செய்திகள் :

``தலித்துகளுக்கு எதிராக பொய் வழக்குப் புனைவதை காவல்துறை கைவிட வேண்டும்!’’ - திருமாவளவன்

post image

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் வி.சி.க தலைவர் திருமாவளவன் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ``தலித்துகளுக்கு எதிராக பொய் வழக்குப் புனைவதை காவல்துறை கைவிட வேண்டும். இதுதொடர்பாக முதல்வரைச் சந்தித்து முறையிட இருக்கிறோம். மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் நடைபெற உள்ள இடைத்தேர்தல்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தேர்தல் பணிக்குழு நியமிக்கப்படுகிறது.

மதுராந்தகத்தில் மேற்பார்வையாளர்களாக கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் மற்றும் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னியரசு ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். இவர்களின் மேற்பார்வையின்கீழ் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி தலைமையில் 10 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படுகிறது.

திருமாவளவன்

தாராபுரத்தில் மேற்பார்வையாளர்களாக கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன், செய்தித் தொடர்பாளர் கு.கா.பாவலன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். அங்கு ஒருங்கிணைப்பாளர்களாக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வெ.கனியமுதன் தலைமையில் 10 பேர் கொண்ட குழு நியமிக்கப்படுகிறது. மதுராந்தகத்திலும், தாராபுரத்திலும் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் சார்பில் பொதுக்கூட்டங்கள் ஒருங்கிணைப்பட உள்ளது.

அந்த பொதுக்கூட்டங்களில் கூட்டணி கட்சித் தலைவர்கள் நாங்கள் பங்கேற்று வாக்கு சேகரிக்க உள்ளோம். `வெற்றி பெற்றவர் பதவி விலகிவிட்டார்’ என்கிற வருத்தம் சிலருக்கு உண்டு; உள்ளது. அவர்கள் தங்கள் அதிருப்தியை எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆனாலும்கூட மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியை மதுராந்தகத்திலும், தாராபுரத்திலும் மக்கள் வெகுவாக ஆதரிக்க உள்ளனர். இந்த 2 வேட்பாளர்களையும் வெற்றிபெற வைப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இடைத்தேர்தலுக்குப் பிறகு த.வெ.க கூட்டணியில் பா.ம.க இணைவதாகச் சொல்வதே யூகமான கேள்வி. அதற்கெல்லாம் நாங்கள் எப்படி பதில் சொல்ல முடியும்?

வீரமணி

ஜெம் வீரமணியின் வழக்கில் தமிழக அரசு மிகவும் கவனமாக புலனாய்வு செய்து உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த பெரும் கொடுங் குற்றத்தில் தொடர்புடைய யாரும் தப்பிக்கக் கூடாது என்கிற வகையில் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு முதலமைச்சர் ஆணையிட்டிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.

இதுபோன்ற குற்றங்கள் மிகுந்த அதிர்ச்சியளிக்கக் கூடியவையாக உள்ளன. எனவே, இதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அத்தனை பேரும் கைது செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மீண்டும் வலியுறுத்துகிறோம்’’ என்றார்.

"எதற்கெடுத்தாலும் திமுக எங்கள் மீது குற்றம்சுமத்துகிறது!" - அமைச்சர் ரமேஷ் விமர்சனம்

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்,"திருச்சி மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி மொத்தம் 590 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் மிகச் ச... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம் விவகாரம்: ``ஞானேஷ்குமார் அப்ரூவராக மாற வேண்டும்" - ராகுல் காந்தி

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``பிரதமர் மோடி மற்றும... மேலும் பார்க்க

மீண்டும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட அருண் ஐ.பி.எஸ் - தமிழக அரசு ஆணை; விவரம் என்ன?

சென்னை மாநகரக் காவல் ஆணையராக இருந்த அருண் ஐ.பி.எஸ்-ஸை தேர்தல் நேரத்தில், இந்திய தேர்தல் ஆணையம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, நடவடிக்கை மேற்கொண்டிருந்தது. அந்தப் பதவிக்கு ஏ.டி.ஜி.பி அந்தஸ்தில் இர... மேலும் பார்க்க

``மாணவர்கள் காலை உணவில் பல்லி; திட்டத்தை விட விளம்பரத்துக்கு கூடுதல் செலவு" - டிடிவி தினகரன் காட்டம்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 22-ம் தேதி தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 1-ம் வகுப... மேலும் பார்க்க

"சபரிமலை: ஐயப்ப சுவாமியின் தங்கக் கிரீடம் மாயமா?"- விளக்கமளித்த தேவஸ்வம் போர்டு!

கேரள உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, அமிகஸ் கியூரி நீதிபதி கே.டி. சங்கரன் தலைமையில் சபரிமலையில் உள்ள திருவாபரணங்கள் மற்றும் விலைமதிப்பற்ற காணிக்கைப் பொருள்களின் இருப்பு தொடர்பான கணக்கெடுப்பு மற... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம்: ``ஸ்டாலின் முதல் மம்தா வரை தோல்வி தற்செயல் அல்ல" - அபிஜித் தீப்கே சொல்லும் கணக்கு

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அடுத்த 48 மணி நேரத்திற்குள் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், தவறினால் நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தப்போவதாகவும் காக்ரோஜ் ஜனதா கட்சி ந... மேலும் பார்க்க