செய்திகள் :

‘ஜனநாயகத்தை அச்சுறுத்தாதீர்கள்’ - அமைச்சர் சம்பத் மீதான தாக்குதல் குறித்து கனிமொழி எம்.எல்.ஏ!

post image

தாராபுரத்தில் அமைச்சர் சம்பத் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து, கோவை கவுண்டம்பாளையம் தொகுதி த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியல் என்பது கருத்துக்களுக்கான களம். அந்தக் களத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கை ரீதியாக கடுமையான விமர்சனங்களும் இருக்கலாம். ஆனால் அதற்கு பதிலாக வன்முறையைத் தேர்ந்தெடுப்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் நடைமுறை அல்ல. ஒரு அரசியல் கட்சியின் நிர்வாகி, வேட்பாளர் அல்லது மக்கள் பிரதிநிதி மக்களை சந்திக்கச் செல்லும்போது, அவரை தடுத்து நிறுத்துவது, அச்சுறுத்துவது அல்லது ஆதரவாளர்கள் மூலம் தாக்குதல் நடத்துவது போன்ற செயல்கள் ஜனநாயக அரசியலின் அடிப்படை நெறிமுறைகளையே கேள்விக்குள்ளாக்குகின்றன.

கனிமொழி சந்தோஷ்
கனிமொழி சந்தோஷ்

குறிப்பாக தேர்தல் காலத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் மக்களை நேரடியாக சந்தித்து தங்களது கொள்கைகள் மற்றும் நிலைப்பாடுகளை எடுத்துரைக்கும் உரிமை உள்ளது. அதேபோல், அந்தக் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதா, நிராகரிப்பதா என்பதை தீர்மானிக்கும் முழுமையான உரிமை மக்களுக்கு மட்டுமே உள்ளது. மக்களை சந்திப்பதற்கான அரசியல் களத்தை வன்முறையின் மூலம் முடக்க முடியாது. தங்களது ஆதரவாளர்களை பயன்படுத்தி  மக்களை சந்திக்க விடாமல் தடுப்பதும், அவர்களை அச்சுறுத்துவதும், தாக்குதல்களில் ஈடுபடுவதும் அரசியல் மாண்பு அல்ல.

கனிமொழி சந்தோஷ்
கனிமொழி சந்தோஷ்

அ.தி.மு.க மற்றும் தி.மு.க  போன்ற  அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் போட்டியை ஜனநாயக ரீதியாக எதிர்கொள்ள வேண்டும். அரசியல் போட்டி என்பது கொள்கைகளுக்கு இடையிலான போட்டியாக இருக்க வேண்டும். தனிநபர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாக மாறிவிடக்கூடாது. கருத்தை கருத்தால் எதிர்கொள்ளுங்கள். கொள்கையை கொள்கையால் எதிர்கொள்ளுங்கள். மக்களின் தீர்ப்பை மக்களிடமே விட்டுவிடுங்கள். வன்முறை மூலம் மக்களின் மனதை மாற்ற முடியாது. அச்சுறுத்தல்கள் மூலம் ஜனநாயகத்தின் குரலை ஒடுக்க முடியாது. தேர்தல் களத்தில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை எந்த அரசியல் கட்சியும் தீர்மானிக்க முடியாது. மக்கள்தான் இறுதி தீர்ப்பை வழங்குபவர்கள். எனவே அரசியல் களத்தில் போட்டியிடுங்கள். ஆனால் வன்முறையை அரசியல் கருவியாக மாற்றாதீர்கள். ஜனநாயகத்தை அச்சுறுத்தாதீர்கள். மக்களின் குரலாகவும், மக்களின் உரிமைக்காகவும் த.வெ.க தொடர்ந்து ஜனநாயக களத்தில் நிற்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

"இதுதான் தவெக அரசின் சமூக நீதியா?" - தவெக-வின் வாக்குறுதியை மேற்கோள்காட்டி அன்புமணி காட்டம்

மின் கணக்கீட்டு பணியில் தனியார் ஒப்பந்த முறையைக் கைவிட வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மாநகரம் உள்பட தமிழ்நாட... மேலும் பார்க்க

'ஜெகத்ரட்சகனின் மகனுக்கு முதல்வர் விஜய் கொடுத்த பொறுப்பு!' - பின்னணி என்ன?

திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் மகனான சந்தீப் ஆனந்துக்கு தவெகவில் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பை கொடுத்திருக்கிறார் முதல்வர் விஜய். CM Vijayஇதுதொடர்பாக பனையூர் வட்டாரத்தில் பேச்சுக் கொடுத்தோம், 'திமுகவில்... மேலும் பார்க்க

" நான் முடி வெட்டிக்கொண்டாலும் பிரச்னையா?" - விமர்சனங்களுக்கு மேயர் பிரியா பதில்

சென்னை மேயர் பிரியா சமீபத்தில் முடி வெட்டியதை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் அவர் ட்ரோல் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் தான் தொடர்ச்சியாக விமர்சிக்கப்படுவது குறித்து மேயர் பிரியா காட்டமாக தனது எக்ஸ... மேலும் பார்க்க

''எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது?" - முதல்வர் விஜய்யை சாடிய ஸ்டாலின்

தமிழ்நாட்டில் 2 தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. மதுராந்தகத்தில் தவெக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்த அக்கட்சித் தலைவரும் முதலமைச்சருமான விஜய், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை கடுமையாக ... மேலும் பார்க்க

வீரமணி போக்சோ வழக்கு: ``விசாரணையை நீர்த்துப் போக போலீஸுக்கு சிக்னல் கொடுத்தது ஏன்?" - அப்பாவு கேள்வி

ஜெம் நிறுவனர் தொழிலதிபர் வீரமணி போக்சோ வழக்கு விசாரணையை 70 நாள் தாமதப்படுத்தியது ஏன் என முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``சிறுமிகளை பாலிய... மேலும் பார்க்க

``தீவிரவாத நாடு, என்னிடம் கேள்வி கேட்கிறீர்களா?" - பாக்., ஊடகவியலாளர் கேள்விக்கு அமைச்சர் ஜெய்சங்கர்

நியூயார்க்கில் ஐநா பொதுச் சபையின் 81-வது கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்தக் கூட்டத் தொடரின் இடையே செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பாகிஸ்தானை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் , `பாகிஸ்தானில் இந்தியா எ... மேலும் பார்க்க