செய்திகள் :

மின்வாரிய விவகாரம்: "தனியாருக்கு தாரை வார்ப்பதில் முதல்வருக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்?" - டிடிவி தினகரன்

post image

மின் கணக்கீட்டாளர் பணிக்கு தனியார் ஒப்பந்த நிறுவனங்களின் மூலம் ஊழியர்களை நியமிக்கும் அரசின் முடிவு குறித்து அமமுக தலைவர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக தன் எக்ஸ் பக்கத்தில், ``வீடுகளில் மின் பயன்பாட்டைக் கணக்கெடும் பணியை தனியாருக்குத் தாரைவார்ப்பதா? - தூய்மைப் பணிகள் தொடங்கி விமான நிலையம் வரை தனியாருக்குத் தாரை வார்ப்பதில் முதலமைச்சருக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்?

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

வீடுகளில் மின் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் பணியில் தனியார் ஒப்பந்த நிறுவனங்களின் மூலம் ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டும் என மின்வாரியம் பிறப்பித்திருக்கும் உத்தரவு, மின்வாரிய ஊழியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆய்வு மேற்கொண்ட போதே, மின்வாரியத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி போராட்டம் நடைபெற்ற நிலையில், தற்போது மின் கணக்கீட்டாளர் பணிக்கு தனியார் ஒப்பந்த நிறுவனங்களின் மூலம் ஊழியர்களை நியமிக்க முயன்றிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

மின்சார பற்றாக்குறை, அடிக்கடி நிகழும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின் கட்டணம் கணக்கெடுப்பதிலும் வசூலிப்பதிலும் குளறுபடி என அடுத்தடுத்து எழும் புகார்களைச் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் மின்சார வாரியம், பணியாளர்கள் பற்றாக்குறையைக் காரணம் காட்டி மின் கணக்கீட்டாளர் பணியை தனியாருக்குத் தாரைவார்ப்பதன் மூலம் தன் கையாலாகத் தனத்தைத் தாமாக முன்வந்து ஒப்புக் கொண்டிருப்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களைப் பணிநிரந்தரம் செய்வோம் என வாக்குறுதியளித்த தவெக, தூய்மைப் பணிகள் தொடங்கி போக்குவரத்துக் கழகத்திற்கு ஓட்டுநர்கள் மற்றும், நடத்துனர்கள் நியமனம், செவிலியர்கள் நியமனம், சென்னை விமான நிலையம் வரை தனியாரையே நாடிக் கொண்டிருப்பது மூலம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் தனியாருக்குத் தாரைவார்க்க தவெக இலக்கு நிர்ணயித்திருக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

எனவே, மின் கணக்கீட்டு பணியை தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவை உடனடியாகக் கைவிடுவதோடு, மின்வாரியத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்பிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மின்வாரியத்தையும், தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: "FIR பதிவு செய்ததே பேரம் பேசுவதற்காகத்தான்" - அமைச்சர் நிர்மல் குமார்

மதுரையில் வரும் திங்கள்கிழமை நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் விஜய் பங்கேற்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து காந்தி அருங்காட்சியகத்தில் இன்று அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு... மேலும் பார்க்க

"விஜய்யின் தாயாரை பாஜக தலைவர்கள் தவறாகப் பேசினார்கள்; ஆனால்."- மதுராந்தகம் திமுக வேட்பாளர் பரந்தாமன்

மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல் பரப்புரையில் தமிழ்நாடு முதல்வர் விஜய் ஆற்றிய உரையில் திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக மதுராந்தகம் திமுக வேட்பாளர் பரந்த... மேலும் பார்க்க

"இதுதான் தவெக அரசின் சமூக நீதியா?" - தவெக-வின் வாக்குறுதியை மேற்கோள்காட்டி அன்புமணி காட்டம்

மின் கணக்கீட்டு பணியில் தனியார் ஒப்பந்த முறையைக் கைவிட வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மாநகரம் உள்பட தமிழ்நாட... மேலும் பார்க்க

‘ஜனநாயகத்தை அச்சுறுத்தாதீர்கள்’ - அமைச்சர் சம்பத் மீதான தாக்குதல் குறித்து கனிமொழி எம்.எல்.ஏ!

தாராபுரத்தில் அமைச்சர் சம்பத் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து, கோவை கவுண்டம்பாளையம் தொகுதி த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில... மேலும் பார்க்க

'ஜெகத்ரட்சகனின் மகனுக்கு முதல்வர் விஜய் கொடுத்த பொறுப்பு!' - பின்னணி என்ன?

திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் மகனான சந்தீப் ஆனந்துக்கு தவெகவில் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பை கொடுத்திருக்கிறார் முதல்வர் விஜய். CM Vijayஇதுதொடர்பாக பனையூர் வட்டாரத்தில் பேச்சுக் கொடுத்தோம், 'திமுகவில்... மேலும் பார்க்க

" நான் முடி வெட்டிக்கொண்டாலும் பிரச்னையா?" - விமர்சனங்களுக்கு மேயர் பிரியா பதில்

சென்னை மேயர் பிரியா சமீபத்தில் முடி வெட்டியதை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் அவர் ட்ரோல் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் தான் தொடர்ச்சியாக விமர்சிக்கப்படுவது குறித்து மேயர் பிரியா காட்டமாக தனது எக்ஸ... மேலும் பார்க்க