செய்திகள் :

நாதக கார்த்திகா கைது: "நீங்கள் வேலை செய்கின்ற இடத்தால் விளைந்த நோய்" - வன்னிஅரசுக்கு அ. ராசா பதில்

post image

தாராபுரம் நாம் தமிழர் வேட்பாளரான கார்த்திகா மீது தேர்தல் பரப்புரையின்போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதல்வர் சென்ற பாதையில் இடையூறு செய்தது உள்ளிட்ட சம்பவங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் (அக். 20) கோவையில் உள்ள இல்லத்திற்குச் சென்ற தாராபுரம் காவல்துறையினர் கார்த்திகா, அவரின் கணவர் உட்பட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 6 பேரைக் கைது செய்திருந்தனர்.

கார்த்திகா
கார்த்திகா

தாராபுரம் இடைத்தேர்தல் வேட்பாளர் கார்த்திகாவின் இந்தக் கைதுக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். தவிர திமுக, அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் கார்த்திகாவின் கைதுக்குக் கண்டனங்கள் எழுந்தன.

குறிப்பாக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், “ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை, கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பால் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும். அத்தகையோரைக் கைது செய்து அச்சுறுத்துவதன் மூலமாக இந்த அரசு எதைச் சாதிக்கப் போகிறது? சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாக த.வெ.க. அரசு நடந்துகொள்கிறது" என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இதுகுறித்து அமைச்சர் வன்னி அரசு தனது எக்ஸ் தளப்பக்கத்தில், "ஆரியக் கடப்பாறை கொண்டு திராவிடக் கோட்டையை இடிப்பேன் என்று சொன்னவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள். இந்தியாவில் நடக்கிற யுத்தமே ஆரிய – திராவிட யுத்தம்தான் என வரலாற்று ஆய்வுகளோடு அம்பலப்படுத்தியவர் புரட்சியாளர் அம்பேத்கர். அதையே தமிழ்நாட்டில் பரப்புரை செய்தவர் தந்தை பெரியார்.

அப்படிப்பட்ட பெரியாரையே 'ஒரு மண்ணு' என இழிவுபடுத்தியவர் சீமான். திராவிடக் கோட்பாட்டையும் சனாதன எதிர்ப்பையும் அரசியல் படுத்தியவர் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும். அப்படிப்பட்ட கலைஞரைத் 'தெலுங்கன்' என்றும் 'திருட்டு திமுக' என்றும் மிக கேவலமாக, அநாகரிகமாக மேடைகளில் பிதற்றியவர் சீமான்.

அதுமட்டுமல்ல, கலைஞர் அரசாணை பிறப்பித்த ஒரே காரணத்தால், மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை நிராகரித்த பார்ப்பனிய அடிமைதான் சீமான்.

வன்னி அரசு
வன்னி அரசு

இப்படி கோட்பாட்டு வழியிலும் தனிநபர் தாக்குதலிலும் ஈடுபட்ட பிழைப்புவாதி சீமானின் இழிவான அரசியலை திமுக மறந்திருக்கலாம். விடுதலைச் சிறுத்தைகளைப் பொறுத்தவரை தந்தை பெரியாரையும் புரட்சியாளர் அம்பேத்கரையும் ஏற்றுக்கொண்டவர்களைத்தான் ஏற்கும்; பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது. இப்போது திமுகவுக்கும் வெட்கமில்லை; நாதகவுக்கும் வெட்கமில்லை” என்று காட்டமாகப் பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவைத் தொடர்ந்து திமுக எம்.பி ஆ. ராசா, "'அரைவேக்காடு'களின் ஆட்சியில் ஒரு அரசியல் கட்சி பெண் நிர்வாகியின் 'தேவையற்ற கைதை' கண்டிப்பது அக்கட்சியின் கொள்கைகளையும் விமர்சனங்களையும் ஆதரிப்பது ஆகாது என்பதை புரிந்து கொள்ள முடியாதவரல்ல நீங்கள். இந்தத் 'தடுமாற்றம்' தன்னால் வந்ததல்ல; ’வேலை’ செய்கின்ற இடத்தால் விளைந்த நோய் - Occupational Hazard!" என்று வன்னியரசை விமர்சித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

நெருங்கும் நவம்பர் 3; பேச்சுவார்த்தை, போர் - இரண்டிற்கும் தயாராகும் ஈரான் - என்ன நடக்கிறது?

வருகிற நவம்பர் 3-ம் தேதி அமெரிக்காவில் மிட் டேர்ம் தேர்தல் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, ‘அதுவரை ஈரான் மீது அமெரிக்கா எந்தத் தாக்குதலும் நடத்தாது’ என்று அறிவித்திருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.நவம்ப... மேலும் பார்க்க

ஜெம் வீரமணியிடம் ரூ.100 கோடி வாங்கிய பிரகாஷ்; லண்டனுக்குத் தப்பியவரை பிடிக்க 'புளூ கார்னர்' நோட்டீஸ்

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கிரானைட் அதிபர் வீரமணி கைதாகி சிறையில் இருக்கிறார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக, சாந்தி, அவரது கணவர் மகேந்திரன் உள்ளிட்டோரும் கைதாகி, புழல் சிறையில் அடைக்... மேலும் பார்க்க

கார்த்திகா கைது விவகாரம்: 'திமுகவுக்கும் வெட்கமில்லை, நாதகவுக்கும் வெட்கமில்லை!' – வன்னிஅரசு காட்டம்

தாராபுரம் நாம் தமிழர் வேட்பாளரான கார்த்திகா மீது தேர்தல் பரப்புரையின்போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதல்வர் சென்ற பாதையில் அனுமதி இன்றி பரப்புரை மேற்கொண்டது உள்ளிட்ட சம்பவங்களில் வழக்குப்பதிவு... மேலும் பார்க்க

``ஆதவ் அர்ஜுனா நிழல் முதலமைச்சர் போல் செயல்படுகிறார்..!" - கே.பி.முனுசாமி விமர்சனம்

"தேர்தல்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் ராகுல் காந்தியை யாரும் விமர்சிப்பது இல்லை. ஆனால், சாதாரண விவசாயியாக இருந்து பொதுச் செயலாளராக உயர்ந்த எடப்பாடி பழனிசாமியை மட்டும் விமர்சிக்கிறார்கள்" என்... மேலும் பார்க்க

சிறுவர்கள் பைக் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டுகள் சிறை - புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் எச்சரிக்கை

போக்குவரத்து விதிகளுக்குப் புறம்பாக 18 வயதுக்குக் குறைவான சிறார்கள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டும்போது ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் புத... மேலும் பார்க்க

"2, 3 நாள்களில் ரஷ்யாவிலிருந்து டீசல் ஏற்றுமதி; அமெரிக்காவுக்கு உரமும் அனுப்பத் தயார்" - புதின்

நேற்று அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப் ரஷ்யாவில் அந்த நாட்டு அதிபர் புதினைச் சந்தித்தார்.இந்தச் சந்திப்பு குறித்து புதின் தெரிவித்துள்ளதாவது...“உக்ரைன் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதில் ... மேலும் பார்க்க