செய்திகள் :

"உங்கள் மகள் சுப்ரியாவும் நாங்களும் நாட்டைப் பார்த்துக்கொள்கிறோம்" - சரத்பவாரிடம் ஆறுதல் சொன்ன மோடி

post image

முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார் இரண்டு நாள்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு புனே ரூபி ஹில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சரத்பவாரிடம் பிரதமர் நரேந்திர மோடி போன் மூலம் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார்.

இது குறித்து சரத்பவாருக்கு மிகவும் நெருக்கமான குடும்ப நண்பர் வித்தல் மணியார் அளித்த பேட்டியில், "பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் அழைத்து, சரத்பவாரிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார். அவர் சாஹேபிடம் மிகுந்த அன்போடும் மரியாதையோடும், 'சாஹேப்(பவார்), தயவுசெய்து முழுமையாக ஓய்வெடுங்கள். சுப்ரியா இப்போது தயாராக இருக்கிறார். சுப்ரியாவும் நாங்களும் நாட்டைப் பார்த்துக்கொள்கிறோம்.

நீங்கள் ஓய்வெடுங்கள். இது எனது வேண்டுகோள்' என்று கூறினார். அதற்கு, 'நான் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் அனைவரும் இருக்கும்போது, ​​நாட்டைப் பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை.

சுப்ரியா

நீங்கள் தொடர்ந்து பணியாற்றுங்கள்' என்று சாஹேப் அவரிடம் கூறினார். தனது உடல்நலம் குறித்து விசாரித்ததற்கு சாஹேப் அவருக்கு நன்றி தெரிவித்தார்" என்று மணியார் கூறினார்.

மகாராஷ்டிராவின் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சரத்பவார் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது அவருக்கு இருமல் மற்றும் நெஞ்சு வலி போன்ற காரணங்களால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பாராமதி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான சுலே, தனது தந்தைக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

நரேந்திர மோடி சரத்பவாரிடம் பேசி இருப்பது மரியாதை நிமித்தமான உரையாடல் என்ற போதிலும், இந்த உரையாடல் மகாராஷ்டிராவின் அரசியல் சூழல் குறித்த பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு அணிகளின் இணைப்பு மற்றும் சரத் பவாரின் தரப்பு பாஜகவுடன் இணையும் சாத்தியக்கூறுகளும் அடங்கும். மேலும், சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே, மோடியின் அமைச்சரவையில் இடம்பெறக்கூடும் என்ற பேச்சும் பல மாதங்களாகவே அடிபட்டு வருகிறது.

இதற்கிடையில், மறைந்த அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் அடங்கிய குழுவினர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினர். அப்போது, ​​சுனேத்ரா பவார் மற்றும் அவரது மகனும் மாநிலங்களவை உறுப்பினருமான பார்த் பவார் ஆகியோர் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பது குறித்து அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்தச் சந்திப்பின்போது சுனேத்ரா பவார் மற்றும் அவரது மகன்களான பார்த்த், ஜே ஆகியோர் கலந்துகொள்ளாதது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

சரத்பவார், புனே மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து மும்பை பிரீச் கேண்டி மருத்துமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். இதனை சுப்ரியா சுலே தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வாளுடன் வன்முறை வீடியோ: 34 வழக்குகள், 9 கைது, 210 அக்கவுண்ட்கள் முடக்கம்; சிவகங்கையில் அதிரடி

கைகளில் வாள்களையும் கத்திகளையும் ஏந்திக்கொண்டு, இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் எக்ஸ் பக்கங்களில் "விரைவில் தலைகள் சிதறும்!" என வாள் காட்டி வன்முறை வசனம் பேசி ரீல்ஸ் மோகத்தில் திரிந்த இளைஞர... மேலும் பார்க்க

'முதலமைச்சரே மாணவர்களிடம் பாரபட்சம் காட்டலாமா?' - சர்ச்சையாகும் தவெகவின் கல்வி விருது!

'தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா' என்ற பெயரில் தவெக சார்பில் 10, 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் மாநில, மாவட்டளவில் மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு முதல்வர் விஜய் விருது வழங்கியிருக்கிறார... மேலும் பார்க்க

அக்னிவீரர்கள்: கூடுதலாக 2 ஆண்டுகள் ராணுவப் பணி; நிரந்தரப் பணிக்குத் மீண்டும் வாய்ப்பு; முழு விவரம்

ராணுவத்தில் சேர வேண்டும், நாட்டுக்காகப் பணியாற்ற வேண்டும் என்ற கனவுடன் அக்னிபத் திட்டத்தில் இணையும் இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. நான்கு ஆண்டுகள் மட்டுமே பணியாற்ற முடியும் என்ற நிலை... மேலும் பார்க்க

வேட்பாளரை அறிவித்த மதபோதகர்; சலசலப்பில் TVK டு வராத முதல்வர்; ஏக குஷியில் நிர்மல் தரப்பு! | கழுகார்

சலசலப்பில் நெல்லை த.வெ.க!வேட்பாளரை அறிவித்த மதபோதகர்...அம்பாசமுத்திரம் உள்பட 5 தொகுதி இடைத்தேர்தல் மீதான எதிர்பார்ப்பு எகிறிவரும் நிலையில், இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்... மேலும் பார்க்க

மோடி வெற்றி; ட்ரம்ப் தோல்வி: இந்திய ஜனநாயகம், அமெரிக்க ஜனநாயகம் - பிரவீன் சக்கரவர்த்தி ஒப்பீடு

அமெரிக்க மிட் டேர்ம் தேர்தலில் ட்ரம்ப் கட்சி (குடியரசுக் கட்சி) பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதை இந்திய ஜனநாயகத்தோடு ஒப்பிட்டு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் பத... மேலும் பார்க்க

"போராட்டம் எங்களைப் பாதிக்கிறது; 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்.!" - ராகுலுக்கு வணிகர் சங்கம் கடிதம்

தேர்தல் மற்றும் சிறப்புத் தீவிரத் திருத்தக் குளறுபடிகளை எதிர்த்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் ந... மேலும் பார்க்க