செய்திகள் :

OM: "ரஜினி சார் மீதான அளப்பரிய மரியாதையின் காரணமாக..." - தள்ளிப்போகும் 'ஓம்' படத்தின் ரிலீஸ்!

post image

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஓம்' திரைப்படம் அடுத்த மாதம் 16-ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

Dhanush - OM
Dhanush - OM

ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'ஜெயிலர் 2' திரைப்படமும் அக்டோபர் 15-ஆம் தேதி வெளியாகிறது. அதனால் 'ஓம்' படத்தின் வெளியீட்டை படக்குழுவினர் தள்ளி வைத்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக படக்குழுவினர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "இன்றைய காலக்கட்டத்தில், ஒரு திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியைத் தள்ளிவைப்பது என்பது பல சவால்களை உள்ளடக்கிய ஒன்றாகும்.

நாம் அனைவரும் இத்தனை ஆண்டுகளாக வியந்து பார்த்து, கொண்டாடிய நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரின் திரைப்படம், நமது திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதிக்கு முந்தைய நாளான அக்டோபர் 15-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

அவர் மீது கொண்டுள்ள அளப்பரிய மரியாதையின் காரணமாக, 'ஓம்' திரைப்படத்தின் வெளியீட்டைத் தள்ளிவைக்க முடிவு செய்துள்ளோம்.

OM - Release Date Postponed
OM - Release Date Postponed

அதேவேளையில், சூர்யா சாரின் திரைப்படமும் தீபாவளி வெளியீடாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு தீபாவளிக்கும் நமது திரைப்படம் வெளியாகாது.

அவர்களே தங்களது வெளியீட்டுத் தேதியை முதலில் அறிவித்தார்கள்.

பெரிய திரைப்படங்கள் தங்களுக்குள் பரஸ்பர புரிதலையும், ஒருவரது முடிவுக்கு மற்றவர் மதிப்பளிப்பதையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அதுவே சினிமாவுக்கும் திரைத்துறைக்கும் நல்லது என்றும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

நமது திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியை வெகு விரைவில் அறிவிப்போம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

"ஏ.ஆர்.எஸ் கார்டன் எங்களுக்கு எம்.ஜி.ஆர் இலவசமாகக் கொடுத்தது கிடையாது" - நடிகை அம்பிகா ஓப்பன் டாக்

நடிகை அம்பிகா மீது அவரது சகோதரியும் நடிகையுமான ராதா செக் மோசடி புகார் ஒன்றை சில முன்புகளுக்கு முன்பு கொடுத்திருந்தார். அந்தப் புகாரில் 46 கோடி ரூபாய் காசோலை மோசடி செய்ததாக அம்பிகா மீது குற்றச்சாட்டை ம... மேலும் பார்க்க

"இந்த சமயத்தில் விஜயகாந்த் சார் இருந்திருக்கலாம், அவர் இருந்திருந்தால்.!" - நடிகை அம்பிகா கண்ணீர்

நடிகை அம்பிகா மீது அவரது சகோதரியும் நடிகையுமான ராதா செக் மோசடி புகார் ஒன்றை சில முன்புகளுக்கு முன்பு கொடுத்திருந்தார். அந்தப் புகாரில் 46 கோடி ரூபாய் காசோலை மோசடி செய்ததாக அம்பிகா மீது குற்றச்சாட்டை ம... மேலும் பார்க்க

“பெரிய பெரிய ஹீரோக்கள் எல்லாம் தேடி அலையும் SUBJECT இது..!"- ‘மண்டாடி’ படக்குழுவைப் பாராட்டிய கமல்

நடிகர் சூரியின் 'மண்டாடி’ படத்தைப் பார்த்து படக்குழுவினரை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியிருக்கிறார். மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், சூரி, சத்யராஜ், மஹிமா நம்பியார், சுஹாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான '... மேலும் பார்க்க

பெண்டிங்கில் சாய் `இசையில்' முதல் படம் `டு' பிரமாண்ட Pan India படம் - ராகவா லாரன்ஸின் பிஸி லைன்அப்!

ஹாரர் படங்களின் மூலம் பேய்த்தனமான வெற்றிகளை குவித்து வந்த ராகவா லாரன்ஸ், அடுத்து புராண கதைகளின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். அதன் முன்னோட்டமாக 'மஹாவீர் கர்ணா'வை அறிவித்திருக்கிறார்கள். பூஜ... மேலும் பார்க்க

The Dark Heaven: "அப்படி கமென்ட் பண்ணவங்களுக்கு இந்த ஆக்ஷன்ல பதில் சொல்ல விரும்புறேன்!" - பிரதீப்

இயக்குநர் பாலாஜி இயக்கத்தில், நடிகர்கள் சித்து, ரித்விகா, 'பிக் பாஸ்' தர்ஷிகா ஆகியோர் நடிப்பில் உருவான படம் 'தி டார்க் ஹெவன்'. இந்தப் படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. The Dark Heave... மேலும் பார்க்க

"இந்தத் தேடலில் நிறைய அவமானங்களைச் சந்தித்திருக்கிறேன்; தூக்கம் இல்லாத நாள்கள்..!"- சித்து எமோஷனல்

இயக்குநர் பாலாஜி இயக்கத்தில், நடிகர்கள் சித்து, ரித்விகா, 'பிக் பாஸ்' தர்ஷிகா ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'தி டார்க் ஹெவன்'. இந்தப் படத்தின் வெற்றி விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்ற... மேலும் பார்க்க