செய்திகள் :

"சுஷாந்த் சிங்கை பாலிவுட்டில் ஒரு கும்பல் சித்ரவதை செய்தது"- நடிகை தனுஸ்ரீ தத்தா பகீர் குற்றச்சாட்டு

post image

நடிகை தனுஸ்ரீ தத்தா பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானதைத் தொடர்ந்து சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், ''கடந்த 2020ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ரஜபுத்தை ஒருவர் மட்டும் சித்ரவதை செய்யவில்லை. பாலிவுட்டில் ஒரு கும்பல் சித்ரவதை செய்தது. ஒவ்வொருவரும் தங்கள் செயல்களுக்கு இறுதியில் பதிலளிக்க வேண்டும்.

தனியாக வென்ற நபர் ஆதரவு இல்லாமல் இருக்க வேண்டிய அவசியமில்லை, கடவுள் எப்போதும் அவர்களுடன் இருக்கிறார். சரியான நேரத்தில் நீதி விரைவாக வரும்'' என்று குறிப்பிட்டார்.

நானா படேகர் இறந்தது குறித்து அவர் கூறுகையில், ''இது எனக்கு ஒரு அதிசயமாகத் தெரியவில்லை. ஆனால் நான் அதைக் கொண்டாடவில்லை. பாலிவுட்டில் உள்ள ஒரு நபர் அல்ல, என்னை கும்பலே தொந்தரவு செய்தது. சுஷாந்த் சிங்கும் இவர்களால் துன்புறுத்தப்பட்டார்.

இதில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டிருந்தனர். பாலிவுட்டில் நடிகைகளைத் துன்புறுத்தும் போக்கு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. சுஷாந்தின் தற்கொலை விவகாரம், ஏதோ இயல்பாகத் தோன்றவில்லை என்பதைத் எனக்கு உணர்த்தியது'' என்று தெரிவித்தார்.

அதே காணொளியில், தன்னைக் கொல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தனுஸ்ரீ கூறினார். தனது வீட்டில் வேண்டுமென்றே ஒரு பணிப்பெண் நியமிக்கப்பட்டதாகவும், தனக்குத் தீங்கு விளைவிக்கும் நோக்கில் தனது காரின் பிரேக்குகள் சேதப்படுத்தப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

முன்னதாக நானா படேகர் மீது துன்புறுத்தல் புகார்களை தனுஸ்ரீ தத்தா முன்வைத்திருந்தார். 2018-ல் இந்தியாவில் நடைபெற்ற #MeToo இயக்கத்தின்போது இப்புகார்களை அவர் முன் வைத்தார்.

2018-ல் நடைபெற்ற 'மீ டூ' (MeToo) இயக்கத்தின்போது தனக்கு எதிராகப் பேசுவதற்கும் செய்தியாளர் சந்திப்புகளை நடத்துவதற்கும் நானா படேகர், ராக்கிக்கு 2 முதல் 2.5 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்தார் என்றும், செய்தியாளர் சந்திப்பை நடத்துவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே நானாவின் மும்பை இல்லத்திலிருந்து ராக்கி அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டதாக தனுஸ்ரீ கூறியுள்ளார்.

முன்னதாக நானா படேகர் இறந்தது குறித்து வெளியிட்டு இருந்த பதிவில் 'தீமை அழிந்தது' என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கு கடும் விமர்சனம் வந்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக வெளியிட்ட பதிவில் மேற்கண்ட தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார். தனுஸ்ரீ தத்தா தமிழில் தீராத விளையாட்டுப்பிள்ளை படத்தில் நடித்து இருக்கிறார்.

Dada: "அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டார்கள்!" - 'தாதா' போஸ்டர் ட்ரால்கள் பற்றி ராஜ்குமார் ராவ்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் பயோபிக் திரைப்படமான 'தாதா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அந்த போஸ்டரும், அதன் ஏ.ஐ பயன்பாடும் கடுமையான விமர்... மேலும் பார்க்க

நடிகர் நானா படேகர் இறப்பு இயற்கையானது இல்லையா? கோவா போலீஸார் வழக்கு பதிவு

பாலிவுட் நடிகர் நானா படேகர் நேற்று காலை கோவாவில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். மாரடைப்பு ஏற்பட்டு வீட்டில் மயங்கி கிடந்த நானா படேகரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று இதய துடிப்பை மீட்ட... மேலும் பார்க்க

மறைந்த நடிகர் நானா படேகர் உடல் இரவில் அரசு மரியாதையுடன் புனே பண்ணை வீட்டில் தகனம்

பாலிவுட் நடிகர் நானா படேகர் நேற்று காலை கோவாவில் உள்ள தனது இல்லத்தில் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது உடல் மருத்துவ நடைமுறைக்கு பிறகு புனே அருகில் உள்ள அவரது சொந்த கிராமமான டோஞ்சேயில் இருக்கும் அவர... மேலும் பார்க்க

'மும்பையின் நெருக்கடி எனக்கு பிடிக்காது' - புனே மலையடிவார பண்ணை வீட்டில் நானா படேகரின் இறுதிச்சடங்கு

இன்று காலை கோவாவில் மாரடைப்பு ஏற்பட்டு காலமான நடிகர் நானா படேகர் எப்போதும் அமைதியான சூழலில் வாழ வேண்டும் என்று நினைப்பவர். பொதுவாக நானா படேகருக்கு சினிமா படப்பிடிப்புகள் மற்றும் வேலை அதிகமாக மும்பையில... மேலும் பார்க்க

Nana Patekar: "நாளை உயிருடன் இருப்பேனா, இல்லையா? என்பது நிச்சயமில்லை" - வைரலாகும் நானா படேகர் வீடியோ

பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மாரடைப்பால் இன்று (அக்.8) உயிரிழந்திருக்கிறார். அவருக்கு வயது 75. கோவாவில் உள்ள தனது வீட்டில் சுய நினைவை இழந்து மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட நடிகர் நானா படேகர், ... மேலும் பார்க்க

நானா படேகர் : "ரத்தினத்தை இழந்த இந்திய சினிமா" - 90 படங்கள்; 50 ஆண்டுகளில் 3 தேசிய விருதுகள்

இன்று காலை பழம்பெரும் நடிகர் நானா படேகர் மாரடைப்பால் 75 வயதில் காலமானார் என்ற சோகமான செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. கோவாவில் உள்ள அவரது வீட்டில் மயங்கிய நிலையில் காணப்பட்ட நானாபடே... மேலும் பார்க்க