செய்திகள் :

டோரதி: "கார்த்திக் சுப்புராஜ் ஒரு கல்ட் இயக்குநர்.!"- படக்குழுவை பாராட்டிய கன்னட நடிகர் உபேந்திரா

post image

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'டோரதி' திரைப்படம் செப்.25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

'டோரதி' படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இப்படத்தைத் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

Dorothy | டோரதி
Dorothy | டோரதி

அந்தவகையில் கன்னட நடிகர் உபேந்திரா 'டோரதி' படக்குழுவை நேரில் சந்தித்து பாராட்டி இருக்கிறார்.

இதுதொடர்பான வீடியோவை கார்த்திக் சுப்புராஜ் தனது இன்ஸ்டாகிராம் பகிர்ந்திருக்கிறார்.

வீடியோவில் பேசியிருக்கும் உபேந்திரா, " இப்போது தான் படத்தைப் பார்த்தேன். கார்த்திக் சுப்புராஜ் ஒரு கல்ட் இயக்குநர் என்று எல்லோரும் சொல்வார்கள்.

இந்தப் படத்தைப் பார்த்தப் பிறகு உண்மையான கல்ட் என்றால் என்னவென்று புரிந்துவிட்டது. கார்த்திக் சுப்புராஜ் ஒரு கல்ட் இயக்குநர் தான். உங்களுக்கு (கார்த்திக் சுப்புராஜ்) தலைவணங்குகிறேன்.

டோரதியை பாராட்டிய உபேந்திரா
டோரதியை பாராட்டிய உபேந்திரா

இந்த மாதிரி ஒரு சப்ஜக்ட்டை கமெர்ஷியலாக எடுத்திருக்கிறீர்கள். ரிஷிகாந்த், சனந்த் இருவரும் நன்றாக நடித்திருக்கிறீர்கள்.

ரிஷிகாந்த் நீங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறீர்கள். கமர்ஷியல் ஹீரோ மாதிரி இருக்கிறீர்கள்" என்று பாராட்டி இருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

"மன அழுத்தங்களில் இருந்து விடுபட்ட உணர்வு கிடைத்திருக்கிறது"- நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கூறியதென்ன?

'காதலில் சொதப்புவது எப்படி’, ‘வாயை மூடி பேசவும்’, ‘மாரி’ ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் வெப் சீரிஸ் ‘லவ்’. இதில் அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்திர... மேலும் பார்க்க

Ajith: `ரேஸ் முடிந்ததும் படப்பிடிப்பு' - பான் இந்தியா படமாக உருவாகிறதா AK 64?

நடிகர் அஜித்தின் AK 64 என்று ரசிகர்களால் குறிப்பிடப்பட்ட படத்துக்கு 'டேர் டெவில்' என்று பெயர் சூட்டப்பட்டு, ஆடிப்பெருக்கு விசேஷ நாளில் அறிவிக்கப்பட்டது. இப்படத்தை தயாரிக்க நிறைய தயாரிப்பாளர்கள் முன்வந... மேலும் பார்க்க

டோரதி: 'படத்திற்கு எதிர்ப்பு வந்தாலும் நான் கண்டுகொள்ளவில்லை, ஏனென்றால்..!'- கார்த்திக் சுப்புராஜ்

மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற 'டோரதி' படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நேற்று (அக.7) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், "நான் நம்பும் இரண்டு விஷயங்களை இந்தப் படம் ... மேலும் பார்க்க

Dorothy: "கார்த்திக் சுப்புராஜோட போன படம் மொக்கையாகத்தான் இருந்துச்சு!" - மிஷ்கின் ஓபன் டாக்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'டோரதி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் நடித்த இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் சக... மேலும் பார்க்க

Sivakarthikeyan: "I'm Not Self-Made, I'm People-Made; மக்களால் உருவாக்கப்பட்டவன் நான்" - எஸ்.கே

சிவகார்த்திகேயன், தற்போது சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் 'சேயோன்' படத்திலும், 'பார்க்கிங்' ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை சிவகார்த்திகேயன் நற்ப... மேலும் பார்க்க

முதல் குழந்தை முதல் குழந்தைதான்; 10 வருஷம் கழிச்சு அதுக்கு பார்ட் 2னு பெயர் வைப்போமா?- ராமராஜன் கலகல

கிராமத்து நாயகன் ராமராஜனின் பிறந்த நாள் நாளை (அக்டோபர் 8-ம் தேதி) வருகிறது. தமிழ் சினிமாவின் கதாநாயகன்களில் 'வெள்ளிவிழா' நாயகனாக இப்போதும் பேசப்படுகிறார். கடந்த 2024ல் 'சாமானியன்' படத்தின் மூலம் தனது ... மேலும் பார்க்க