செய்திகள் :

நெருங்கும் நவம்பர் 3; பேச்சுவார்த்தை, போர் - இரண்டிற்கும் தயாராகும் ஈரான் - என்ன நடக்கிறது?

post image

வருகிற நவம்பர் 3-ம் தேதி அமெரிக்காவில் மிட் டேர்ம் தேர்தல் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, ‘அதுவரை ஈரான் மீது அமெரிக்கா எந்தத் தாக்குதலும் நடத்தாது’ என்று அறிவித்திருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

நவம்பர் 3-ம் தேதிக்கு இன்னும் பத்து நாள்களே உள்ளன. ஆனால், இந்த இடைப்பட்ட காலத்தில், இரு நாடுகளுக்கும் இடையே எந்தவொரு பாசிட்டிவான பேச்சுவார்த்தையும் நடந்ததாகத் தெரியவில்லை. ஹார்முஸ் நீர்ச்சந்தியும் முழுமையாகத் திறக்கப்படவில்லை.

ஈரான் - மொஜ்தபா ஹொசைனி கமேனி
ஈரான் - மொஜ்தபா ஹொசைனி கமேனி

நவம்பர் 3-ம் தேதி நெருங்குவதால், ஈரான் அடுத்தக்கட்ட நகர்வுகளைத் திட்டமிடத் தொடங்கிவிட்டது போலும். நேற்று ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தபா காமேனியை ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் காலிபாஃப் சந்தித்திருக்கிறார்.

இது குறித்து மொஜ்தபா தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தச் சந்திப்பில் அமெரிக்கா-சியோனிச (இஸ்ரேல்) எதிரி நாடுகளின் ராணுவப் படைகள், பொருளாதாரத் தடைகள் மற்றும் கருத்துப் பரப்புரைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும், ஈரானின் அதிகாரம் மற்றும் பாதுகாப்பை இன்னும் பலப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மொஜ்தபாவின் பதிவிலிருந்து நவம்பர் 3-ம் தேதிக்குப் பின், அமெரிக்காவை எதிர்கொள்வதற்கான பிளானை ஈரான் தயார் செய்கிறது என்று தெரிகிறது.

அப்பாஸ் அராக்சி
அப்பாஸ் அராக்சி

அராக்சியின் கட்டுரை

ஃபைனான்சியல் டைம்ஸ் நாளிதழில் ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி எழுதியுள்ள கட்டுரையில், “நியாயமான ஒரு தீர்வை எட்டுவதற்கு அமெரிக்காவிற்கு உண்மையான விருப்பம் இருக்கிறது என்றால், ராஜதந்திரத்திற்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்க ஈரான் தயாராக உள்ளது.

ஆனால், அமெரிக்கா ராஜதந்திரத்தைக் கைவிட்டுப் போரைத் தேர்ந்தெடுத்தால், அது நிச்சயமாக ஸ்ட்ரேட்டஜிக் தோல்வியில்தான் போய் முடியும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆக, ஈரான் பேச்சுவார்த்தை, தாக்குதல் என இரண்டிற்கும் தயாராக உள்ளது. இனி முடிவு அமெரிக்காவின் கையில்தான் உள்ளது.

விழுப்புரம்: செஞ்சி சிறுமி மாயமான விவகாரத்தில் பின்தங்கிய காவல்துறை; களமிறங்கிய சிபிசிஐடி போலீஸார்!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஆலம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த 11-ம் தேதி தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். அதன் பிறகு இரவு தன்னுடைய பெற்றோருடன் தூங்கிக் கொண்... மேலும் பார்க்க

காணாமல் போன சிறுமி; "டம்மி ஆட்சியில் பச்சை குழந்தைகளுக்குக்கூட பாதுகாப்பில்லை" - உதயநிதி கண்டனம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த 12-ம் தேதி நள்ளிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென காணாமல் போனார்.இது குறித்து சிறுமியின் பெற்றோா் கொ... மேலும் பார்க்க

நாதக கார்த்திகா கைது: "நீங்கள் வேலை செய்கின்ற இடத்தால் விளைந்த நோய்" - வன்னிஅரசுக்கு அ. ராசா பதில்

தாராபுரம் நாம் தமிழர் வேட்பாளரான கார்த்திகா மீது தேர்தல் பரப்புரையின்போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதல்வர் சென்ற பாதையில் இடையூறு செய்தது உள்ளிட்ட சம்பவங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த... மேலும் பார்க்க

ஜெம் வீரமணியிடம் ரூ.100 கோடி வாங்கிய பிரகாஷ்; லண்டனுக்குத் தப்பியவரை பிடிக்க 'புளூ கார்னர்' நோட்டீஸ்

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கிரானைட் அதிபர் வீரமணி கைதாகி சிறையில் இருக்கிறார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக, சாந்தி, அவரது கணவர் மகேந்திரன் உள்ளிட்டோரும் கைதாகி, புழல் சிறையில் அடைக்... மேலும் பார்க்க

கார்த்திகா கைது விவகாரம்: 'திமுகவுக்கும் வெட்கமில்லை, நாதகவுக்கும் வெட்கமில்லை!' – வன்னிஅரசு காட்டம்

தாராபுரம் நாம் தமிழர் வேட்பாளரான கார்த்திகா மீது தேர்தல் பரப்புரையின்போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதல்வர் சென்ற பாதையில் அனுமதி இன்றி பரப்புரை மேற்கொண்டது உள்ளிட்ட சம்பவங்களில் வழக்குப்பதிவு... மேலும் பார்க்க

``ஆதவ் அர்ஜுனா நிழல் முதலமைச்சர் போல் செயல்படுகிறார்..!" - கே.பி.முனுசாமி விமர்சனம்

"தேர்தல்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் ராகுல் காந்தியை யாரும் விமர்சிப்பது இல்லை. ஆனால், சாதாரண விவசாயியாக இருந்து பொதுச் செயலாளராக உயர்ந்த எடப்பாடி பழனிசாமியை மட்டும் விமர்சிக்கிறார்கள்" என்... மேலும் பார்க்க