செய்திகள் :

பினராயி விஜயன் மீது வழக்கு பதிய உயர்நீதிமன்றம் உத்தரவு; நிதி முறைகேடு வழக்கில் அதிரடி

post image

கேரள மாநிலம் ​கொச்சியைச் சேர்ந்த தனியார் கனிம நிறுவனமான சி.எம்.ஆர்.எல் நிறுவனத்திற்கும், முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் வீணாவுக்குச் சொந்தமான ‘எக்சாலாஜிக் சொல்யூஷன்ஸ்’ தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கும் இடையே முறைகேடான பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றதாகப் புகார் எழுந்தது.

இதில், வீணா மூலமாக முதலமைச்சர் பினராயி விஜயன் சி.எம்.ஆர்.எல் நிறுவனத்திடமிருந்து ரூ.3.28 கோடி லஞ்சமாகப் பெற்றார் என்றும், இந்த லஞ்சப் பணத்தை பினராயி விஜயனின் மருமகன் முகமது ரியாஸ், வீணா மற்றும் தங்களது நண்பர்கள் மூலமாக துபாய்க்குச் சட்டவிரோதமாகக் கடத்தினார் என்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், லஞ்சப் பணத்தைப் பெறுவதற்கும் வெளிநாட்டிற்குக் கடத்துவதற்கும் தனது தந்தை பினராயி விஜயன் மற்றும் கணவர் முகமது ரியாஸுக்கு வீணா உடந்தையாகச் செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

​இவ்விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக முதற்கட்ட விசாரணை நடத்திய மத்திய அமலாக்கத்துறை, இதில் பல்வேறு கிரிமினல் குற்றங்கள் வெளிப்பட்டிருப்பதாகத் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 8-ம் தேதி கேரள மாநில காவல்துறை டி.ஜி.பி-க்கு அமலாக்கத்துறை விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியது.

அக்கடிதத்தில், பணப் பரிவர்த்தனைகளுக்கு எக்சாலாஜிக் நிறுவனத்தின் வாகனங்கள் பயன்படுத்தப்பட்ட விவரங்கள், சி.எம்.ஆர்.எல் நிறுவன மேலாண் இயக்குநர் லஞ்சப் பணம் வழங்கியது மற்றும் அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி பி.சுரேஷ்குமார் இதற்கு உதவி புரிந்தது ஆகியவை குறித்து சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அத்துடன், லஞ்சப் பணத்தைக் கையாள்வதற்கும் மாற்றுவதற்கும் வீணா மற்றும் முகமது ரியாஸுக்கு ஷைஜல், பி. நிகில், ஹசன் வாரிஷ், ஃபைசாஜ் வி.பி, நந்துலால் எம் ஆகியோர் உதவி புரிந்த விவரங்களும் அதில் இடம்பெற்றிருந்தன. மேலும், இதுதொடர்பான கூடுதல் ஆதாரங்களை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் கேரள அரசுக்கும் உயர்நீதிமன்றத்திற்கும் சமர்ப்பித்தது அமலாக்கத்துறை.

பினராயி விஜயனின் மருமகன் முஹம்மது ரியாஸ்
பினராயி விஜயனின் மருமகன் முஹம்மது ரியாஸ்

அமலாக்கத்துறையின் கடிதம் கிடைத்ததைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மாநில உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மின்ஹாஜ் ஆலம் சட்ட ஆலோசனை கோரினார். அப்போது, வழக்குப் பதிவு செய்யாமல் முதற்கட்ட விசாரணை மட்டும் நடத்தலாம் என அட்வகேட் ஜெனரல் கருத்து தெரிவித்தார்.

எனினும், வழக்குப் பதிவு செய்து விசாரிப்பதற்கான முகாந்திரங்கள் அமலாக்கத்துறை கடிதத்திலேயே தெளிவாக உள்ளன எனத் தலைமை அரசு வழக்கறிஞர் சட்ட ஆலோசனை வழங்கினார். இதையடுத்து உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனையின் முடிவில், கடிதத்தில் உள்ள விவரங்கள் குறித்து முதற்கட்ட விசாரணை மட்டும் நடத்த டி.ஜி.பி. ரவாடா சந்திரசேகருக்கு அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, கிரைம் பிராஞ்ச் ஏ.டி.ஜி.பி வெங்கடேஷ் மேற்பார்வையில், எஸ்.பி விக்ரமன் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து மாநில அரசு முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியது.

முதற்கட்ட விசாரணை திருப்திகரமாக அமைந்தால் மட்டுமே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

​இந்நிலையில், அமலாக்கத்துறை கடிதத்தின் அடிப்படையில் நேரடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி கே.எம். ஷாஜஹான் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் ஒரு தரப்பாக இணைந்தது.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

உயர்நீதிமன்றத்தில் இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது மாநில அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொது ஊழியர்கள் மீதான வழக்குகளில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி முதற்கட்ட விசாரணை நடத்திய பிறகே எஃப்.ஐ.ஆர் பதிய வேண்டும் என்றும், அதற்குப் பின்னரே குற்றச்சாட்டுகள் குறித்து முடிவு செய்ய முடியும் என்றும் தீவிரமாக வாதிட்டனர்.

ஆனால், அமலாக்கத்துறை ஏற்கனவே ஒரு முதற்கட்ட விசாரணையை நடத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில், மாநில காவல்துறை மீண்டும் ஒரு முதற்கட்ட விசாரணையை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும், உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதியப்பட வேண்டும் என்றும் அமலாக்கத்துறை வாதாடியது. ​

இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை சீலிடப்பட்ட கவரில் சமர்ப்பித்த ஆவணங்களையும் ஆய்வு செய்தது. இறுதியில், அமலாக்கத்துறை ஏற்கனவே முதற்கட்ட அறிக்கை தாக்கல் செய்துள்ளதால் மாநில அரசின் கூடுதல் விசாரணை என்ற வாதம் ஏற்கத்தக்கதல்ல என்று கூறி அதனைத் தள்ளுபடி செய்தது.

மேலும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படியான முதற்கட்ட விசாரணை என்ற சலுகை இந்த விவகாரத்தில் பினராயி விஜயன் மற்றும் முகமது ரியாஸுக்குப் பொருந்தாது எனக் குறிப்பிட்ட நீதிமன்றம், அமலாக்கத்துறை கடிதத்தின் அடிப்படையிலேயே அவர்கள் இருவர் மீதும் காவல்துறை நேரடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யலாம் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

அதிமுக: `நியாயம் வேண்டும்'- எடுபடாத எடப்பாடியின் பிரசாரம்?; இடைத்தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளின் வேட்பாளர்கள், 11 நாள்களிலேயே தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்ட... மேலும் பார்க்க

"தளபதி முகத்துக்கான வெற்றி, தவெகவை அசைக்க முடியாது" - கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ கருத்து

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றது குறித்து, கவுண்டம்பாளையம் தொகுதி த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் கூறியதாவது, “இது எதிர்பார்த்த வெற்றிதான். தளபத... மேலும் பார்க்க

'ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் டு தவெக எம்.எல்.ஏ வரை' - மரகதம் குமரவேலின் அரசியல் பயணம்

கடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் எம்.எல்.ஏ சத்தியபாமா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, ... மேலும் பார்க்க

"JD வான்ஸ் பேச்சு தேவையற்றது; இது இரு நாடுகளுக்கும் உதவாது"- அமெரிக்க அரசு மீது இந்தியா நேரடி தாக்கு

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் அமெரிக்காவில் வேலை செய்யும் வெளிநாட்டவர்களை ‘ஒப்பந்தப் பணியாளர்கள் (indentured servants)’ என்று கூறியிருந்தார்.இவர் குறிப்பாக ஹெச்-1பி ... மேலும் பார்க்க

காங்கிரஸால் சரிந்த தவெக வாக்குகள்; டெபாசிட் இழந்த திமுக, நாதக; புதுச்சேரி இடைத்தேர்தல் முடிவுகள்

புதுச்சேரி சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் மங்கலம், தட்டாஞ்சாவடி என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால், அக்டோபர் 6-ம் தேதி அங்கு இ... மேலும் பார்க்க

Iran: "அதுவரை ஈரானைத் தாக்கமாட்டோம்" - ட்ரம்ப்பின் முடிவுக்குக் காரணம் என்ன?

ஈரான் போர் தொடங்கி இன்றோடு 7 மாதங்கள் 11 நாள்கள் ஆகின்றன.பாதிப்புகள்... இடையில் தற்காலிகப் போர் நிறுத்தம், பலகட்டம் மற்றும் பலதரப்புப் பேச்சுவார்த்தைகள், புரிந்துணர்வு ஒப்பந்தம் என ஆயிரம் முயற்சி நடந்... மேலும் பார்க்க