழாமதுரை மீனாட்சி அம்மன் கோயில்: ரூ 32 கோடி திருப்பணி... 17 ஆண்டுகளுக்குப் பின் கோலாகல கும்பாபிஷேகம்! மேலும் பார்க்க