செய்திகள் :

இனி PF பேலன்ஸை வாட்ஸ்ஆப்பிலேயே பார்த்துக்கலாம்; வெப்சைட் டவுன் பிரச்னை எல்லாம் கிடையாது! | How to?

post image

வருங்கால வைப்பு நிதி (PF) பேலன்ஸ் செக் செய்வதை எளிமையாக்கியிருக்கிறது அதன் அமைப்பு.

இனிமேல் EPFO வலைதளம் அல்லது UMANG ஆப்பிற்குள் சென்று பேலன்ஸ் பார்க்க சிரமப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களுடைய வாட்ஸ்ஆப்பிலேயே பி.எஃப் பேலன்ஸை எளிதாகச் செக் செய்துகொள்ளலாம்.

எப்படி அது?

> உங்களுடைய மொபைல் போனில் 87964 41800 - இந்த எண்ணைச் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.

> இந்த எண்ணில் இருக்கும் வாட்ஸ்ஆப் சாட்டில் ‘Hi’ அனுப்பவும்.

அடுத்ததாக, உங்களுடைய மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

EPFO
EPFO

> அதன் பின், பி.எஃப் பேலன்ஸ் செக், கடைசி 5 பரிவர்த்தனைகளைப் பார்க்க, பாஸ்புக் டவுன்லோடு என மூன்று ஆப்ஷன்கள் வரும்.

> அதில் உங்களுக்குத் தேவையான ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து, ‘Send’ கொடுக்கவும்.

> இப்போது உங்களுடைய மொபைல் எண்ணுக்கு OTP வரும். அந்த OTP-ஐ அதே சாட்டில் பதிவிடுங்கள்.

> இதன் பின், உங்களுடைய UAN நம்பர் வரும். இதன் பின், உங்களுக்குத் தேவையான விஷயத்தைப் பார்த்துக்கொள்ளலாம்.

பேலன்ஸ் மட்டும்தானா..?

EPFO உடனான வாட்ஸ்ஆப் சாட்டில் பி.எஃப் பேலன்ஸ் மட்டுமல்ல... உங்களுடைய கடைசி 5 பரிவர்த்தனைகளைப் பார்க்க முடியும்.

உங்களுடைய பாஸ்புக்கையும் டவுன்லோடு செய்துகொள்ள முடியும்.

ஆனாலும், சின்னப் பிரச்னை!

இந்த வசதி கடந்த நவம்பர் 1-ம் தேதியிலிருந்துதான் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. நம்முடைய உள்ளீடுகள் சில நேரங்களில் வேகமாகப் பிராசஸ் ஆவதில்லை. OTP லிங்க்கில் சில பிரச்னைகள் உள்ளன.

ஆனால், கொஞ்சம் நேரம் கழித்து முயற்சித்தால், நாம் செக் செய்ய நினைத்ததைப் பார்க்க முடிகிறது.

இருந்தாலும், இந்தச் சாட்பாட் விரைவாகச் செயல்படுவதும், தொழில்நுட்பக் கோளாறு இல்லாமல் செயல்படுத்துவதும் அரசின் பொறுப்பு.

இதனால், இது விரைவில் சரிசெய்யப்படும் என்று நம்புவோம்.

அட்டைப்படம்

அட்டைப்படம் விகடன் ப்ளஸ் மேலும் பார்க்க

நெல்லை: ஆம்னி பஸ்ஸை நடுவழியில் நிறுத்திய ஓட்டுநர்; போலீஸுடன் வாக்குவாதம்... தவித்த பயணிகள்!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேநேரம் விழாக் காலங்களில் தனியார் பேருந்துகள் விதிமுறைகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்... மேலும் பார்க்க

வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்: ரூ.109.75 கோடி நிதி ஒதுக்கிய முதல்வர் விஜய்!

வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டத்துக்கு ரூ.109.75 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.நடப்பு நிதியாண்டில், ஊரகப் பகுதிகளில் வாழும் நலிவடைந்த கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள்... மேலும் பார்க்க

Omar Abdullah: ஊடகவியலாளரை மணந்த ஜம்மு & காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா - வைரலாகும் புகைப்படங்கள்!

ஜம்மு & காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, ஊடகவியலாளர் நிதி ரஸ்தான் என்பவரைத் திருமணம் செய்திருக்கிறார். இருவரும் தங்களது திருமணப் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, இத்தகவலை அதிகாரப்பூர்... மேலும் பார்க்க

ICU நோயாளிகளுக்கு மொபைல் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை; கோத்தகிரி அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் தாலுகா மருத்துவமனை இயங்கி வருகிறது. கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பழங்குடிகள், தோட்ட தொழிலாளர்கள் என ஏழை எளிய மக்கள் இந்த மருத்துவமனையை மட்டு... மேலும் பார்க்க

ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வு; பண்டிகை காலத்தில் மக்கள் அதிர்ச்சி; எந்தப் பொருள் எவ்வளவு உயர்வு?

பண்டிகை காலம் நெருங்கி வரும் வேளையில், ஆவின் நிறுவனத்தின் பால் உபபொருட்களின் விலை உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவின் நிறுவனம் தற்போது 230-க்கும் மேற்பட்ட ... மேலும் பார்க்க