செய்திகள் :

Asian Games: 10,000 மீட்டர் ரேஸ்; 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்.. சீமா குமாரி சாதனை!

post image

“முயற்சி திருவினையாக்கும்” என்பார்கள். அதை நிரூபிக்கும் வகையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீராங்கனை சீமா குமாரி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் வியாழக்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தய இறுதிப் போட்டியில் சீமா 32 நிமிடங்கள் 50.05 விநாடிகளில் இலக்கை எட்டி மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம், இந்தப் பிரிவில் இந்தியாவுக்கு 16 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் கிடைத்துள்ளது.

ஆரம்பம் முதலே முன்னிலை

போட்டி தொடங்கியதில் இருந்தே முன்னணி வீராங்கனைகள் இடம்பெற்ற குழுவில் சீமாவும் இருந்தார். கடைசி மூன்று சுற்றுகள் எஞ்சியிருந்தபோது பஹ்ரைனின் வின்ஃப்ரெட் யாவி, ஜப்பானின் நோசோமி தனகா ஆகியோர் முன்னிலை பெற்றனர். இறுதியில் யாவி 32:39.18 நேரத்தில் தங்கமும், தனகா 32:41.54 நேரத்தில் வெள்ளியும் வென்றனர். சீமா 32:50.05 நேரத்துடன் வெண்கலத்தை வென்றுள்ளார்கள்.

2010-க்குப் பிறகு மீண்டும் பதக்கப் பாதையில் இந்தியா!

பெண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு கடைசியாக 2010-ம் ஆண்டு குவாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் கிடைத்தது. அப்போது பிரீஜா ஸ்ரீதரன் தங்கமும், கவிதா ராவத் வெள்ளியும் வென்றிருந்தனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைத்த இந்த வெண்கலம்,  இந்தியாவின் மூன்றாவது ஆசிய விளையாட்டுப் பதக்கமாக அமைந்துள்ளது. முன்னணி வீராங்கனைகளுடன் தொடக்கம் முதலே போட்டியிட்டு, இறுதிவரை தனது இடத்தைத் தக்கவைத்த சீமாவின் ஓட்டம், இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. நீண்ட தூர ஓட்டத்தில் வேகத்தை மட்டும் நம்பாமல், பொறுமையுடன் ஓடுவதும் முக்கியம்.

அந்த வகையில் சீமா பந்தயம் முழுவதும் சீரான வேகத்தைப் பின்பற்றினார். இறுதிக்கட்டத்தில் முன்னணி வீராங்கனைகள் வேகத்தை அதிகரித்தபோதும், அவர் பதக்கத்துக்கான இடத்தை விட்டுக்கொடுக்காமல் போராடினார். இறுதியில் இந்தியாவுக்காக வெண்கலத்தை உறுதி செய்து, தனது பெயரை ஆசிய விளையாட்டுப் போட்டியின்  வரலாற்றில் பதிவு செய்துள்ளார். இந்தச் சாதனை நீண்ட தூர ஓட்டத்தில் இந்தியாவின் அடுத்த தலைமுறை வீராங்கனைகளுக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.

Asian Games Badmintonல் வெண்கலம் வென்ற மன்னார்குடி வீரர்; "அடுத்த இலக்கு ஒலிம்பிக்"- தந்தை நம்பிக்கை

ஜப்பானில் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு இந்தியா சார்பில் விளையாடி த... மேலும் பார்க்க

Asian Games: வெயிட்லிஃப்டிங், சாஃப்ட் டென்னிஸில் பதக்கங்களை குவித்த இந்தியா - ரவுண்ட்அப்!

ஆசிய விளையாட்டுப் போட்டியின் 5-வது நாள் முடிவில், இந்தியாவின் பதக்கப் பட்டியலில் இரண்டு குறிப்பிடத்தக்க சாதனைகள் பதிவாகியுள்ளன. வெயிட்லிஃப்டிங் பிரிவில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்குப் பதக்கம்... மேலும் பார்க்க

Asian games: 28 ஆண்டுகளுக்குப் பிறகு பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம்; வரலாற்று சாதனை படைத்த மீராபாய்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பளுதூக்குதலில் இந்தியாவின் 28 ஆண்டுக்கால காத்திருப்புக்கு இன்று முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார், நட்சத்திர வீராங்கனை மீராபாய் சானு!ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும... மேலும் பார்க்க

Asian Games: இலங்கைக்கு எதிராக இமாலய வெற்றி... முதல் தங்கம்; பதக்க வேட்டையில் இந்தியா!

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பதக்க வேட்டை 3-வது நாளில் புதிய வேகம் எடுத்துள்ளது. இலங்கையை 147 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்க... மேலும் பார்க்க

11 ஆண்டுகள் பயணம்... 2 உலகக் கோப்பை வெற்றி - சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த மார்க் வுட்!

இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளரான மார்க் வுட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இங்கிலாந்து அணிக்காக மொத்தமாக 11 ஆண்டுகள் மார்க் வுட் விளையாடியிருக்கிறார். 201... மேலும் பார்க்க

ஜாகீர் கான்: ஸ்டார் வீரர் டு Mentor டு ஹெட் கோச் - நீண்ட அனுபவம் CSK அணிக்கு கைகொடுக்குமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நீண்ட காலப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் விலகிய நிலையில், அவரது இடத்தை இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நிரப்புகிறார். 2027 ஐபிஎல் சீசன் முதல் சிஎஸ்கே அ... மேலும் பார்க்க