செய்திகள் :

கேரளம்: "அதிக விலைக்கு மின்சாரம் வாங்க அவசரம் காட்டுவது ஏன்?"- பினராயி விஜயன் கேள்வி

post image

கேரளத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் ஒரு பாகமாக கேரள மின்சார வாரியத் தலைவராக இருந்த ராஜமாணிக்கம் ஐ.ஏ.எஸ் மாற்றப்பட்டு, புதிய தலைவராக பிரசாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

கேரளத்தில் நிலவும் மின் தட்டுப்பாட்டைப் போக்க, மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் வழித்தட அணுகல் கட்டமைப்பின் கீழ் வெளிமாநிலத் தனியார் இடைத்தரகு நிறுவனம் ஒன்றிடமிருந்து யூனிட் ரூ.8.63 என்ற வீதத்தில் 500 மெகாவாட் மின்சாரம் வாங்குவதற்கு அரசு மட்டத்தில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், அதிக மின் நுகர்வு இல்லாத பகல் நேரங்களிலும் கூட யூனிட்டுக்கு ரூ.8.63 வீதம் தொடர்ந்து மின்சாரத்தைக் கட்டாயம் வாங்க வேண்டும் என்ற கடுமையான நிபந்தனை இதில் உள்ளது.

இதனால் அரசுக்குத் தேவையின்றி ரூ.727 கோடி முதல் ரூ.903 கோடி வரை கூடுதல் இழப்பு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டது. மேலும், உச்சக்கட்ட மின்தேவை நேரங்களில் இந்நிறுவனம் வழங்கும் மின்சாரம் போதாமல் போனால், வெளிச்சந்தையில் யூனிட் ரூ.20 வரை கூடுதல் விலை கொடுத்து மீண்டும் மின்சாரம் வாங்க வேண்டிய சூழல் உருவாகும். மாநிலத்தின் மின் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்ய ஹிமாச்சலப் பிரதேச அரசின் பொதுத்துறை நிறுவனத்திடமிருந்து யூனிட் ரூ.12.50 என்ற வீதத்தில் தடையில்லா மின்சாரம் பெற வாய்ப்பு இருந்தும், அதை வேண்டுமென்றே அரசு புறந்தள்ளிவிட்டுத் தனியாருக்குச் சாதகமாகச் செயல்பட்டதாகப் புகார்கள் எழுந்தன.

இந்தத் தனியார் ஒப்பந்தத்தால் அரசுக்கு ஏற்படவுள்ள நிதி இழப்புகள் குறித்து மின்வாரியத் தலைவராக இருந்த எம்.ஜி. ராஜமாணிக்கம் விளக்கமாக அறிக்கையளித்தார். இதைத்தொடர்ந்து முதல்வர் அலுவலகமும் தலைமைச் செயலாளரும் கொடுத்த அழுத்தம் காரணமாகவே அவர் பதவியிலிருந்து பழிவாங்கும் நோக்குடன் மாற்றப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜமாணிக்கம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜமாணிக்கம்

இதற்கு சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பினராயி விஜயன் கூறுகையில், "மின்சார நெருக்கடியைப் பயன்படுத்தி மாநிலத்தில் மாபெரும் ஊழலை அரங்கேற்ற அரசு மட்டத்தில் பகிரங்க முயற்சி நடப்பதாக வெளியாகும் தகவல்கள் கவலை அளிக்கிறது. முறையான தலையீடுகள் மற்றும் திறமையான நிர்வாக அணுகுமுறைகள் மூலம் இந்த மின் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, எந்தவித நியாயமுமற்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மாநிலக் கஜானாவைக் கொள்ளையடிக்கும் முயற்சிகள்தான் இப்போது தீவிரமாக நடக்கின்றன.

குறைந்த செலவில் மின்சாரம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருந்தபோதும், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன் அனுமதியின்றி தனியார் நிறுவனத்திடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்க அவசரம் காட்டப்படுகிறது. பகல் நேரங்களில் கூட இந்த மின்சாரத்தை வாங்குவதால் மாநில அரசுக்கு ரூ.727 கோடிக்கு மேல் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். இதற்கு வாரியமும் துறை அமைச்சரும் ஆரம்பத்திலேயே எதிர்ப்புத் தெரிவித்தும், முதல்வர் அலுவலகத்தின் நேரடித் தலையீட்டின் மூலம் அதிகாரிகளை அச்சுறுத்தி, அழுத்தம் கொடுத்து ஒப்பந்தத்தை முன்னெடுத்துள்ளனர்.

பினராயி விஜயன்

இந்த ஊழல் ஒப்பந்தத்திற்குத் துணைநிற்காத நேர்மையான அதிகாரிகளைப் பழிவாங்கும் நோக்குடன் பதவியிலிருந்து அரசு விரட்டியடித்திருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து மட்டுமே மின்சாரம் கொள்முதல் செய்யப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் முன்னர் அளித்த உறுதிமொழி இப்போது காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.

மக்கள் வரிப்பணத்தைச் சூறையாடும் வகையில் தனியார் நிறுவனங்களுடன் போடப்படும் இந்தத் திரைமறைவுப் பேரங்கள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்தச் சர்ச்சைக்குரிய ஒப்பந்தம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும், மின்வாரியத் தலைவர் பதிவுசெய்த முழுமையான ஆட்சேபனை கருத்துக்களையும் பொதுமக்களின் பார்வைக்கு அரசு உடனடியாக வெளியிட வேண்டும்" என்றார்.

திருவண்ணாமலை: நந்தி வாகனத்தில் ஏறி தூய்மைப் பணி; ஊழியர் சஸ்பெண்ட்; தீயணைப்புத் துறையினரும் வருத்தம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், திருக்கார்த்திகை தீபத்திருவிழா வரும் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த நிலையில், திருக்கோயிலின் கோபுரங்களைச் சுத்தம் செய்து தருமாறு கோ... மேலும் பார்க்க

`லயோலா மணி புகார் கொடுத்திருக்கணும்; அமைச்சருக்கே விழிப்புணர்வு இல்லையா?'- வழக்கறிஞர் சொல்வது என்ன?

தமிழ்நாடு அரசின் சார்பாக சென்னை அருங்காட்சியக அரங்கில் தமிழ்நாடு நாள் விழா (01.11.2026) அன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், வன்னி அரசு, சி. விஜயலட்சுமி, சட்டமன்ற ... மேலும் பார்க்க

US Elections: அமெரிக்க செனட் வரலாற்றில் முதல் தன்பாலின ஈர்ப்பாளர்; இணையுடன் மேடையேறிய கிறிஸ் பப்பாஸ்

அமெரிக்க செனட் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம், அந்நாட்டுச் செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் வெளிப்படையான தன்பாலின ஈர்ப்பாளர் - ஆண் என்ற வரலாற்றைப் படைத்திருக்கிறார், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த... மேலும் பார்க்க

இடைத்தேர்தல் ரேஸ்: ED போடும் பிரஷர்... விராலிமலையை வசமாக்க முயற்சியில் 'ரசகுல்லா' விஜயபாஸ்கர்!

பொங்கல், தீபாவளி வந்தாலே போதும்... புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலைத் தொகுதி வாக்காளர்களுக்குப் பரிசுகளையும் இனிப்புகளையும் வாரி வழங்கி வழங்குவது முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் நெடுநாள் பாணி. இப்ப... மேலும் பார்க்க

6am Special Show: "பொழுதுபோக்குக்கு முன்னுரிமை கொடுத்து எந்தச் சமூகம் வளர்ந்திருக்கிறது?" - சீமான்

தமிழ்நாட்டில் தியேட்டர்களில் காலை 6 மணி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு புதிய அரசாணையை வெளியிட்டிருந்தது. இதனை விமர்சித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெ... மேலும் பார்க்க

வாளுடன் வன்முறை வீடியோ: 34 வழக்குகள், 9 கைது, 210 அக்கவுண்ட்கள் முடக்கம்; சிவகங்கையில் அதிரடி

கைகளில் வாள்களையும் கத்திகளையும் ஏந்திக்கொண்டு, இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் எக்ஸ் பக்கங்களில் "விரைவில் தலைகள் சிதறும்!" என வாள் காட்டி வன்முறை வசனம் பேசி ரீல்ஸ் மோகத்தில் திரிந்த இளைஞர... மேலும் பார்க்க