செய்திகள் :

Tiger Shroff: துப்பாக்கிச்சூட்டிற்குத் திட்டம் தீட்டியது எப்படி? குற்றவாளிகளின் வாக்குமூலம் என்ன?

post image

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தவிர துப்பாக்கியை ஏற்பாடு செய்து கொடுத்த 4 பேர் டெல்லி மற்றும் ஹரியானாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கைது செய்யப்பட்டுள்ள ரோஷன், ரேஹன், பூல் சிங் ஆகியோர் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் இருந்து மும்பைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர். டெல்லியில் கைது செய்யப்பட்ட நான்கு பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உண்மையில் டைகர் ஷெராப் மீது துப்பாக்கியால் சுடும் திட்டம் கிடையாது என்றும், நடிகர் சல்மான் கான் மீதுதான் துப்பாக்கியால் சுட திட்டமிட்டு இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

டைகர் ஷெராப்பை துப்பாக்கியால் சுட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில், நடிகர் டைகர் ஷெராப்பைக் குறிவைப்பதற்கு முன்பு, மும்பையில் உள்ள நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் நடிகரின் வீட்டிற்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பைக் கண்டதையடுத்து அந்தத் திட்டத்தைக் கைவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

நடிகர் டைகர் ஷெராப், நடிகர் சல்மான் கான்
டைகர் ஷெராப், சல்மான் கான்

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சல்மான் கானின் இல்லத்திற்குச் சென்று துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கான ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் வெளியே போலீஸார் நிறுத்தப்பட்டிருப்பதைக் கவனித்த பிறகு தங்களது திட்டத்தை மாற்றிக்கொண்டுள்ளனர். இதைத்தொடர்ந்து மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள சல்மான் கானின் கேலக்ஸி அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு வெளியே மீண்டும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கட்டிடத்தின் உள்ளேயும் வெளியேயும் மற்றும் சாலையின் இருபுறமும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

டைகர் ஷெராப் பொதுவெளியில் மிகவும் எளிமையாக, எவ்விதப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி நடமாடுவதால், இந்தக் கும்பல் அவரைத் தங்கள் இலக்காகக் கொண்டதாகக் கூறப்படுகிறது. டைகர் ஷெராப் வழக்கமாக வந்து செல்லும் இடங்களை நோட்டமிட்டுள்ளனர். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவர் தவறாமல் கால்பந்து கிளப்பிற்கு வருவதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு காத்திருந்து இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.

தாக்குதலுக்கு முன்பே, இந்தக் கும்பல் டைகர் ஷெராப்பிற்கு மிரட்டல் விடுத்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோட்டாவில் கைது செய்யப்பட்டு சாலை வழியாக அழைத்து வரப்படும் நபர்களிடம் இன்னும் விசாரணை நடத்தப்படாததால், இது குறித்து கருத்து தெரிவிக்க மூத்த காவல்துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

Ramayana: "சின்ன சின்ன பிரச்னைகளைக் கண்டுக்காதீங்க!" - 'ராமாயணா' படம் குறித்து யஷ்

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ள 'ராமாயணா' படத்தின் முதல் பாகம் தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆகிறது. Ramayana Trailer - Yashநேற்றைய தின... மேலும் பார்க்க

Tiger Shroff: "வெளிநாட்டு வேலை, அதிக பணம்..." - துப்பாக்கியால் சுட்டவர்கள் சிக்கியது எப்படி?

மும்பையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது மூன்று பேர் கொண்ட கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்தத் துப்பாக்கிச்சூட்டில் டைகர் ஷெராப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனா... மேலும் பார்க்க

ராமாயணம் திரைப்படம்: 18 மாத உழைப்பு; 4,500 நகைகள்! 3 சாம்ராஜ்யாங்களுக்கு உருவான பிரமாண்ட ஆபரணங்கள்!

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் காவியத் திரைப்படம் ‘ராமாயணம்’. சினிமா ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகும் இ... மேலும் பார்க்க

Tiger Shroff: "அவர்களுக்குப் புரியும் மொழியிலேயே தகுந்த பதிலடி" - ஏக்நாத் ஷிண்டே

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃபின் காரைக் குறிவைத்து மும்பையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குற்றவாளிகளுக்கு அவர்களுடைய மொழியிலேயே தகுந்த பதிலடி கொ... மேலும் பார்க்க

AI: “என் முகத்தைப் பயன்படுத்தாதீர்கள்; மீறினால்..!” – நடிகை நேஹா ஷர்மா எச்சரிக்கை!

தனது முகத்தைப் பயன்படுத்தி அனுமதியின்றி AI மூலம் படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்குபவர்களுக்கு நடிகை நேஹா ஷர்மா எச்சரிக்கை விடுத்துள்ளார். அக்டோபர் 17 அன்று தன்னுடைய X சமூக வலைதள பதிவில், “ஏற்கெனவே... மேலும் பார்க்க

"என் வாழ்க்கை என்னுடன் புதைக்கப்படும்" - தனது வாழ்க்கையைப் படமாக்குவது குறித்து சல்மான் கான் பளீச்!

இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர் தனது 'காஃபி வித் கரண் 9' நிகழ்ச்சியில் முதல் ஆளாக நடிகர் சல்மான் கானை நேர்காணலுடன் கூடிய விவாதத்திற்கு அழைத்து இருந்தார். இதில் சல்மான் கான் பல்வேறு பிரச்னைகள் ... மேலும் பார்க்க