செய்திகள் :

``தவெக வெற்றி பெறுவதால் எந்த ஆட்சி மாற்றமும் வரப்போவதில்லை" - சிபிஎம் சண்முகம்

post image

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. தவெக- ஆட்சி அமைக்க ஆதரவளித்த இடதுசாரிகட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன. இந்த நிலையில், மதுராந்தகத்தில் சிபிஎம் கட்சியின் வேட்பாளர் சுகந்திக்கு ஆதரவாக சிபிஎம் சண்முகம் பிரசாரம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில், ``இந்தத் தேர்தல் இயல்பாகவோ அல்லது இயற்கையாகவோ உருவானது அல்ல. மக்கள் மீது வன்முறையாகத் திணிக்கப்பட்ட ஒரு தேர்தல். கடந்த பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர், தான் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நாள்களிலேயே பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக கட்சிக்குத் தாவியதன் விளைவாலேயே இந்த இடைத்தேர்தல் வந்துள்ளது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

அதிமுக - திமுக இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதால் வெளியேறியதாக அவர் கூறும் காரணம் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. கொள்கை மாறுபாடு இருந்திருந்தால், அவர் பதவியை ராஜினாமா செய்யாமல் சுயேச்சையாகவே செயல்பட்டிருக்க முடியும். அரசியல் ஆதாயத்திற்காகப் பொறுப்பற்ற முறையில் ராஜினாமா செய்து, வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்த அத்தகைய வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்.

மீண்டும் மீண்டும் தேர்தலில் நின்று, வெற்றி பெற்ற பின் பொறுப்பின்றி ராஜினாமா செய்யும் இது போன்ற நபர்களின் நடவடிக்கைகளுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கடந்த பொதுத்தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இணைந்து களம் காண்கிறது. இவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே இடதுசாரிகளின் பிரதான முழக்கமாகும். தவெக ஆட்சி அமைப்பதற்கு அளிக்கப்பட்ட ஆதரவு தொடர்ந்தாலும், இந்த இரண்டு தொகுதிகளில் அவர்கள் வெற்றி பெறுவதால் எந்த ஆட்சி மாற்றமும் வரப்போவதில்லை. எனவே, சட்டமன்றத்தை சண்டை மன்றமாக மாற்றாமல், மக்களின் உண்மையான குரலாக ஒலிக்கும் மார்க்சிஸ்ட் மற்றும் இடதுசாரி சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்.

அமித் ஷா - ஞானேஷ் குமார்

தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரின் தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு மம்தா பானர்ஜி மற்றும் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட SIR நடவடிக்கைகளின் மூலம் 15 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்திய தேர்தல் வரலாற்றிலேயே இல்லாத வகையில் இந்த அநீதி நடந்துள்ளது.

மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களின் கருத்துக்களைப் புறக்கணித்து, ஞானேஷ்குமார் தன்னிச்சையாகச் செயல்பட்டுள்ளார் என்பதும், இது குறித்து மற்ற ஆணையர்கள் எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளதும் தற்போது அம்பலமாகியுள்ளது. தன்னாட்சி அமைப்பான தேர்தல் ஆணையத்தை மத்திய அரசின் கைப்பாவையாக மாற்றியதற்காக ஞானேஷ்குமார் உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

மோடி
மோடி

பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகிய மூவர் அடங்கிய குழுவே தேர்தல் ஆணையர்களை நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை மாற்றி அமைத்து, ஆளுங்கட்சியின் ஆதிக்கத்திற்கு வழிவகுத்ததே இத்தகைய குழப்பங்களுக்கும் மோசடிகளுக்கும் மூலக்காரணமாகும். எனவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் உடனடியாக புதிய தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட வேண்டும்." என்றார்.

`நான் இருக்கேன்' கையில் முத்தமிட்டு ஆறுதல் சொன்ன விஜய்; உருகிய வி.எஸ்.பாபு... 10 நிமிட சந்திப்பு!

75 வயதாகும் வி.எஸ்.பாபுவுக்கு சமீபத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். செப்.9-ம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், ... மேலும் பார்க்க

`தேர்தல் முடிவுகள் மீது கடும் சந்தேகங்களை எழுப்புகிறது; ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்!'- ஸ்டாலின்

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம் வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் 1.3 கோடி பெயர்கள் நீக்கப்பட்டது, 'படிவம் 6'-ல் விதிகளை மீறி மாற்றங்கள் செய்தது, தரவுத்தளத்தை மத்தியமயமாக்கியது, தேர்தல் ... மேலும் பார்க்க

ஜெம் வீரமணி வழக்கு: ``தொடர்புடைய குற்றவாளிகளும், துணைபோன முந்தைய ஆட்சியாளர்களும்"- சீமான் காட்டம்!

பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணியையும், பின்புலத்தில் உடந்தையாக இருந்த குற்றவாளிகளையும் கண்டறிந்து, விசாரணையையும், வழக்கையும் துரிதமாக நடத்தி, மரணத்தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட... மேலும் பார்க்க

`இடைத்தேர்தல்; இணைந்த கைகள் வெற்றி' - தூத்துக்குடியில் பரபரப்பைக் கிளப்பிய விஜய் - அஜித் போஸ்டர்!

எம்.ஜி.ஆர்- சிவாஜி, ரஜினி- கமல் ஆகிய ஹீரோக்களின் வரிசையில் நடிகர்களான விஜய்- அஜித் திரையுலகில் முன்னணில் இருந்த காலக்கட்டத்தில் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளின்போது இருவரின் படங்களும் ஒரே நேரத்தில்... மேலும் பார்க்க

இன்னும் 7 நாள்களில் ஹார்முஸ் நீர்ச்சந்தி திறக்குமா? அமெரிக்காவில் ஈரான் குழு! விரைவில் குட் நியூஸ்?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஒரு வாரமாகவே தொடர்ந்து சரிந்து வருகிறது.இப்போது சர்வதேச சந்தையில் WTI கச்சா எண்ணெய் 90 டாலர் அருகே வர்த்தகமாகி வருகிறது... Brent கச்சா எண்ணெய் 99-100 டாலர் எ... மேலும் பார்க்க

ECI `பல உத்தரவுகள் எங்கள் அனுமதி இன்றியே வெளியாகின்றன'- SIR விவகாரத்தில் தேர்தல் ஆணையர்கள் அதிருப்தி

இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) நாடு முழுவதும் மேற்கொண்ட ‘சிறப்பு தீவிர திருத்தம்’ (SIR) நடவடிக்கையின்போது, சுமார் 1.3 கோடி வாக்காளர் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இது பெரிய பொது விவாதத்தை... மேலும் பார்க்க