செய்திகள் :

Asian Game: "பதக்கம் பற்றி நான் சிந்திக்கவில்லை"- வெண்கலம் வென்ற பரணிகா இளங்கோவன்

post image

ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், Pole Vault போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறார் தமிழக தடகள வீராங்கனை பரணிகா இளங்கோவன்.

பரணிகா இளங்கோவன்
பரணிகா இளங்கோவன்

அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். வெண்கலப் பதக்கம் வென்ற பரணிகா இளங்கோவனைப் பாராட்டி தமிழ்நாட்டு முதல்வர் விஜய் ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில் பதக்கம் வென்றது குறித்து பேசியிருக்கும் பரணிகா இளங்கோவன்," இந்தப் பயணத்தில் எனக்கு ஆதரவளித்த இந்திய தடகள சம்மேளனத்திற்கு நன்றி. அந்த நேரத்தில் பதக்கத்தைப் பற்றி நான் சிந்திக்கவில்லை. எனது சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்துவதில்தான் கவனம் செலுத்தினேன்.

பரணிகா இளங்கோவன்
பரணிகா இளங்கோவன்

கம்பை மிகவும் ஆக்ரோஷமாக பயன்படுத்தி சிறப்பாக செயல்பட்டேன். மும்முறை தாண்டுதல் போட்டிக்காக பயிற்சியாளரைத் தேடிக்கொண்டிருந்தேன். எதிர்பாராத விதமாக Pole Vault பயிற்சியாளர் கிடைத்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய Pole Vault வரலாற்றில் மாற்றத்தை பார்க்க முடியும்" என்று தெரிவித்திருக்கிறார்.

ஆசியப் போட்டி: 44 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வென்ற பதக்கம்; சாவன் பர்வால் சாதனை!

ஜப்பானின் நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசியப் போட்டிகளில் இந்தியாவின் சாவன் பர்வால் ஆண்களுக்கான மாரத்தான் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 42.195 கி.மீ தொலைவை 2 மணி 11 நிமிடம்... மேலும் பார்க்க

Asian Games: ஷூட்டிங்கில் தங்கம்... தடகளம், டேபிள் டென்னிஸில் பதக்கங்கள்: இந்தியாவின் ஏழாம் நாள்!

ஆசிய விளையாட்டுப் போட்டியின் 7-வது நாளில் இந்தியா ஒரே நாளில் ஆறு பதக்கங்களை வென்றுள்ளது. ஷூட்டிங்கில் தங்கம் மற்றும் வெள்ளி, தடகளத்தில் ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலம், டேபிள் டென்னிஸில் ஒரு வெண்கல... மேலும் பார்க்க

Wushu-வில் வெள்ளி; Shooting-ல் வெண்கலம் - Asian Games-ல் தொடரும் இந்தியாவின் பதக்க வேட்டை! | Roundup

ஆசிய விளையாட்டுப் போட்டியின் 6-வது நாளில் இந்தியாவுக்கு உஷு (Wushu) மற்றும் ஷூட்டிங் (Shooting) போட்டிகளில் பதக்கங்கள் கிடைத்துள்ளன. மகளிர் 60 கிலோ பிரிவில் நௌரீம் ரோஷிபினா தேவி வெள்ளிப் பதக்கம் வென்ற... மேலும் பார்க்க

Asian Games: 10,000 மீட்டர் ரேஸ்; 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்.. சீமா குமாரி சாதனை!

“முயற்சி திருவினையாக்கும்” என்பார்கள். அதை நிரூபிக்கும் வகையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீராங்கனை சீமா குமாரி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் வியாழக்கிழம... மேலும் பார்க்க

Asian Games Badmintonல் வெண்கலம் வென்ற மன்னார்குடி வீரர்; "அடுத்த இலக்கு ஒலிம்பிக்"- தந்தை நம்பிக்கை

ஜப்பானில் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு இந்தியா சார்பில் விளையாடி த... மேலும் பார்க்க

Asian Games: வெயிட்லிஃப்டிங், சாஃப்ட் டென்னிஸில் பதக்கங்களை குவித்த இந்தியா - ரவுண்ட்அப்!

ஆசிய விளையாட்டுப் போட்டியின் 5-வது நாள் முடிவில், இந்தியாவின் பதக்கப் பட்டியலில் இரண்டு குறிப்பிடத்தக்க சாதனைகள் பதிவாகியுள்ளன. வெயிட்லிஃப்டிங் பிரிவில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்குப் பதக்கம்... மேலும் பார்க்க