செய்திகள் :

Dorothy: ``கார்த்திக் சுப்புராஜ் மீது பொறாமையாக இருக்கிறது" - இயக்குநர் மணிரத்னம்

post image

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சனந்த், ரிஷிகாந்த், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று (செப்டம்பர் 25-ம் தேதி) வெளியான படம் டோரதி. இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. பாலின பாகுபாடு பார்க்கக் கூடாது என்கிற கான்செப்ட்டில் உருவாகி உள்ள இந்த படத்துக்கு திரையுலகிலிருந்து ஆதரவு அதிகரித்து வருகிறது. டோரதி திரைப்படம் குறித்தும், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் குறித்தும் இயக்குநர் மணி ரத்னம் பேசியிருக்கிறார். இது தொடர்பாக வெளியான வீடியோவில், ``கார்த்திக் சுப்புராஜ் மிக மிக விசேஷமான திறமைசாலி. நம்மிடம் பல இளம் நம்பிக்கையளிக்கும் இயக்குநர்கள் உள்ளனர். அவர்களில் கார்த்திக்தான் லீடராக இருப்பார் எனத் தோன்றுகிறது.

டோரதி
டோரதி

இவரது டோரதி திரைப்படம் ரொம்ப ஸ்பெஷல். டோரதி படத்தின் சினிமா மொழி மிக மிக நன்றாக, மிகவும் ஈர்க்கும் வகையில் உள்ளது. உண்மையிலேயே எனக்கு இவர் மீது பொறாமையாக இருக்கிறது. சினிமா மொழியின் மீதான கட்டுப்பாடு, காட்சி அமைப்புகள் மீதான கட்டுப்பாடு மற்றும் தொழில்நுட்பம் என அனைத்துமே மிக அற்புதமாக உள்ளது. இதனுடன் இளையராஜா சாரின் இசையும் சேரும்போது மிக மிக அற்புதமாக இருக்கிறது. இது உண்மையிலேயே மிகவும் சிறப்பான ஒன்று. நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

'நான் தமிழ் ஈழப்பெண்'- நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணன் பேச்சுக்கு எழுந்த எதிர்ப்பு! பின்னணி என்ன?

நெட்பிளிக்ஸில் 2020 ஆம் ஆண்டு வெளியான 'Never Have I Ever' தொடர் மூலம் புகழ்பெற்றவர் மைத்ரேயி ராமகிருஷ்ணன். கன்னடாவில் பிறந்து வளர்ந்த மைத்ரேயி ராமகிருஷ்ணன். தமிழ் பின்னணியைக் கொண்டவர். இலங்கை இவரது பூ... மேலும் பார்க்க

Sigma: ``ஜேசன் சஞ்சய் அவருடைய அப்பாவைப் போலவே இருக்கிறார்" - நடிகர் சிரஞ்சீவி

தவெக தலைவரும், நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரோடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்து... மேலும் பார்க்க

D56: "தனுஷுடன் இத்தனை ஆண்டுகள் இணைந்து நடிக்காதது ஏன்?" - வடிவேலு விளக்கம்

'லப்பர் பந்து' திரைப்படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் தனது 56-வது திரைப்படத்தின் பூஜை இன்று மதுரையில் நடைபெற்றது. இதில் தனுஷுடன் இணைந்து நடிகர் வடிவேலுவும் நடிக்கிறா... மேலும் பார்க்க

D56: "பல சவால்கள், தடைகளுக்குப் பிறகு படத்தைத் தொடங்கியிருக்கிறோம்" - எஸ்.ஜே.சூர்யா

'ஓம்' படத்தைத் தொடர்ந்து ‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனது 56-வது படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் நடிகர்கள் வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா, ப... மேலும் பார்க்க

Meesaya Murukku 2 Review: கமர்ஷியல் பார்முலாவில் காணாமல்போகும் இசை அரசியல்! படமாக எப்படி?

சென்னையில் வசித்து வரும் `ஜென் - சி' இளைஞரான டிஜே ஜீவாவிற்கு (ஹிப் ஹாப் தமிழா ஆதி) இசைத்துறையில் சாதிக்க வேண்டும் எனப் பேரார்வம். சுயாதீன இசைக்கலைஞராக வேண்டும் என்கிற இவரின் கனவுக்கு நெப்போடிசம், சுயா... மேலும் பார்க்க

Dorothy Review: பாலினம் குறித்த உரையாடல் - தமிழ் சினிமா பேசத் தயங்கும் விஷயங்களைத் தொடும் டோரதி!

90களின் தொடக்கம். மதுரையிலுள்ள கிராமம் ஒன்றில், சாதி வெறியால் தன் அம்மாவையும், அக்காவையும் இழந்த சுப்பு (சனந்த்), தன் அப்பா ('வேட்டை' முத்துக்குமார்), அண்ணன்களுடனும் வாழ்ந்து வருகிறார். தன் பால்ய காலம... மேலும் பார்க்க