செய்திகள் :

"அங்கிள் விஜய் அவர்களே, இது சாதாரண ஆபீஸ் வேலை கிடையாது!" - மு.க. ஸ்டாலின் தாக்கு!

post image

கோவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் விஜய்யையும், தவெக அரசின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார்.

கட்சி சார்ந்த பல்வேறு நிகழ்வுகளுக்காகத் தற்போது அவர் கோவைக்குச் சென்றிருக்கிறார்.

MK Stalin
MK Stalin

அந்த நிகழ்வில் மு.க. ஸ்டாலின், "அங்கிள் விஜய் அவர்களே! முதலமைச்சர் பொறுப்பு என்பது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வந்து செல்லும் சாதாரண ஆபீஸ் வேலை கிடையாது. இந்த முதலமைச்சர் பொறுப்பிற்காக ஒட்டுமொத்தமாகத் தன்னை ஒப்படைத்துக்கொண்டு வாழ வேண்டும்.

இது ஏதோ சினிமா ஷூட்டிங்கிற்கு கால்ஷீட் டைம் கொடுத்துவிட்டு, வேஷம் போட்டு செட்டுக்குப் போய்வரும் வேலை கிடையாது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அவர் கஷ்டப்பட்டு பாவ்லா காட்டிக் கொண்டிருந்தாலும், அதை ஓவர்டேக் செய்யும் அளவிற்குப் புதுப் புதுப் பிரச்னைகள் கிளம்பிக்கொண்டே இருக்கின்றன.

தினமும் ஏதாவது ஒரு கிரிமினல் வழக்கில் தவெக நிர்வாகிகள் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். டெய்லி தொலைக்காட்சியில் பார்க்கிறீர்கள், பத்திரிகையில் படிக்கிறீர்கள்.

அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் பணம் கேட்டு மிரட்டுகிற வீடியோ, ஆடியோக்கள் லீக் ஆகிக்கொண்டிருக்கின்றன. பலர் வசூல் ராஜாவாக இருக்கிறார்கள். பெண் நிர்வாகிகளுக்கு இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய ஆதாரங்கள் வெளிவருகின்றன.

தவெக அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் போடும் ரீல்ஸ்களை மிஞ்சும் வகையில், அவர்களுடைய திருவிளையாடல்களை அம்பலப்படுத்தக்கூடிய ரீல்ஸ்கள் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துக்கொண்டிருக்கின்றன.

இந்த கேவலங்களை எல்லாம் மறைப்பதற்காகத்தான் முன்னாள் அமைச்சர் நேருவின் வீட்டில் திரும்பத் திரும்ப ரைடு நடத்துகிறார்கள்" என்றவர், "பத்திரிகைக்காரர்களைப் பார்த்தாலே பயந்து ஓடுபவராக முதலமைச்சர் விஜய் இருக்கிறார். இவ்வளவு வீக்கான முதலமைச்சரைத் தமிழ்நாடு இதுவரை பார்த்ததே இல்லை.

MK Stalin
MK Stalin

காரணம் ஊடகங்களைச் சந்தித்தால் அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்று இவருக்குப் புரியாது. அப்போ இன்னும் எக்ஸ்போஸ் ஆகிவிடுவோம் என்று நடுங்குகிறார். ஆனால், அவர் இப்போது நடிகர் விஜய் கிடையாது, முதலமைச்சர் விஜய்!

மக்களின் எந்தக் கேள்விகளுக்கும் பதில் சொல்ல மாட்டேன் என்று அவர் இருக்க முடியாது. பதில் சொல்வது அவருடைய கடமை. நன்றாக ரிகர்சல் பார்த்துவிட்டு, வேன் மேலே ஏறி நின்று ஆடிக்கு ஒரு தடவை, அமாவாசைக்கு ஒரு தடவைதான் பேசுகிறார்.

இவர் பேச வேண்டும் என்றால் மாதம் ஒரு முறை இடைத்தேர்தல் நடத்த வேண்டுமா? அப்போதும் கூட அவர் வாயிலிருந்து பதில் எதுவும் வராது. எதைக் கேட்டாலும் அவரிடம் இருந்து வரக்கூடிய ஒரே பதில் என்ன தெரியுமா? 'திமுக... திமுக... திமுக...' என்பதுதான். பாதி ராத்திரியில் போய் யாராவது எழுப்பிக் கேட்டால் கூட 'திமுக' என்றுதான் எழுந்திருப்பார்" எனப் பேசியிருக்கிறார்.

``ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற தலைப்பில் விதிகளுக்குப் புறம்பாக கல்லூரி நிகழ்வு..." - சு.வெங்கடேசன்

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற தலைப்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் நாடு முழுவதும் இளைஞர் நாடாளுமன்ற நிகழ்வுகளைத் திட்டமிட்டிருந்தது. அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும், நாடாள... மேலும் பார்க்க

ராணியின் நினைவாக உருவான `ராணிப்பேட்டை' - ரூ.2.5 கோடியில் புதுப்பொலிவு பெறும் ராஜா – ராணி மண்டபம்!

300 ஆண்டுக்கால வரலாற்றுச் சின்னம்... காலத்தின் சுவடுகளைப் பாதுகாக்க நடைபெறும் புனரமைப்புப் பணிகள்!ஓர் ஊரின் பெயருக்குப் பின்னால் ஒரு வரலாறு இருக்கும். சில ஊர்களின் பெயர்களுக்குப் பின்னால் ஒரு மன்னரின்... மேலும் பார்க்க

Roamie: `பண்டிகைக் கால ஆம்னி பேருந்து கட்டண உயர்வால் அவதிப்படும் மக்கள்'- தீர்வு தருமா ரோமி செயலி?

பண்டிகை காலங்களில் பயணிகளுக்கு இருக்கும் பெரும் சிக்கல்களில் ஒன்று ஆம்னி பேருந்துகளின் கட்டணம். கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என ஆம்னி பேருந்துகளின் சங்கங்களே கேட்டுக்கொண்டாலும், இதுவரை எந்த மாற்ற... மேலும் பார்க்க

இனி PF பேலன்ஸை வாட்ஸ்ஆப்பிலேயே பார்த்துக்கலாம்; வெப்சைட் டவுன் பிரச்னை எல்லாம் கிடையாது! | How to?

வருங்கால வைப்பு நிதி (PF) பேலன்ஸ் செக் செய்வதை எளிமையாக்கியிருக்கிறது அதன் அமைப்பு. இனிமேல் EPFO வலைதளம் அல்லது UMANG ஆப்பிற்குள் சென்று பேலன்ஸ் பார்க்க சிரமப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களுடைய வ... மேலும் பார்க்க

அட்டைப்படம்

அட்டைப்படம் விகடன் ப்ளஸ் மேலும் பார்க்க

நெல்லை: ஆம்னி பஸ்ஸை நடுவழியில் நிறுத்திய ஓட்டுநர்; போலீஸுடன் வாக்குவாதம்... தவித்த பயணிகள்!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேநேரம் விழாக் காலங்களில் தனியார் பேருந்துகள் விதிமுறைகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்... மேலும் பார்க்க