செய்திகள் :

Ramayana: ``2014-ல் ஒரு ரசிகரின் கனவு இப்போது நனவாகியிருக்கிறது.!" - மேடையில் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்வு!

post image

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ராமாயணம் - தி ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்க, இத்திரைப்படத்தின் இணை தயாரிப்பாளரான ‘கே.ஜி.எஃப்’ புகழ் யாஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும், ரவி துபே லட்சுமணனாகவும் மற்றும் ரகுல் பிரீத் சிங் சூர்ப்பனகையாகவும் நடித்துள்ளனர்.

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர், இந்தியாவின் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஆகிய இருபெரும் உலகளாவிய ஆளுமைகள் இணைந்து இப்படத்திற்கு பின்னணி இசையமைத்திருக்கிறார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்

அடுத்த மாதம் 5-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர்கள் ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங், ஏ.ஆர்.ரஹமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்,``இந்த திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியது, கற்றலுக்கான ஒரு பயணமாகவே பார்கிறேன். பெற்றோரிடம், குழந்தைகளிடம், மனைவியிடம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்த ராமாயணா சொல்கிறது. அறநெறிகளைக் கற்பிக்கும் ஒரு சிறந்த கதாபாத்திரத்தைப் பற்றியது என்றும் நான் நினைக்கிறேன். எனவே இதில் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது, இது ஒரு அழகான விஷயம்.

நிதேஷ், யாஷ், ரன்பீர், சாய் உங்கள் எல்லோருக்கும் நன்றி. நான் உங்களுடன் ஒன்றைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
2014-ல் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், "உலகின் பலரையும் நீங்கள் ஊக்கப்படுத்துவது போல, வெள்ளிக்கிழமை அதிகாலை என் கனவிலும் வந்தீர்கள். இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தேன். ஏனெனில் இது நிச்சயம் நிஜமாகும் என நம்புகிறேன். கனவில், நீங்கள் இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் ஒரு இசை நிகழ்ச்சியின் மூலம் மாயாஜால தருணங்களை உருவாக்குவதைப் பார்க்கிறேன். திரைத்துறையின் முன்னணித் நட்சத்திரங்களுடன் இணைந்து, நமது மிகச்சிறந்த காவியமான இராமாயணத்தை மையமாகக் கொண்டு இதை நீங்கள் ஒருங்கிணைத்துள்ளீர்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்

இந்த நிகழ்ச்சி மிகவும் மாயாஜாலமானதாகவும், மயக்கக்கூடியதாகவும், இன்றைய உலகிற்கு மிகவும் தேவைப்படும் வாழ்க்கை, கடமை, அன்பு ஆகியவற்றின் அடிப்படை கொள்கைகளையும் மதிப்புகளையும் பரப்புவதாகவும் அமைந்திருக்கிறது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நியூயார்க்கைச் சேர்ந்த சதீஷ் என்ற அந்தப் மனிதர், `2014-ல் நான் அனுப்பிய மின்னஞ்சல் நினைவிருக்கிறதா?' என்று கேட்டார். எனக்கு ஒரே அதிர்ச்சி... 2014-ல் 2026-ல்நான் என்ன செய்யப் போகிறேன் என்பதைப் பற்றி ஒருவரால் எப்படி கனவு காண முடிந்தது என்று வியந்துபோனேன். அதனால் தான் இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தேன்.

இந்திய இசையில், அது தென்னிந்திய - வடஇந்திய இசையாக இருந்தாலும் சரி அளப்பரிய பக்தி நிரம்பியுள்ளது. நாம் அனைவரும் அதைத்தான் கற்றுக் கொண்டோம். எனவே இசையின் அடிப்படை அஸ்திவாரமே பக்திதான். அதனால் ராமாயணம் போன்றா திரைப்படத்துக்கு ராகங்களை எப்படிப் பயன்படுத்துவது என ஒரு இசையமைப்பாளருக்கு தனியாகக் கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை. நாங்கள் மூன்று வருடங்களாக அவருக்கு மெட்டுகளைக் கொடுத்துக் கொண்டே இருந்தோம். இப்போது முழு ஆல்பமே தயாராகிவிட்டது." என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Ramayana: ``ஏன் வெறுக்கப்படும் ராவணன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறீங்கனு கேட்டாங்க.!" - நடிகர் யாஷ்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ராமாயணம் - தி ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நட... மேலும் பார்க்க

Ramayana: ``ராமாயணத்தைக் கேட்டு வளர்ந்திருப்போம்; ஆனால்..." - 'ராமாயணா' குறித்து சாய் பல்லவி

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ராமாயணம் - தி ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நட... மேலும் பார்க்க

Tiger Shroff: துப்பாக்கிச்சூட்டிற்குத் திட்டம் தீட்டியது எப்படி? குற்றவாளிகளின் வாக்குமூலம் என்ன?

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தவிர துப்பாக்கியை ஏற்பாடு செய்து கொடுத்த 4 பேர் டெல்லி மற்றும் ஹரியான... மேலும் பார்க்க

Ramayana: "சின்ன சின்ன பிரச்னைகளைக் கண்டுக்காதீங்க!" - 'ராமாயணா' படம் குறித்து யஷ்

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ள 'ராமாயணா' படத்தின் முதல் பாகம் தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆகிறது. Ramayana Trailer - Yashநேற்றைய தின... மேலும் பார்க்க

Tiger Shroff: "வெளிநாட்டு வேலை, அதிக பணம்..." - துப்பாக்கியால் சுட்டவர்கள் சிக்கியது எப்படி?

மும்பையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது மூன்று பேர் கொண்ட கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்தத் துப்பாக்கிச்சூட்டில் டைகர் ஷெராப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனா... மேலும் பார்க்க

ராமாயணம் திரைப்படம்: 18 மாத உழைப்பு; 4,500 நகைகள்! 3 சாம்ராஜ்யாங்களுக்கு உருவான பிரமாண்ட ஆபரணங்கள்!

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் காவியத் திரைப்படம் ‘ராமாயணம்’. சினிமா ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகும் இ... மேலும் பார்க்க