செய்திகள் :

`பணம், தங்குமிடம், உணவு இல்லை?' - பேட்மிண்டன் வீரர்களை ஐரோப்பாவில் நிர்கதியாக விட்ட விளையாட்டுத்துறை

post image

ஐரோப்பாவில் உள்ள பின்லாந்து, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் நடைபெறும் பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியாவில் இருந்து வீரர்கள் சென்று இருந்தனர். இதற்கான செலவுகளை இந்திய விளையாட்டுத்துறை ஆணையம் ஏற்றுக்கொள்வது வழக்கம். ஆனால் இம்முறை அங்கு சென்ற பிறகுதான் வீரர்களுக்குத் தேவையான தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து நிதியை மத்திய விளையாட்டுத்துறை ஒதுக்கவில்லை என்று தெரியவந்தது. அனைத்து வீரர்களும் ஐரோப்பாவிற்கு சென்ற பிறகுதான், இது குறித்து வீரர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பி.வி.சிந்து மற்றும் லக்ஷ்யா சென் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனியில் நடந்த ஹைலோ ஓபன் போட்டியில் ஒற்றையர் பட்டங்களை வென்றனர். மத்திய அரசு நிதி ஒதுக்காதது குறித்து பி.வி.சிந்து கூறுகையில், ``நிதி ஒதுக்கப்படவில்லை என்பதை அறிந்தபோது நான் சற்று அதிர்ச்சியடைந்தேன். நிதி ஏன் கிடைக்கவில்லை என்று வியந்தேன்.

இது போன்ற ஒரு சூழலை நான் இதற்கு முன்பு எதிர்கொண்டதில்லை. ஆனால் அந்தச் சூழலில், நிதி உதவி கிடைக்கவில்லை என்றால் விளையாட மாட்டேன் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. என்னைப் பொறுத்தவரை, போட்டிகளில் பங்கேற்பதும், நான் செய்ய வேண்டியவற்றில் கவனம் செலுத்துவதும், ஆட்டத்தை எப்படி மேம்படுத்திக்கொள்வது என்பதில் கவனம் செலுத்துவதுமே முதன்மையானதாக இருந்தது. நிதி உதவி கிடைக்காதது நிச்சயமாக ஆச்சர்யமாகத்தான் இருந்தது. அதற்கான காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நான் ஓரளவு சொந்தமாக நிதி ஏற்பாடு செய்துகொண்டேன்'' என்றார்.

நிதிச் சிக்கல் காரணமாக, இந்தச் சுற்றுப்பயணத்தின் பெரும்பகுதியில் தங்களின் பயணம், உணவு மற்றும் தங்குமிடச் செலவுகளை வீரர்களே கவனித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்லாந்தில் நடைபெற்ற தொடக்கப் போட்டிக்கான தங்குமிட வசதிகளைச் செய்து தருவதாக இந்திய பேட்மிண்டன் சங்கம் (BAI) வீரர்களிடம் உறுதியளித்திருந்தாலும், எஞ்சிய போட்டிகளுக்கான செலவுகளை வீரர்களே ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

இதன் தாக்கம் ஆடுகளத்திலும் எதிரொலித்தது. சில விளையாட்டு வீரர்களால் தங்கள் பயிற்சியாளர்களுடன் பயணம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டதால், போட்டிகளின்போது அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய வழக்கமான ஆதரவு கிடைக்காமல் போனது. பிரெஞ்சு ஓபன் தொடரில் உலகின் மூன்றாம் நிலை வீராங்கனை அகானே யமாகுச்சியைத் தோற்கடித்த அஷ்மிதா சலிஹாவுக்கு, அந்தப் போட்டியின்போது சக வீராங்கனை இஷாராணி பருவா துணையாக இருந்தார். அதேபோல், டென்மார்க் ஓபன் தொடரில் தன்வி ஷர்மாவும் பயிற்சியாளர் எவருமின்றிப் பங்கேற்றார்.

நிதி ஒதுக்காதது ஏன்?

ஐச்சி-நகோயாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணியின் செயல்பாடு திருப்திகரமாக இல்லாததே இந்த நிதி திரும்பப் பெறப்பட்டதற்குக் காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். 2014-ஆம் ஆண்டிற்குப் பிறகு, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் தனிநபர் பிரிவில் இந்தியா பதக்கம் எதையும் வெல்லவில்லை. ஆனால் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் பெறவில்லை என்பதற்காக நிதி ஒதுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை இந்திய விளையாட்டுத்துறை ஆணையம் மறுத்துள்ளது.

இது குறித்து இந்திய விளையாட்டுத்துறை ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் இந்திய பேட்மிண்டன் அசோசியேசன் பயனத்திற்கான செலவு பட்டியலை சமர்ப்பிக்க தவறிவிட்டது. எனவேதான் நிதி ஒதுக்கப்படவில்லை. விளையாட்டுப் போட்டிகள் தொடங்குவதற்கு 30 நாள்களுக்கு முன்பு அதற்கான செலவு தொடர்பான விவரத்தை விளையாட்டுத் துறைக்கு சமர்ப்பிக்கவேண்டும் என்று தெரிவித்தார்.

தங்க மகள் மனிஷா: `போராடினால் நீ வெல்லலாம்.!' - உலக மல்யுத்த சாம்பியன் ஆன முதல் இந்தியப் பெண்!

“பர்ஸ்ட் யாரு வராங்கிறது முக்கியம் இல்ல... லாஸ்ட்ல யாரு பர்ஸ்ட் வராங்கிறதுதான் முக்கியம்!” என்ற சினிமா டயலாக்குக்கு அப்படியே பொருந்தும் வகையில் அமைந்திருக்கிறது மனிஷா பன்வாலாவின் வெற்றி. 0-6 என்ற புள்... மேலும் பார்க்க

IND Vs NZ: `பார்க்கத்தான் சுள்ளான்...'- அபிஷேக் ஷர்மாவின் `வெறி'யாட்டம்; தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

ஒருபுறம், இந்தப் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியது நியூசிலாந்து அணி. மறுபுறம், இந்தப் போட்டியையும் வென்று தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்ற வேட்கையுடன் களமிறங்கியது இந்திய... மேலும் பார்க்க

சிம்ரன்: பார்வை குறைபாட்டை தாண்டி... `விடாமுயற்சி' - 2 தங்கங்களுக்குப் பின்னால் ஒரு நெகிழ்வான காதல்

ஒரு விளையாட்டு வீரர் பதக்கம் வெல்லும்போது, மேடையில் அவருடைய பெயர் அறிவிக்கப்படும். தேசியக் கொடி உயர்த்தப்படும். ஆனால், அந்த வெற்றிக்குப் பின்னால் இருக்கும் தியாகங்களும் கண்ணீரும் பல நேரங்களில் வெளியில... மேலும் பார்க்க

Asian Para Games: தோல்விகளை கடந்து தங்கம்; ஆசிய பாரா போட்டியில் சாதித்த சென்னை வீரர் நவீன் சிவகுமார்

உடல் தகுதி வாய்ந்த வீரர்களுடன் விளையாடி பல தோல்விகளைச் சந்தித்தவர்; இன்று ஆசிய அரங்கில் இந்தியாவைப் பெருமிதமடையச் செய்திருக்கிறார்! தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த 22 வயது பாரா பேட்மிண்டன் வீரர் நவீன் ... மேலும் பார்க்க

ஆசிய பாரா விளையாட்டுப்போட்டி: "அழாதீங்க; நா சாதிப்பேன்னு சொன்னான்"- தங்கம் வென்ற தூத்துக்குடி இளைஞர்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள குமாரபுரம் கிராமத்தைச் சேர்ந்ததர்மராஜ் - ஈஸ்வரி தம்பதியின் மகன் சோலைராஜ். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போதுசோலைராஜ் தனது 19வயதில் ... மேலும் பார்க்க

Para Games: தங்கம் வென்ற துளசிமதி; காஞ்சிபுரம் மண்ணிலிருந்து ஆசிய மேடை.. வியர்வையில் விளைந்த வெற்றி!

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த துளசிமதி முருகேசன், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தல், தோல்விகளைக் கடந்து தங்கத்துடன் நிறைவடைந்த நெகிழ்ச்சிப் பய... மேலும் பார்க்க