செய்திகள் :

"என் வாழ்க்கை என்னுடன் புதைக்கப்படும்" - தனது வாழ்க்கையைப் படமாக்குவது குறித்து சல்மான் கான் பளீச்!

post image

இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர் தனது 'காஃபி வித் கரண் 9' நிகழ்ச்சியில் முதல் ஆளாக நடிகர் சல்மான் கானை நேர்காணலுடன் கூடிய விவாதத்திற்கு அழைத்து இருந்தார்.

இதில் சல்மான் கான் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசினார். ​​தனது உடல் தோற்றம் குறித்து எழுந்த கேலிப் பேச்சுகளுக்கு (trolling) சல்மான் கான் பதிலளித்தார்.

அது குறித்துப் பேசிய போது அவர், உடல்நலப் பிரச்னைகள் மற்றும் பலமுறை ஏற்பட்ட காயங்கள் தனது உடலைப் பாதித்ததை ஒப்புக்கொண்டார்.

அவர் இது குறித்து கூறியதாவது: ''சொல்லப்போனால், என் வாழ்க்கையில் ஒரு காலகட்டத்தில் ஏற்பட்ட பல காயங்கள் மற்றும் அது போன்ற காரணங்களால் என் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. அது சட்டை அணியாத எனது தோற்றத்தை மிகவும் விரும்பும் தீவிர ரசிகர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே இருந்தது.

வயது எதுவாக இருந்தாலும், என்னை அந்த நிலையில் அவர்கள் பார்ப்பது அவர்களுக்குச் சரியானதாக இருக்காது. பலர் என்னை ஒரு முன்மாதிரியாகப் பார்க்கிறார்கள். இளைஞர்கள் பெரும்பாலும் தங்கள் தந்தையர்களின் உடல் தகுதியை, தன்னுடைய உடல் தகுதியுடன் ஒப்பிட்டு, "அவரே இப்படி இருக்கும்போது, ​​உங்களால் ஏன் இருக்க முடியாது?" என்று கேட்கின்றனர்.

எனவே என் உடல் அமைப்பைப் பேணிக்காக்க வேண்டியது அவசியம். இருப்பினும், திரையுலகில் தன்னை விடவும் சிறந்த உடல் தகுதியுடன் இருப்பவர்கள் பலர் உள்ளனர்'' என்றார்.

'பிக் பாஸ் 20' நிகழ்ச்சியின் 'வீக்கெண்ட் கா வார்' (Weekend Ka Vaar) அத்தியாயத்தின்போது, ​​தனது வயது, உடல் எடை மற்றும் தோற்றம் குறித்துக் கேலி செய்பவர்களுக்கு சல்மான் கான் பதிலடி கொடுத்தார்.

இச்சம்பவம் குறித்துப் பேசிய அவர், "எதை வைத்து கேலி செய்ய விரும்புகிறீர்கள்? ஏன் கேலி செய்ய வேண்டும்? இதற்குப் பின்னால் உள்ள மனநிலை என்ன?" என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர் தனது உடல் எடை குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், "'பாய்' (சல்மான்) குண்டாகிவிட்டார். இதோ, கேலி செய்துகொள்ளுங்கள்" என்று கூறினார். அதோடு தன்னைத் தொடர்ந்து கேலி செய்யுமாறு சவால் விடும் வகையில் தனது தொப்பி, ஜாக்கெட் மற்றும் டி-ஷர்ட் ஆகியவற்றை அவர் கழற்றினார்.

மேலும் முதலில் உங்களைப் பாருங்கள் என்று கூறிய அவர், மற்றவர்களின் உடல் அமைப்பைக் கேலி செய்வதற்குப் பதிலாக, மக்கள் தங்கள் சொந்த வாழ்க்கையிலும் தங்கள் பெற்றோரின் உடல்நலத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதில் கலந்து கொண்ட நடிகை கரிஷ்மா கபூர், சல்மான் கானிடம் ஒருவேளை உங்களது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக (biopic) எடுக்கப்பட்டால், அதை யார் இயக்க வேண்டும் என்று விரும்புகிறார் என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த சல்மான் கான், படத்தின் வகையைப் பொறுத்து சூரஜ் பர்ஜாத்யா, கபீர் கான், சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் டேவிட் தவான் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டார்.

இருப்பினும், தனது வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் ஒருபோதும் எடுக்கப்படாது என்று பின்னர் தெளிவுபடுத்திய அவர், தனது வாழ்க்கை என்னோடு புதைக்கப்படும் கூறினார்.

நடிகர் ஷாருக்கானுடன் நீண்ட காலம் கருத்து வேறுபாடு இருந்தது குறித்து கரண் ஜோகர் கேட்டபோது, ''இது உங்களால் நிகழ்ந்ததா அல்லது வேறொருவரால் நிகழ்ந்ததா? என்று தெரியவில்லை. ஆனால் இப்போது எங்களுக்குள் உறவு சுமுகமாகிவிட்டது. தற்போது நீங்கள் கவலைப்படத் தேவையில்லை, ஏனென்றால் எல்லாம் நன்றாகவே இருக்கிறது. நீண்ட காலமாகவே நிலைமை நன்றாகத்தான் உள்ளது" என்று கூறினார்.

"இயக்குநராவது குறித்து கனவில்கூட நினைத்ததில்லை" - அமிதாப் பச்சன் சொல்லும் காரணம் என்ன?

பாலிவுட்டில் நடிகர் அமிதாப் பச்சன் 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனக்கென நிலையான இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார். பாலிவுட்டில் அதிகமாக நடிகர்கள் நடிப்பு மட்டுமல்லாமல் இயக்கம் மற்றும் தயாரிப்புப் பணிகளில... மேலும் பார்க்க

"சுஷாந்த் சிங்கை பாலிவுட்டில் ஒரு கும்பல் சித்ரவதை செய்தது"- நடிகை தனுஸ்ரீ தத்தா பகீர் குற்றச்சாட்டு

நடிகை தனுஸ்ரீ தத்தா பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானதைத் தொடர்ந்து சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ''கடந்த 2020ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ரஜபுத்தை... மேலும் பார்க்க

Dada: "அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டார்கள்!" - 'தாதா' போஸ்டர் ட்ரால்கள் பற்றி ராஜ்குமார் ராவ்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் பயோபிக் திரைப்படமான 'தாதா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அந்த போஸ்டரும், அதன் ஏ.ஐ பயன்பாடும் கடுமையான விமர்... மேலும் பார்க்க

நடிகர் நானா படேகர் இறப்பு இயற்கையானது இல்லையா? கோவா போலீஸார் வழக்கு பதிவு

பாலிவுட் நடிகர் நானா படேகர் நேற்று காலை கோவாவில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். மாரடைப்பு ஏற்பட்டு வீட்டில் மயங்கி கிடந்த நானா படேகரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று இதய துடிப்பை மீட்ட... மேலும் பார்க்க

மறைந்த நடிகர் நானா படேகர் உடல் இரவில் அரசு மரியாதையுடன் புனே பண்ணை வீட்டில் தகனம்

பாலிவுட் நடிகர் நானா படேகர் நேற்று காலை கோவாவில் உள்ள தனது இல்லத்தில் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது உடல் மருத்துவ நடைமுறைக்கு பிறகு புனே அருகில் உள்ள அவரது சொந்த கிராமமான டோஞ்சேயில் இருக்கும் அவர... மேலும் பார்க்க

'மும்பையின் நெருக்கடி எனக்கு பிடிக்காது' - புனே மலையடிவார பண்ணை வீட்டில் நானா படேகரின் இறுதிச்சடங்கு

இன்று காலை கோவாவில் மாரடைப்பு ஏற்பட்டு காலமான நடிகர் நானா படேகர் எப்போதும் அமைதியான சூழலில் வாழ வேண்டும் என்று நினைப்பவர். பொதுவாக நானா படேகருக்கு சினிமா படப்பிடிப்புகள் மற்றும் வேலை அதிகமாக மும்பையில... மேலும் பார்க்க