செய்திகள் :

இடைத்தேர்தல் ரேஸ்: ED போடும் பிரஷர்... விராலிமலையை வசமாக்க முயற்சியில் 'ரசகுல்லா' விஜயபாஸ்கர்!

post image

பொங்கல், தீபாவளி வந்தாலே போதும்... புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலைத் தொகுதி வாக்காளர்களுக்குப் பரிசுகளையும் இனிப்புகளையும் வாரி வழங்கி வழங்குவது முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் நெடுநாள் பாணி.

இப்போது தொகுதிக்கு இடைத்தேர்தல் வேறு நெருங்கிவரும் சூழலில் கேட்கவா வேண்டும்?
தீபாவளி கிஃப்ட் ஒருபுறம் என்றால், அமலாக்கத்துறையின்  விசாரணை இன்னொருபுறம்... விராலிமலைக் களம் இப்போது பட்டாசாய் வெடிக்கிறது!

‘விசில்’ உடன் ரசகுல்லா!

2026 பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று, எம்.எல்.ஏ-வான அடுத்த 38 நாட்களிலேயே பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துவிட்டு தவெகவுக்குத் தாவினார் விஜயபாஸ்கர். தான் தவெகவில் இணைவதற்கு முன்னதாகவே, ஜூன் மாதத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறி வீட்டுக்கு வீடு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரம், ஸ்வீட் பாக்ஸ், பேனா மற்றும் நன்றி தெரிவிக்கும் கடிதம் அடங்கிய பிரத்யேக பரிசுத் தொகுப்புகளை வழங்கித் தன் தொகுதியைத் தக்கவைக்கும் முதற்கட்ட அஸ்திரத்தை ஏவினார்.


தற்போது தவெகவில் இணைந்து இடைத்தேர்தல் களம் சூடான நிலையில், அதே பாணியில் 2 கிலோ எவர்சில்வர் டப்பாவில் ரசகுல்லா, குலோப் சாமுன் இனிப்புகளோடு, தவெகவின் தேர்தல் சின்னமான 'விசில்' அடங்கிய வாழ்த்துப் பையை தொகுதி வாக்காளர்களின் வீடுகளுக்கே அனுப்பி வைத்து அடுத்தகட்ட அஸ்திரத்தை ஏவியுள்ளார்.

செங்கோட்டையன்  கொடுத்த சிக்னல்...!

இடைத்தேர்தலில் தவெகவின் வேட்பாளராகச் சி.விஜயபாஸ்கர்தான் களம் காண்பார் என மூத்த நிர்வாகி கே.ஏ. செங்கோட்டையன்  சமீபத்தில் மேடையில் சூசகமாக அறிவித்து அனல் பறக்க விட்டிருந்தார். ஆனால், அமலாக்கத்துறையின் விசாரணை சம்மன் மற்றும் சொத்துக் குவிப்பு வழக்கு என சி.வி.பி அடுத்தடுத்த சட்டச் சிக்கல்களைச் சந்தித்து வருவது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

"நாங்கள் தூய்மையான அரசியல் சக்தி" என முழங்கி வரும் தவெக, ஊழல் வழக்கு மற்றும் ஈ.டி வளையத்தில் சிக்கி இருக்கும் ஒருவரை எப்படி வேட்பாளராக முன்னிறுத்த முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகளும் இதைவே முக்கியப் பிரச்சாரப் பொருளாக மாற்றக் காத்திருக்கின்றன.

மீண்டும் சீட்..?

ஏற்கனவே தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்களில் அதிமுகவிலிருந்து வந்தவர்களையே மீண்டும் களமிறக்கி தவெக பட்ட பாடு சொல்லி மாளாது. அந்த 'விபரீதப் பரீட்சை' அனுபவத்திற்குப் பிறகு தவெக தலைமை மிகவும் யோசித்து வருகிறது. இதற்கிடையில்,  விராலிமலையில் கடந்த பொதுத் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்த முருகேசனும், இத்தகைய சூழ்நிலையைப் பயன்படுத்தி எப்படியும் தனக்கே இடைத்தேர்தலில் சீட் வாங்கிவிட வேண்டும் என்று தீவிரமாக முயன்று வருகிறார்.

மறுபுறம், விராலிமலையை எப்படியாவது அதிமுகவிடமிருந்து மீட்டுவிட வேண்டும் என்று திமுகவும் கங்கணம் கட்டி வேலைகளைத் தொடங்கியுள்ளது. இரட்டை இலையைக் கைவிட்டு ஓடிய விஜயபாஸ்கரைப் பழிதீர்க்க அதிமுகவும் சரியான நேரத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.

சி. விஜயபாஸ்கர்

 சுற்றி வளைக்கும் சட்டச் சிக்கல்..!

சொத்துக் குவிப்பு வழக்கு, சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டம்  இத்துடன் அமலாக்கத்துறையின் சம்மன் ஒரு பக்கம்  என விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யாவை சட்டச் சிக்கல் சுற்றி வளைத்துள்ளது.   நாளை (நவம்பர்-6 )வெள்ளிக்கிழமை சென்னை மண்டல அலுவலகத்தில் ஆஜராகக் கெடுவும் விதிக்கப்பட்டுவிட்டது.

ஒருபக்கம் ஈ.டி விசாரணைச் சம்மன், சொத்துக் குவிப்பு வழக்கு, சீட் கிடைப்பதில் நிலவும் உட்கட்சிப் போட்டி,  இதையெல்லாம் மீறி, வீட்டுக்கு வீடு ரசகுல்லாவும் ‘விசில்’ பரிசுகளுமாக இடைத்தேர்தல் பணிகளில் பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கிறார் விஜயபாஸ்கர்.!

US Elections: அமெரிக்க செனட் வரலாற்றில் முதல் தன்பாலின ஈர்ப்பாளர்; இணையுடன் மேடையேறிய கிறிஸ் பப்பாஸ்

அமெரிக்க செனட் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம், அந்நாட்டுச் செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் வெளிப்படையான தன்பாலின ஈர்ப்பாளர் - ஆண் என்ற வரலாற்றைப் படைத்திருக்கிறார், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த... மேலும் பார்க்க

6am Special Show: "பொழுதுபோக்குக்கு முன்னுரிமை கொடுத்து எந்தச் சமூகம் வளர்ந்திருக்கிறது?" - சீமான்

தமிழ்நாட்டில் தியேட்டர்களில் காலை 6 மணி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு புதிய அரசாணையை வெளியிட்டிருந்தது. இதனை விமர்சித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெ... மேலும் பார்க்க

வாளுடன் வன்முறை வீடியோ: 34 வழக்குகள், 9 கைது, 210 அக்கவுண்ட்கள் முடக்கம்; சிவகங்கையில் அதிரடி

கைகளில் வாள்களையும் கத்திகளையும் ஏந்திக்கொண்டு, இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் எக்ஸ் பக்கங்களில் "விரைவில் தலைகள் சிதறும்!" என வாள் காட்டி வன்முறை வசனம் பேசி ரீல்ஸ் மோகத்தில் திரிந்த இளைஞர... மேலும் பார்க்க

'முதலமைச்சரே மாணவர்களிடம் பாரபட்சம் காட்டலாமா?' - சர்ச்சையாகும் தவெகவின் கல்வி விருது!

'தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா' என்ற பெயரில் தவெக சார்பில் 10, 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் மாநில, மாவட்டளவில் மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு முதல்வர் விஜய் விருது வழங்கியிருக்கிறார... மேலும் பார்க்க

அக்னிவீரர்கள்: கூடுதலாக 2 ஆண்டுகள் ராணுவப் பணி; நிரந்தரப் பணிக்குத் மீண்டும் வாய்ப்பு; முழு விவரம்

ராணுவத்தில் சேர வேண்டும், நாட்டுக்காகப் பணியாற்ற வேண்டும் என்ற கனவுடன் அக்னிபத் திட்டத்தில் இணையும் இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. நான்கு ஆண்டுகள் மட்டுமே பணியாற்ற முடியும் என்ற நிலை... மேலும் பார்க்க

வேட்பாளரை அறிவித்த மதபோதகர்; சலசலப்பில் TVK டு வராத முதல்வர்; ஏக குஷியில் நிர்மல் தரப்பு! | கழுகார்

சலசலப்பில் நெல்லை த.வெ.க!வேட்பாளரை அறிவித்த மதபோதகர்...அம்பாசமுத்திரம் உள்பட 5 தொகுதி இடைத்தேர்தல் மீதான எதிர்பார்ப்பு எகிறிவரும் நிலையில், இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்... மேலும் பார்க்க