செய்திகள் :

"எடப்பாடியுடன் கூட்டணி வைத்தால் துணை முதல்வர் பதவி என்றார் ஆதவ் அர்ஜுனா" - ரகசியம் பகிர்ந்த சீமான்

post image

தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக களத்தில் உள்ள கார்த்திகாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று இரவு தொண்டர்கள் மத்தியில் பேசிய சீமான், "திராவிட கட்சிகளுக்கு எதிராக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி களத்தை உருவாக்கி வைத்திருந்தோம். தம்பி விஜய் அதை அறுவடை செய்துவிட்டார். தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை என்று எந்தப் போராட்டமும் அவர்கள் நடத்தியதில்லை.

சீமான்
சீமான்

மக்களின் பிரச்னைகளை மனதில் இருந்து பேச தெரியாதவர்கள் அவர்கள். குறிப்புகளை வைத்துக் கொண்டு பேசுபவர்கள் தலைவர்கள் கிடையாது. குறிக்கோளுடன் பேசுபவர்கள்தான் தலைவர்கள். ஆட்டுக்கு இருக்கும் மூளை கூட தமிழக வெற்றிக் கழகத்தில் இருப்பவர்களுக்குக் கிடையாது.

எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைத்தால் என்னை துணை முதலமைச்சர் ஆக்குவதாகச் சொன்னார் ஆதவ் அர்ஜுனா. நாங்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்பதால் வேளாண்துறை அமைச்சர் ஆக்குகிறோம் என்றார். எங்களுக்கு உடன்பாடு இல்லை என வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டோம்" என்றார்.

தாராபுரம்: "அதிமுக-திமுக கூட்டு சேர்ந்து எங்களுக்கு எதிராகச் சதி செய்கிறார்கள்" - தவெக சத்தியபாமா

தாராபுரம் தொகுதி த.வெ.க வேட்பாளர் சத்தியபாமாவிற்கு எதிராக தொகுதியில் நாளுக்கு நாள் பிரச்னை அதிகரித்து வருகிறது. காவல்துறையினர் பாதுகாப்புடன் வாக்கு சேகரிக்க சென்றாலும் அவருக்கு எதிரான நடவடிக்கைகளில் ம... மேலும் பார்க்க

தாராபுரம்: `விருப்பப்பட்டவர்கள் விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள்..!' - ஆவேசமான நிர்வாகிகள்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 6- ம் தேதி நடைபெற இருக்கிறது. வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். த.வெ.க சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ சத்... மேலும் பார்க்க

தாராபுரம்: திமுக நிர்வாகிகள் வீட்டில் ரூ.48 லட்சம் பறிமுதல்| தீவிர விசாரணையில் தேர்தல் பறக்கும் படை!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதியில் அக்டோபர்- 6- ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. தி.மு.க தரப்பு வேட்பாளராக வழக்கறிஞர் சுகன்யா களத்தில் ... மேலும் பார்க்க

தாராபுரம்: தவெக வேட்பாளருக்கு வலுக்கும் எதிர்ப்பு; போலீஸார் பாதுகாப்புடன் நடைபெறும் பிரசாரம்!

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 - ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பரப்புரையில் அரசியல் கட்சிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. தாராபுரம் ... மேலும் பார்க்க

"இடைத்தேர்தலைத் திணிப்பவர்களே தேர்தல் செலவையும் ஏற்க வேண்டும்" - தாராபுரத்தில் சீமான் ஆவேசம்

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 6 - ம் தேதியும் வாக்கு எண்ணிக்கை 9-ம் தேதியும் நடைபெற இருக்கின்றன. தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகின்றன... மேலும் பார்க்க

தாராபுரம்: தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மக்கள், பாதியில் நிறுத்தப்பட்ட தேர்தல் பிரசாரம்!

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 - ம் தேதி நடைபெற இருக்கிறது. எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க- வில் இணைந்த சத்யபாமாவை வேட்ப... மேலும் பார்க்க