செய்திகள் :

தாராபுரம்: "அதிமுக-திமுக கூட்டு சேர்ந்து எங்களுக்கு எதிராகச் சதி செய்கிறார்கள்" - தவெக சத்தியபாமா

post image

தாராபுரம் தொகுதி த.வெ.க வேட்பாளர் சத்தியபாமாவிற்கு எதிராக தொகுதியில் நாளுக்கு நாள் பிரச்னை அதிகரித்து வருகிறது.

காவல்துறையினர் பாதுகாப்புடன் வாக்கு சேகரிக்க சென்றாலும் அவருக்கு எதிரான நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்த வேட்பாளர் சத்தியபாமா, "தாராபுரம் தொகுதியில் எங்களுக்கு எதிர்ப்பு என்பது முழுக்க முழுக்க சித்தரிக்கப்பட்ட ஒன்று. நாங்கள் வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் எல்லாம் நான்கைந்து பேர் கொண்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் ரெடியாக இருக்கிறார்கள்.

திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான கேள்விகளைக் கேட்டு அதை வீடியோ எடுத்து பரப்புகிறார்கள். எங்களுக்கு எதிர்ப்பு இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். தாராபுரம் கிழக்கு பகுதிக்குச் சென்றிருந்தேன். அங்கு எங்களுக்கு மக்களின் ஆதரவு அமோகமாக இருக்கிறது.

த.வெ.க வேட்பாளர் சத்தியபாமா
த.வெ.க வேட்பாளர் சத்தியபாமா

ஆனால், எதிர்க்கட்சிகளுக்குத் தோல்வி பயம் வந்துவிட்டது. மக்கள் விரும்பும் வகையில் நல்ல ஆட்சி நடைபெற்று வருகிறது. அதன் காரணமாக இந்த இடைத்தேர்தலில் மக்கள் எங்களைத்தான் தேர்வு செய்ய இருக்கிறார்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாமல்தான் இப்படிச் செய்கிறார்கள்.

கடந்த மூன்று மாதங்களாக நான் இதே தொகுதியில்தான் இருக்கிறேன். மக்களின் தண்ணீர் பிரச்னைகள் குறித்து நேரில் சென்று பார்த்து வந்தேன். அப்போதெல்லாம் வராத பிரச்னை இப்போது வருகிறது என்றால் மக்களே புரிந்து கொள்ள வேண்டும்.

அ.தி.மு.க- தி.மு.க இந்த இரண்டு கட்சிகளும் கூட்டு சேர்ந்துக் கொண்டு திட்டமிட்ட இந்தச் சதியைச் செய்து வருகிறார்கள். தேர்தலில் நிச்சயம் மக்கள் பதில் சொல்வார்கள்" என்றார்.

"எடப்பாடியுடன் கூட்டணி வைத்தால் துணை முதல்வர் பதவி என்றார் ஆதவ் அர்ஜுனா" - ரகசியம் பகிர்ந்த சீமான்

தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக களத்தில் உள்ள கார்த்திகாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று இரவு தொண்டர்கள்... மேலும் பார்க்க

தாராபுரம்: `விருப்பப்பட்டவர்கள் விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள்..!' - ஆவேசமான நிர்வாகிகள்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 6- ம் தேதி நடைபெற இருக்கிறது. வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். த.வெ.க சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ சத்... மேலும் பார்க்க

தாராபுரம்: திமுக நிர்வாகிகள் வீட்டில் ரூ.48 லட்சம் பறிமுதல்| தீவிர விசாரணையில் தேர்தல் பறக்கும் படை!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதியில் அக்டோபர்- 6- ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. தி.மு.க தரப்பு வேட்பாளராக வழக்கறிஞர் சுகன்யா களத்தில் ... மேலும் பார்க்க

தாராபுரம்: தவெக வேட்பாளருக்கு வலுக்கும் எதிர்ப்பு; போலீஸார் பாதுகாப்புடன் நடைபெறும் பிரசாரம்!

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 - ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பரப்புரையில் அரசியல் கட்சிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. தாராபுரம் ... மேலும் பார்க்க

"இடைத்தேர்தலைத் திணிப்பவர்களே தேர்தல் செலவையும் ஏற்க வேண்டும்" - தாராபுரத்தில் சீமான் ஆவேசம்

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 6 - ம் தேதியும் வாக்கு எண்ணிக்கை 9-ம் தேதியும் நடைபெற இருக்கின்றன. தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகின்றன... மேலும் பார்க்க

தாராபுரம்: தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மக்கள், பாதியில் நிறுத்தப்பட்ட தேர்தல் பிரசாரம்!

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 - ம் தேதி நடைபெற இருக்கிறது. எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க- வில் இணைந்த சத்யபாமாவை வேட்ப... மேலும் பார்க்க