செய்திகள் :

கோவை: சாதிய வன்கொடுமையால் மாணவர் தற்கொலை வழக்கு; பள்ளி ஆசிரியர் கைது

post image

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் – கெளசல்யா தேவி தம்பதியினரின் மகன் அகிலன் (16), கே.கே.நாயுடு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் அகிலன் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

இது குறித்து கெளசல்யா தேவி காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, “வகுப்பறையில் யாரெல்லாம் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இருக்கிறீர்கள் எனவும், யாரெல்லாம் மாட்டுக்கறி சாப்பிடுவீர்கள் எனவும் ஆசிரியர் விஜயகுமார் கேட்டபோது, என் மகன் உள்ளிட்ட மாணவர்கள் எழுந்து நின்றுள்ளனர்.

அப்போதிருந்து சக மாணவர்கள் இருவர் என் மகனை சாதியின் பெயரைச் சொல்லி திட்டியும், அடித்தும் வந்துள்ளனர். இதுகுறித்து ஆசிரியர் விஜயகுமாரிடம் கூறியபோதும், சாதிய உள்நோக்கத்துடன் அந்த மாணவர்களைக் கண்டிக்காமல் இருந்துள்ளார்.

school
school

சாதிய ரீதியாக மன உளைச்சலுக்கு உள்ளாகி வருவது குறித்தும், சக மாணவர்கள் விளையாட்டில் சேர்த்து கொள்ளாமல் இருப்பது குறித்தும் தலைமையாசிரியரிடம் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அகிலன் தற்கொலை செய்து கொண்டான்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பள்ளி ஆசிரியர் விஜயகுமார் பீளமேடு காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள தலைமையாசிரியர் அருண்குமாரைத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'எங்க மகளை மும்பை கோயிலை பார்த்துவிட்டு வரலாம் என்று அழைத்து சென்றனர்' - கைதான பெண்களின் பின்னணி

மும்பையில் கடந்த வாரம் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் துப்பாக்கியால் சுடப்பட்டதில் டைகர் ஷெராப் கார் ஓட்டுனர் உட்பட இரண்டு பேர் காயம் அடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு தேவையான ஆயுதத்தை குற்... மேலும் பார்க்க

காதலனுடன் தனிமையில் இருந்தபோது அழுத 8 மாத குழந்தை கொலை; 3 ஆண்டுகளுக்குப் பின் தாய் சிக்கியது எப்படி?

கேரள மாநிலம் திருவல்லா புளிக்கிழ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சதுப்புநிலப் பகுதியில் 8 மாதமே ஆன பெண் குழந்தையின் சடலம் 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி மீட்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த ப... மேலும் பார்க்க

கோவையில் பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை; சாதிய வன்கொடுமையே காரணம் எனப் பெற்றோர் அதிர்ச்சி புகார்

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் – கெளசல்யா தேவி தம்பதியினருக்கு, நேத்ரா (19) என்ற மகளும், அகிலன் (16) என்ற மகனும் உள்ளனர்.அகிலன் கோவை –அவிநாசி சாலையில் உள்ள கே.கே.நாயுடு மேல்நிலைப்பள்ளியில்... மேலும் பார்க்க

Harish: ``என்னை முடக்கி பேச விடாம பண்ணிட்டாங்க; இவரை சும்மா விடாதீங்க"- இறுதியாக ஹரிஷ் சொன்னது என்ன?

‘ஃபைனான்ஸ் வித் ஹரிஷ்’ என்னும் பெயரில் சமூக வலைதளங்களில் நிதி சார்ந்த அறிவுரைகளை வழங்கி வந்த யூடியூபர் ஹரிஷ், சென்னை முட்டுக்காடில் உள்ள அவரது வாடகை வில்லாவில் தற்கொலை செய்துகொண்டார். இன்ஸ்டாகிராமில் ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: பெண் குழந்தை மாயம் - ஒரு மாதமாகியும் துப்பு கிடைக்காமல் போலீஸ் திணறல்!

ராணிப்பேட்டை மாவட்டம், லாலாபேட்டையைச் சேர்ந்த நாடோடி சமூக தம்பதி சேகர் - பிரேமா. இவர்கள் குப்பைகளில் இருந்து பழைய பொருள்கள் மற்றும் பாட்டில்களை சேகரித்து காயலான் கடையில் விற்று அதில் கிடைக்கும் வருவாய... மேலும் பார்க்க

Finance with Harish: Cyber Bullying-ஆல் இறந்தாரா? `முதலமைச்சரை தெரியும்' என மிரட்டல்? | Full Detail

செபி என்பது பங்குச்சந்தை சரியாக இயங்குகிறதா, ஏதேனும் மோசடிகள், குளறுபடிகள் நடக்கிறதா என்பதை மட்டும் கண்காணிக்கும் அமைப்பு அல்ல.அதைச் சார்ந்து இயங்குபவர்களும் சரியானவர்களா, பொதுவெளியில் சரியான அறிவுரைக... மேலும் பார்க்க