செய்திகள் :

மணப்பாறை: வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல் – பொதுமக்கள் கடும் அவதி!

post image

காவல் நிலையத்தில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வழக்குகளில் தொடர்புடைய வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபற்றி நம்மிடம் பேசிய, பா.ஜ.க மணப்பாறை வடக்கு ஒன்றியத் தலைவர் சித்தாநத்தம் ஆர்.சுப்பிரமணி,

"மணப்பாறை வட்டாட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் காவல் நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், கருவூலம், வட்டாட்சியர் அலுவலகம், இ-சேவை மையம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால், தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு அரசு சார்ந்த பணிகளுக்காக இந்த வளாகத்துக்கு வந்து செல்கின்றனர்.

subramani

குறிப்பாக, சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ஏராளமானோர் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருகின்றனர். ஒரே பகுதியில் பல்வேறு அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளதால் வாகனங்களின் வருகை அதிகரித்து, போதிய இடவசதி இல்லாத காரணத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, மணப்பாறை காவல் நிலையத்தின் மூலம் விபத்துகள் மற்றும் பல்வேறு வழக்குகள் தொடர்பாகப் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் காவல் நிலைய வளாகத்திலும், அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் அதிகளவில் குவிந்து கிடப்பதால், ஏற்கெனவே குறைவாக உள்ள இடவசதி மேலும் பாதிக்கப்பட்டு, பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சிரமத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

vehicles

இதன் காரணமாக வட்டாட்சியர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு அவசரத் தேவைகளுக்காக வரும் முதியவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் எளிதில் சென்றுவர முடியாத சூழல் நிலவுகிறது. மேலும், அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு வெளியேறும் வாகனங்களும், புதிதாக உள்ளே வரும் வாகனங்களும் ஒரே பகுதியில் சிக்கிக்கொள்வதால் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்படுகிறது.

இந்தப் பிரச்னை தொடர்பாக, மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பலமுறை புகார் மனுக்கள் அளித்து, பொதுமக்களின் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறேன். இருப்பினும், இதுவரை பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் உடனடியாகத் தலையிட்டு, காவல் நிலையத்தில் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வழக்குகளில் தொடர்புடைய வாகனங்களின் தற்போதைய நிலையை ஆய்வு செய்து, நீதிமன்ற அனுமதி மற்றும் நடைமுறைகளுக்கு உட்பட்டு உரிய முறையில் அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

vehicles

அதேபோல், அரசு அலுவலக வளாகத்துக்கு வரும் பொதுமக்களின் வாகனங்களை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான இடவசதி, வாகன நிறுத்துமிடம் மற்றும் போக்குவரத்து மேலாண்மை ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தப் போதிய காவல்துறையினரைப் பணியில் ஈடுபடுத்தி, பொதுமக்கள் எவ்வித இடையூறும் இன்றித் தங்களது அரசு அலுவலகப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

vehicles

பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்காகச் செயல்படும் அரசு அலுவலகங்களுக்குச் செல்லவே போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் நிலை மாற வேண்டும். மணப்பாறை வட்டாட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் நிலவும் இப்பிரச்னைக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து தீர்வு காண வேண்டும்" என்று கோரிக்கை விடுத்து முடித்தார்.

அமெரிக்க தேர்தலில் செக்? ஜனநாயகக் கட்சி முன்னிலை! - ட்ரம்பை இந்தத் தோல்வி கட்டுப்படுத்துமா?

அமெரிக்க நாடாளுமன்றத்தில் தற்போது ஜனநாயகக் கட்சியின் கை மேலோங்கியுள்ளது. 2024-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக ட்ரம்ப் இரண்டாவது முறையாகப் பதவியேற்றபோது, காங்கிரஸில் குடியரசுக் கட்சிதான் பெரும்பான்மையாக இருந... மேலும் பார்க்க

US Elections: இந்திய வேர்கள்... அமெரிக்க அரசியல் களம் - மீண்டும் வெற்றி பெற்ற சுஹாஸ் சுப்ரமணியம்!

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த பெற்றோருக்குப் பிறந்த சுஹாஸ் சுப்ரமணியம் (Suhas Subramanyam), ஒபாமா நிர்வாகத்தில் தொழில்நுட்பக் கொள்கைப் பணிகளை மேற்கொண்டு, விர்ஜீனியா மாகாண அரசியலில் ... மேலும் பார்க்க

"பாஜகவின் ஆதரவோடு அதிமுகவும், திமுகவும் ஆட்சியமைக்க முயல்கிறது" - அமைச்சர் நிர்மல்குமார்

மதுரை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியில்அமைச்சர் நிர்மல்குமார் கலந்து கொண்டு கடனுதவி வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களைச் சந்தி... மேலும் பார்க்க

`பெரியார் அறிவுலகத்திற்கு இந்த அரசு மூடுவிழா நடத்தியிருக்கும்; நல்லவேளை..!’ - மு.க.ஸ்டாலின்

கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தி.மு.க தலைவர் ஸ்டாலின் இன்று கோவைக்கு வருகை தந்தார். பின்னர் நிலாம்பூர் பகுதியில் புதிய தி.மு.க கட்சி அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில்... மேலும் பார்க்க

புதிய தலைமைச் செயலகம்: கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்த அரசு? கடுப்பாகும் மீனவர்கள்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக மீனவர்களிடம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த கருத்துக் கேட்பு கூட்டத்தை அரசு ரத்து செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. புதிய தலைமைச் செயலகம் அமை... மேலும் பார்க்க

Ro Khanna: அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளியின் குரல்... மீண்டும் வெற்றி பெற்ற ரோ கண்ணா!

சிலிக்கான் வேலியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான ரோ கண்ணா (Ro Khanna), இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். தொழில்நுட்ப வளர்ச்சி, உற்பத்தித் துறை, வேலைவாய்ப்பு, வெளியுறவுக் கொள... மேலும் பார்க்க