செய்திகள் :

`அடித்து ஆடும் ஸ்டாலின்... அறிக்கை மோடில் உதயநிதி!' - கொதிக்கும் உடன்பிறப்புகள்!

post image

த.வெ.க-வுக்கு எதிர் அரசியல் செய்வதில் தி.மு.க தலைவர் பட்டாசாய் வெடித்துவரும் நிலையில் பூஸ்வானமாகப் போயிருக்கிறது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அரசியல் நகர்வுகள்.

'தலைவரே இவ்வளவு ஆக்டிவ்வாக இருக்கும்போது, சின்னவர் எங்கே.. ஓய்வில் இருக்கிறாரா என வெடிக்கிறார்கள் உடன்பிறப்புகள்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள் சிலர், "த.வெ.க ஆட்சியமைந்த நாள் முதலே சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொலை, கொள்ளை, குழந்தை கடத்தல், போதை பொருள் புழக்கம் என தமிழ்நாடே ரணகளமாகிக் கிடக்கின்றன. செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க முடியவில்லை மறுபக்கம் சிறையிலிருந்து குற்றவாளிகள் தப்பியோடி வருகிறார்கள்.

பயிர்கடன் தள்ளுபடிக்காக விவசாயிகளும் புதிய தலைமை செயலகம் அமைக்கக் கூடாதென மீனவர்களும் ஊதிய சிக்கல்கள் குறித்து ஒப்பந்த ஊழியர்கள் போராடுகிறார்கள். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கவிருக்கும் சைக்கிள் கொள்முதலில் முறைகேடு, டெண்டர் ரத்து செய்யப்படுவதில் தெளிவின்மை என த.வெ.க அரசில் எக்கசெக்க சிக்கல்கள் தலைவிரித்தாடுகின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் உதயநிதி இவ்விவகாரங்களை வைத்துக் கொண்டு அரசுக்கு நெருக்கடி கொடுத்திருக்கலாம், ஆனால் ஏனோ தெரியவில்லை அறிக்கை விடுவதோடு நிறுத்திக் கொள்கிறார். எங்கள் தலைவர் எம்.எல்.ஏ-வாகக்கூட இல்லாத நிலையிலும் த.வெ.க-வின் அட்டூழியங்களை இடித்துரைக்கிறார். ஆனால், உதயநிதியும் முதல்வர் விஜய்யை போலவே பிரஸ்மீட் கூட நடத்துவதில்லை" என்கிறார்கள்.

விஜய் vs உதயநிதி ஸ்டாலின்
விஜய் vs உதயநிதி ஸ்டாலின்

சட்டப்பேரவை நிகழ்வுகளின் போது ஆக்ட்டிவாக இருந்த உதயநிதி, இப்போது அமைதியாகிவிட்டார். முன்னர் மென்மையாக விமர்சித்து வந்த திமுக தலைவர் ஸ்டாலின் இப்போது அடித்து ஆடுகிறார்.

இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர்கள் சிலர், "த.வெ.க ஆட்சியமைந்ததும் ஆளும் தி.மு.க-வைவிட எதிர்க்கட்சியாக தி.மு.க வீரியமாக களமாடும் என்றெல்லாம் பில்டப் கொடுத்தார்கள், தி.மு.க தலைவர் ஸ்டாலினை தவிர அங்கே யாருமே எதிர்க்கட்சி அரசியலை முன்னெடுக்கவில்லை. விஜய் VS உதய் என தமிழக அரசியல் மாறிவிட்ட பிறகும் உதயநிதி குறிஞ்சி இல்லத்தைவிட்டு வெளிவர மறுக்கிறார். எதற்கெடுத்தாலும் 'அறிக்கை கொடுத்துவிடுங்கள்.. பார்த்துக் கொள்ளலாம்' என அசால்ட்டாக இருப்பதால் சீனியர்கள் உடன்பிறப்புகள் தொடங்கி தொண்டர்கள் வரை உதயநிதிமீது ஆதங்கத்தை கொப்பளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். உடனடியாக உதயநிதி தனது அரசியல் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும்" என்றனர்.

நெல்லை: தாமிரபரணி ஆறு, கால்வாய்களில் திட்டப் பணிகள்; ஆய்வு செய்த நிதி அமைச்சர் மரிய வில்சன் | Photos

நெல்லையில் ஆறு, கால்வாய் திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்ட தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன்.!'சாப்பாடு சரியில்லை என்பதற்காக ஜாமீனா?'- அன்பில் மகேஸ் குறித்து மரிய வில்சன் பேசியதென்ன? மேலும் பார்க்க

"அங்கிள் விஜய் அவர்களே, இது சாதாரண ஆபீஸ் வேலை கிடையாது!" - மு.க. ஸ்டாலின் தாக்கு!

கோவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் விஜய்யையும், தவெக அரசின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார். கட்சி சார்ந்த பல்வேறு நிகழ்வுகளுக்காகத் தற்போது அவர் கோவைக்குச் சென்றிர... மேலும் பார்க்க

``ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற தலைப்பில் விதிகளுக்குப் புறம்பாக கல்லூரி நிகழ்வு..." - சு.வெங்கடேசன்

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற தலைப்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் நாடு முழுவதும் இளைஞர் நாடாளுமன்ற நிகழ்வுகளைத் திட்டமிட்டிருந்தது. அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும், நாடாள... மேலும் பார்க்க

ராணியின் நினைவாக உருவான `ராணிப்பேட்டை' - ரூ.2.5 கோடியில் புதுப்பொலிவு பெறும் ராஜா – ராணி மண்டபம்!

300 ஆண்டுக்கால வரலாற்றுச் சின்னம்... காலத்தின் சுவடுகளைப் பாதுகாக்க நடைபெறும் புனரமைப்புப் பணிகள்!ஓர் ஊரின் பெயருக்குப் பின்னால் ஒரு வரலாறு இருக்கும். சில ஊர்களின் பெயர்களுக்குப் பின்னால் ஒரு மன்னரின்... மேலும் பார்க்க

Roamie: `பண்டிகைக் கால ஆம்னி பேருந்து கட்டண உயர்வால் அவதிப்படும் மக்கள்'- தீர்வு தருமா ரோமி செயலி?

பண்டிகை காலங்களில் பயணிகளுக்கு இருக்கும் பெரும் சிக்கல்களில் ஒன்று ஆம்னி பேருந்துகளின் கட்டணம். கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என ஆம்னி பேருந்துகளின் சங்கங்களே கேட்டுக்கொண்டாலும், இதுவரை எந்த மாற்ற... மேலும் பார்க்க

இனி PF பேலன்ஸை வாட்ஸ்ஆப்பிலேயே பார்த்துக்கலாம்; வெப்சைட் டவுன் பிரச்னை எல்லாம் கிடையாது! | How to?

வருங்கால வைப்பு நிதி (PF) பேலன்ஸ் செக் செய்வதை எளிமையாக்கியிருக்கிறது அதன் அமைப்பு. இனிமேல் EPFO வலைதளம் அல்லது UMANG ஆப்பிற்குள் சென்று பேலன்ஸ் பார்க்க சிரமப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களுடைய வ... மேலும் பார்க்க