செய்திகள் :

Exclusive: 6 ஏக்கரில் பிரமாண்ட வீடு; இணையும் நடிகர்கள்... `கார்த்தி 30', `மார்ஷல்' Shoot Update!

post image

படத்திற்கு படம் வித்தியாசமான ஜானர்களில் நடித்து வரும் கார்த்தி, அடுத்தும் ஆச்சர்யங்கள் கொடுக்க காத்திருக்கிறார். அண்ணன் சூர்யாவைத் தொடர்ந்து கார்த்தியும் நேரடி தெலுங்கில் கால் பதித்திருக்கிறார்.. 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தைத் தயாரித்த சித்தாரா நிறுவனம், 'கார்த்தி 30' படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் சீறிப்பாயவிருக்கிறது. முன்னதாக சில காரணங்களால் படப்பிடிப்பு தாமதம் ஆகிறது என்ற பேச்சும் இருந்த நிலையில் விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இனி...

யோகிபாபுவுடன்..

கார்த்தி இப்போது 'டாணாக்காரன்' தமிழ் இயக்கத்தில் 'மார்ஷல்', டோலிவுட் இயக்குநர் கல்யாண் சங்கர் இயக்கத்தில் 'கார்த்தி 30' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 'மார்ஷல்' படத்தில் கார்த்தியின் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன், சத்யராஜ், லால் என நட்சத்திரப் பட்டாளம் இருக்கிறது. ராமேஸ்வரம் பகுதிகளில் இதன் ஷூட்டிங் நடந்து வந்த நிலையில், இப்போது படப்பிடிப்புக்கு சிறிது இடைவெளி விட்டுள்ளனர். கடந்த மே மாதம் கார்த்தியின் பிறந்தநாளில் 'கார்த்தி 30' படத்தின் பூஜை ஹைதராபாத்தில் நடந்தது. இதன் ஹீரோயின் மீனாட்சி சௌத்ரி, 'வாரிசு' தயாரிப்பாளர் தில்ராஜூ, சுனில் எனப் பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.

படப்பூஜையின் போது..

தெலுங்கில் இதற்கு முன் 'மேட்', 'மேட் ஸ்கொயர்', 'டில்லு ஸ்கொயர்' படங்களை இயக்கிய கல்யாண் சங்கர் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் ஷூட்டிங் படப்பூஜை ஆரம்பித்த வேகத்திலேயே ஆரம்பமானது. சில வாரங்கள் நடந்த படப்பிடிப்பில் யோகிபாபு, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் என தமிழ் முகங்கள் பலர் இணைந்தனர். படத்தில பிரமாண்டமான வீடு ஒன்றும் முக்கிய பாத்திரமாக இருக்கிறது. இதற்காக 6 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான வீடு அமைக்கப்பட்டு வருகிறது. 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்திலேயே சூர்யாவின் வீடு மிரட்டலான வீடாக இருந்தது. இதில் அதை விட பல மடங்கு பிரமாண்ட வீடாக அமைத்து வருகின்றனர்.

மீனாட்சி சௌத்ரி

இந்த வீட்டில்தான் முக்கியமான காட்சிகள் படமாக்க திட்டமிட்டுள்ளனர். இப்போது இந்த செட் அமைக்கும் பணியின் காரணமாக படப்பிடிப்புக்கு பிரேக் விட்டுள்ளனர். இந்த செட் ரெடியானதும் படப்பிடிப்பு வேகமெடுக்கும் என்ற பேச்சு இருக்கிறது. 'பொன்னியின் செல்வன்' படத்திற்குப் பிறகு கார்த்தியுடன் ஜெயராம் இணைந்துள்ளார். அனேகமாக டிசம்பரில் படப்பிடிப்பைத் தொடங்கி, ஒரே வீச்சில் நிறைவு செய்கின்றனர். கோடை விடுமுறையில் திரைக்குக் கொண்டுவரவும் திட்டமிட்டு வருவதாகச் சொல்கிறார்கள். இதைப் போல, 'மார்ஷல்' படத்திற்கு ராமேஸ்வரம் பகுதிகளில் பிரமாண்ட செட்டுகள் அமைத்து, படமாக்கினார்கள். அந்த செட் வொர்க்கும் அவ்வப்போது பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. டிசம்பரில் 'மார்ஷல்' படப்பிடிப்பிலும் இணைய கார்த்தி திட்டமிட்டுள்ளார் என்ற பேச்சும் இருக்கிறது.

``'பத்தா' படத்தை இரண்டாவது முறையாகப் பார்த்து ரொம்பவே அழுதேன்..!" - அனுராக் காஷ்யப்

விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளியானப் படம் 'பத்தா'. மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படம், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி-யில் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தில் லிஜோ மோல்... மேலும் பார்க்க

நூறு கோடி வானவில்: "இந்தப் படம் இவ்வளவு நாள் வெளியாகாமல் இருந்தது வருத்தம்" - ஹரிஷ் கல்யாண்

இயக்குநர் சசி எழுதி இயக்​கி​யிருக்கும் படம் ‘நூறு கோடி வானவில்'. இந்தப் படத்​தில் ஹரிஷ் கல்யாண், சித்தி இத்​னானி, கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த், மூர்த்தி உட்​பட பலர் நடித்​துள்ளனர். இதன் படப... மேலும் பார்க்க

Special Show: டிக்கெட் விலையை உயர்த்த கோரிக்கை; காலை 6 மணி காட்சிகளுக்கு அனுமதி; யாருக்கு லாபம்?

சிறப்புக்காட்சிகளுக்குத் தமிழக அரசு தற்போது அனுமதி வழங்கியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு, தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும், தயாரிப்பாளர்கள் சங்கமும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கமு... மேலும் பார்க்க

'சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி' - திரைத்துறையினரின் கோரிக்கைக்கு அனுமதியளித்த தமிழக அரசு!

திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்குத் தினமும் 6 காட்சிகள் காலை 6 மணி முதல், அடுத்த நாள் இரவு 2.30 மணி வரை திரையிட்டுக் கொள்ளத் தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறத... மேலும் பார்க்க