செய்திகள் :

ராமநாதபுரம்: சமஸ்தான வாரிசு உரிமை யாருக்கு? - முதல் மரியாதை சர்ச்சையால் தடைபட்ட விஜயதசமி ஊர்வலம்!

post image

ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் தங்கள் குலதெய்மாக ராஜ ராஜேஸ்வரி அம்மனை வழிபட்டு வருகின்றனர். இதற்கென ராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு கோயில் உள்ளது. இங்கு நவராத்திரி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். விழாவின் முக்கிய நிகழ்வான அசுரனை அம்புவிட்டு வதம் செய்யும் நிகழ்வும் நடைபெறும்.

இந்த ஆண்டும் நவராத்திரி திருவிழா கொண்டாடப்பட்டு அம்மன் அம்புவிடுவதற்காக அரண்மனையில் இருந்து புறப்பாடு ஆகியது. அப்போது ராணி ராஜேஸ்வரி நாச்சியாரின் வாரிசுகளுக்கும், மறைந்த ராஜா குமரன் சேதுபதி வாரிசுகளுக்கும் இடையே ஊர்வலத்தை துவக்கி வைக்கும் உரிமை குறித்து பிரச்னை எழுந்தது.

ராமநாதபுரம் அரண்மனை
ராஜ ராஜேஸ்வரி அம்மன்

இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அம்மன் ஊர்வலம் செல்லாமல் மீண்டும் அரண்மனை வளாகத்திற்குள் கொண்டு செல்லப்பட்டு அங்கேயே அம்பு விடும் நிகழ்வு நடந்தது. இதனால் அரண்மனைக்கு வெளியேயும், அம்மன் வழக்கமாக அம்பு விடும் மகர்நோன்பு பொட்டலிலும் காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ராஜேஸ்வரி (நடுவில் இருப்பவர்)

ஆண்டாண்டு காலமாக சிறப்பாக நடந்து வந்த ராஜ ராஜேஸ்வரி அம்மனின் ஊர்வலம், அரண்மனை வாரிசுகளுக்கு இடையே நடந்த வாரிசு உரிமை பிரச்னையால் தடைபட்ட சம்பவம், ராமநாதபுரம் பொதுமக்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

நவராத்திரி: நெல்லை டவுனில் சங்கமித்த 37 அம்மன் சப்பரங்கள்... தசரா நிறைவு நாளில் களைகட்டிய விழா!

ஒன்பது நாள் அலங்காரம்... பத்தாம் நாள் மகிஷாசுர வதம்! நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமியில், மின்னொளியில் ஜொலிக்கும் 37 அம்மன் சப்பரங்கள் நெல்லையப்பர் கோயில் தேரடியில் சங்கமித்த காட்சி, திருநெல்வேலி... மேலும் பார்க்க

கருங்காளி, மயான காளி வேடங்களில் பக்தர்கள்; குலசை முத்தாரம்மன் கோவில் திருவிழா கோலாகலம்!| Photo Album

குலசை முத்தாரம்மன் கோவில் திருவிழாகுலசை முத்தாரம்மன் கோவில் திருவிழா!குலசை முத்தாரம்மன் கோவில் திருவிழா!குலசை முத்தாரம்மன் கோவில் திருவிழா!குலசை முத்தாரம்மன் கோவில் திருவிழா!குலசை முத்தாரம்மன் கோவில் ... மேலும் பார்க்க

திரும்பும் திசையெங்கும் செவ்வாடை பக்தர்களின் ஓங்கி ஒலிக்கும் காளி கோஷம்! குலுங்கி வரும் குலசை தசரா!

இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் குலசை என்றழைக்கப்பட்டும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் சிறப்பு வாய்ந்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி பல்வேறு ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாய்ந்த வில்வ மரம்; மீண்டும் உயர்பெற்றதால் பக்தர்கள் மகிழ்ச்சி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் சம்பந்த விநாயகர் சன்னதி அருகே ஸ்தல விருட்சமான மகிழ மரம் உள்ளது. அதை பக்தர்கள் சிரத்தையுடன் வழிபடுவர். அதேபோல, பிடாரி அம்மன் சன்னதிக்கு எதிரே 100 ஆண்டுகள் பழ... மேலும் பார்க்க

இங்கு நேத்ர விளக்கு ஏற்றினால் நம் வாழ்க்கை ஒளிரும்! - சுக்ர பகவான் கொடுத்த வாக்குறுதி

தீபாவளி என்றதுமே ஒளி சிந்தும் தீபங்கள்தானே நம் நினைவுக்கு வரும்... அந்த வகையில் இந்த தீபாவளியை ஒட்டி நாமும் தீபத்துடன் தொடர்புடைய வைணவ க்ஷேத்திரம் ஒன்றின் சிறப்பை அறிவோம். சுக்ர பகவானே சரவிளக்காகத் தி... மேலும் பார்க்க