செய்திகள் :

காங்கிரஸால் சரிந்த தவெக வாக்குகள்; டெபாசிட் இழந்த திமுக, நாதக; புதுச்சேரி இடைத்தேர்தல் முடிவுகள்

post image

புதுச்சேரி சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் மங்கலம், தட்டாஞ்சாவடி என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால், அக்டோபர் 6-ம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணி சார்பில் அசோக் ஆனந்த்தும், காங்கிரஸ், த.வெ.க மற்றும் வி.சி.க சார்பில் விநாயகமும், தி.மு.க சார்பில் சேது செல்வமும், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சலீமும் களம் கண்டனர்.

வாக்கு எண்ணிக்கை லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று நடைபெற்றது. நான்கு சுற்றுகளாக எண்ணப்பட்ட வாக்குகளில் 13,358 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றிருக்கிறார் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அசோக் ஆனந்த்.

ரங்கசாமி
ரங்கசாமி

காங்கிரஸ் - த.வெ.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட விநாயகம் 4,876 வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தைப் பிடித்திருக்கிறார். அதன் மூலம் 8,482 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார் அசோக் ஆனந்த். அதேபோல தி.மு.க சார்பில் போட்டியிட்ட சேது செல்வம் 2,664 வாக்குகளையும், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சலீம் 310 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகுமாரி 172 வாக்குகளையும் பெற்றிருக்கின்றனர். அதேபோல நோட்டாவுக்கு 255 வாக்குகள் விழுந்திருக்கின்றன.

கடந்த பொதுத் தேர்தலில் இங்கு போட்டியிட்ட முதல்வர் ரங்கசாமி 10,024 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து த.வெ.க ஆதரவுடன் நேயம் மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட விநாயகம், 5,483 வாக்குகள் பெற்று இரண்டாமிடம் வந்தார்.

அதன்படி 4,541 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற முதல்வர் ரங்கசாமியை விட கூடுதலாக, இடைத்தேர்தலில் 8,482 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார் அசோக் ஆனந்த். ஆளும் கட்சி அந்தஸ்து, அசோக் ஆனந்த்தின் தனிப்பட்ட பொருளாதாரப் பலம் போன்றவையே வெற்றிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

அதேபோல த.வெ.க ஆதரவுடன் கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டு 5,483 வாக்குகள் பெற்ற விநாயகம், இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் களமிறங்கி அதைவிட 607 வாக்குகள் குறைவாகப் பெற்றிருக்கிறார். கடந்த தேர்தலில் 2,900 வாக்குகள் பெற்று நான்காம் இடத்துக்குத் தள்ளப்பட்ட காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்ததால்தான், த.வெ.க.வின் வாக்குகள் சரிந்ததாகக் கூறுகின்றனர் அக்கட்சியின் நிர்வாகிகள்.

புதுச்சேரி சட்டசபை

அதேபோல கடந்த தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு 3,984 வாக்குகள் பெற்றவரைத்தான் இந்த இடைத்தேர்தலில் தங்கள் வேட்பாளராகக் களமிறக்கியிருந்தது தி.மு.க. ஆனால் அவர் பொதுத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு பெற்ற வாக்குகளை விட, 1,320 வாக்குகள் குறைவாகப் பெற்று டெபாசிட்டை இழந்திருக்கிறார்.

பொதுத்தேர்தலிலும் அவர் டெபாசிட் இழந்தார் என்பது தனிக்கதை. அதேபோல நாம் தமிழர் கட்சி சாபில் கார்த்திகுமாரி 172 வாக்குகள் பெற்று நோட்டாவுக்குக் கீழே தள்ளப்பட்டிருக்கிறார்.

"JD வான்ஸ் பேச்சு தேவையற்றது; இது இரு நாடுகளுக்கும் உதவாது"- அமெரிக்க அரசு மீது இந்தியா நேரடி தாக்கு

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் அமெரிக்காவில் வேலை செய்யும் வெளிநாட்டவர்களை ‘ஒப்பந்தப் பணியாளர்கள் (indentured servants)’ என்று கூறியிருந்தார்.இவர் குறிப்பாக ஹெச்-1பி ... மேலும் பார்க்க

Iran: "அதுவரை ஈரானைத் தாக்கமாட்டோம்" - ட்ரம்ப்பின் முடிவுக்குக் காரணம் என்ன?

ஈரான் போர் தொடங்கி இன்றோடு 7 மாதங்கள் 11 நாள்கள் ஆகின்றன.பாதிப்புகள்... இடையில் தற்காலிகப் போர் நிறுத்தம், பலகட்டம் மற்றும் பலதரப்புப் பேச்சுவார்த்தைகள், புரிந்துணர்வு ஒப்பந்தம் என ஆயிரம் முயற்சி நடந்... மேலும் பார்க்க

அஸ்ஸாம் , மேற்கு வங்க இடைத்தேர்தல்: 3 தொகுதியிலும் முந்தும் பா.ஜ.க

மேற்கு வங்கம், அஸ்ஸாமில் காலியாக உள்ள சட்டமன்ற மற்றும் மக்களவை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலையில் எண்ணப்பட்டது. இன்று காலை வாக்குகள் எண்ண தொடக்கியதில் இருந்தே அஸ்ஸாமில் உள்ள... மேலும் பார்க்க

உள்துறைச் செயலாளர் மணிவாசன் உட்பட பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு!

உள்துறைச் செயலாளர் மணிவாசன் உட்பட பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது.பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்களின் பட்டியல்புதிய உள்துறைச் செயலாளராக கார்த்திக் நியமன... மேலும் பார்க்க