செய்திகள் :

திருவண்ணாமலை திருக்கார்த்திகை திருவிழா; மகா தீபம் நாளில் பக்தர்கள் மலை ஏறத் தடை!

post image

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், புகழ்பெற்ற `திருக்கார்த்திகை தீபத் திருவிழா’ வரும் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாள்கள் வெகு சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 24-ம் தேதி நடைபெறும் பத்தாம் நாள் திருவிழா மிக முக்கியமானது. அன்று அதிகாலை கோயிலுக்குள் பரணி தீபமும், கோயில் பின்புறத்தில் உள்ள 2,668 அடி உயர மலைமீது மகா தீபமும் ஏற்றப்படும்.

மலைமீது ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாள்கள் காட்சித் தரும். நினைத்தாலே முக்தி தரும் இந்த அற்புதமான தலத்தில் ஏற்றப்படும் தீபங்களை கண் குளிரப் பார்த்து தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் நாடு முழுவதுமிருந்து 30 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகிறார்கள்.

மகா தீபம்

இந்த நிலையில், தீப மலைமீது ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க். கடந்த காலங்களில், இரண்டாயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் மலைமீது ஏறி மகா தீபத்தை தரிசிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

இந்த நிலையில்தான் 2024 ஆண்டு கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டு, அதன்தொடர்ச்சியாக தீப மலையில் நிலச்சரிவு உண்டானது. இதனால், உயிர்சேதம் ஏற்பட்டு மலை ஏறுவதற்கு தகுந்த பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவியதால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி, தொடர்ந்து 2 ஆண்டுகளாக மலை ஏறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த ஆண்டும், வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதால், மலை ஏறுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக ஆட்சியர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார்.

திருப்பதி: பக்தர்களுக்கான புதிய வழிகாட்டிச் செயலி... Venkatadri App-ன் 7 முக்கிய அம்சங்கள் தெரியுமா?

திருப்பதி சென்றால் திருப்பம் வரும் என்பார்கள். அத்தகைய பிரசித்திபெற்ற திருப்பதி வேங்கடாஜலபதியை ஆண்டுதோறும் தோராயமாக 2.5 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்களும், மாதந்தோறும் 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்களு... மேலும் பார்க்க

பெரம்பூர்: 53 அடி உயரம்; 3000க்கும் மேற்பட்ட பொம்மைகள்; உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த கொலு

ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்த பிரமாண்ட நவராத்திரி கொண்டாட்டம், பாரம்பர்யத்தையும் கலைநயத்தையும் இணைத்து சென்னையின் கலாசார அடையாளமாக உருவெடுத்த சாதனை!சென்னையின் நவராத்திரி கொண்டாட்டங்... மேலும் பார்க்க

ஈரோடு: அலங்கரிப்பட்ட‌ சப்பரத்தில் அருள்பாலித்த திகினாரை ரங்கசாமி மல்லிகார்ஜுனா, மனமுருகிய பக்தர்கள்!

ஈரோடு தாளவாடியில் தெப்பத்திருவிழாஈரோடு தாளவாடியில் தெப்பத்திருவிழாஈரோடு தாளவாடியில் தெப்பத்திருவிழாஈரோடு தாளவாடியில் தெப்பத்திருவிழாஈரோடு தாளவாடியில் தெப்பத்திருவிழாஈரோடு தாளவாடியில் தெப்பத்திருவிழாஈர... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: சமஸ்தான வாரிசு உரிமை யாருக்கு? - முதல் மரியாதை சர்ச்சையால் தடைபட்ட விஜயதசமி ஊர்வலம்!

ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் தங்கள் குலதெய்மாக ராஜ ராஜேஸ்வரி அம்மனை வழிபட்டு வருகின்றனர். இதற்கென ராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு கோயில் உள்ளது. இங்கு நவராத்திரி திருவிழா ஆண்ட... மேலும் பார்க்க

நவராத்திரி: நெல்லை டவுனில் சங்கமித்த 37 அம்மன் சப்பரங்கள்... தசரா நிறைவு நாளில் களைகட்டிய விழா!

ஒன்பது நாள் அலங்காரம்... பத்தாம் நாள் மகிஷாசுர வதம்! நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமியில், மின்னொளியில் ஜொலிக்கும் 37 அம்மன் சப்பரங்கள் நெல்லையப்பர் கோயில் தேரடியில் சங்கமித்த காட்சி, திருநெல்வேலி... மேலும் பார்க்க

கருங்காளி, மயான காளி வேடங்களில் பக்தர்கள்; குலசை முத்தாரம்மன் கோவில் திருவிழா கோலாகலம்!| Photo Album

குலசை முத்தாரம்மன் கோவில் திருவிழாகுலசை முத்தாரம்மன் கோவில் திருவிழா!குலசை முத்தாரம்மன் கோவில் திருவிழா!குலசை முத்தாரம்மன் கோவில் திருவிழா!குலசை முத்தாரம்மன் கோவில் திருவிழா!குலசை முத்தாரம்மன் கோவில் ... மேலும் பார்க்க