செய்திகள் :

இரண்டாவது திருமணத்திற்கு எதிர்ப்பு; மகளுக்கு பிரியாணியில் விஷம் வைத்த அப்பா

post image

மும்பை வடாலாவில் வசிப்பவர் ஷெரீப் கான். கார்பெண்டரான ஷெரீப் மனைவி கடந்த ஆண்டு புற்று நோய் காரணமாக இறந்து போனார். இதையடுத்து தனது மகள்கள் ரிஃபாத்(20), நுஜாத்(16) மற்றும் 10 வயது மகன் அகமது ஆகியோருடன் வடலா கிழக்கு ஷேக் மிஸ்திரி தர்கா சாலையில் உள்ள மடோனா காலனியில் வசித்து வந்தார். தனது மனைவி இறந்த பிறகு குழந்தைகளை கவனித்துக்கொள்ள இரண்டாவது திருமணம் செய்ய ஷெரீப் முடிவு செய்தார். ஆனால் இதற்கு ரிஃபாத் மற்றும் நுஷாத் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இது தொடர்பாக அடிக்கடி அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

குறிப்பாக ரிஃபாத், தனது தந்தையின் மறுமணத்தை கடுமையாக எதிர்த்ததாக கூறப்படுகிறது. கடந்த 2ம் தேதி ரிஃபத்தின் தாய்மாமன் அபு கான் லூதியானாவில் இருந்தபோது, ​​ரிஃபத் இறந்துவிட்டதாக அவருக்குத் தகவல் கிடைத்தது. மொட்டை மாடியில் தூங்கச் செல்வதற்கு முன், ஷெரீஃப் வீட்டிற்குக் கொண்டு வந்த பிரியாணியை ரிஃபத்தும் நுஸ்ஹத்தும் சாப்பிட்டதாக ஷெரீப் தெரிவித்தார்.

பின்னர், புழுக்கம் அதிகமாக இருந்ததால் நுஸ்ஹத் தனது அத்தை கௌசியாவின் வீட்டிற்கு தூங்கச்சென்றுவிட்டார்.

மறுநாள் அதிகாலை சுமார் 5 மணியளவில், ஷெரீஃப் கௌசியாவின் வீட்டிற்குச் சென்று, ரிஃபத் எந்த அசைவும் இன்றி இருப்பதாகக் கூறினார். அதன்பின் உறவினர்கள் அவளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவளை சோதித்து பார்த்தபோது இறந்திருந்தது தெரிய வந்தது. மருத்துவர்கள் உடற்கூறாய்வு செய்ததில், கழுத்து இறுக்கப்பட்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீஸார் ஷெரீப்பை பிடித்துச்சென்று விசாரித்தபோது தான் வாங்கி வந்த பிரியாணியில் விஷம் கலந்து கொடுத்தது தெரிய வந்தது. விஷம் கலந்த பிரியாணியை சாப்பிட்ட பிறகு ரிஃபாத் மயங்கிவிட்டார். உடனே அவரது கழுத்தை நெரித்து கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. தனது இரண்டாவது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கொலை செய்ததாக ஷெரீப் தெரிவித்துள்ளார். தனது இளைய மகளையும் கொலை செய்ய ஷெரீப் திட்டமிட்டு இருந்தார். ஆனால் அவர் தனது அத்தை வீட்டிற்கு சென்றுவிட்டதால் அவர் தப்பித்ததாக போலீஸார் தெரிவித்தனர். ஷெரீப்பை கைது செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர். கெட்டுப்போன பிரியாணியை சாப்பிட்டதால் இறந்துவிட்டதாக கூறி ஷெரீப் தப்பிக்க பார்த்தார். எனினும் விசாரணையில் அவர் சிக்கிக் கொண்டார்.

தருமபுரி: மகளிர் சுய உதவிக் குழு பெயரில் ரூ 2.88 கோடி மோசடி - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது!

மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் பெயர்களை முறைகேடாகப் பயன்படுத்தி 2.88 கோடி மோசடி செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், தருமபுரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள... மேலும் பார்க்க

மாணவிகள், ஆசிரியைகளின் படங்கள் ஆபாசமாக மார்பிங் செய்து விற்பனை - பாலிடெக்னிக் மாணவர் மீது வழக்கு!

கேரள மாநிலம் புனலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவிகள், ஆசிரியைகள் மற்றும் பெண் ஊழியர்களின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து டெலிகிராம் குழுக்கள் மற்றும் ஆபாச வலைத்தளங்களுக்கு விற்... மேலும் பார்க்க

திருச்சி: சுடுகாட்டில் கிடந்த மனித எலும்புக்கூடு; பெட்ரோல் ஊற்றி எரிப்பா? - அதிர்ச்சி சம்பவம்!

​ திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், வால்மால் பாளையம் அருகே உள்ள கீழூர் கிராம சுடுகாட்டில் மனித உடல் ஒன்று முற்றிலும் எரிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக அப்பகுதி மக்கள் மண்ணச்சநல்லூர் காவல்துறையின... மேலும் பார்க்க

கரூர்: புல் அறுக்க போன 60 வயது மூதாட்டி... கழுத்தறுக்கப்பட்டு கொலையான அதிர்ச்சி சம்பவம்!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள லாலாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் இளஞ்சியம் (வயது: 60). இவர், மேல விட்டு கட்டியில் உள்ள தனது அக்கா குடும்பத்தினர் உடன் வசித்து வந்தார். அங்கு தங்கி ஆடு, மாடுகளை வளர்... மேலும் பார்க்க

திண்டுக்கல் பயங்கரம்: ‘பழிக்கு பழிதீர்த்த கும்பல்'; வெளிவந்த 10 வது நாளில் தீர்த்து கட்டிய கொடூரம்

.திண்டுக்கல் மாநகராட்சி ஒப்பந்ததாரரும் திமுக பிரமுகருமான 'பாத்ரூம்' முருகன், கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் கடத்தப்பட்டு ஓடும் காரிலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் முருகனின் கார் ஓட்டுந... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.15 லட்சம் மோசடி; தவெக அமைச்சருக்குத் தொடர்பா? - காவல்துறை விளக்கம்

கன்னியாகுமரி மாவட்டம், மேலசூரங்குடியைச் சேர்ந்த சகாயராஜா என்பவரது மகள் ஆன்சிலின் சுஜி (23) என்பவர், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி தனது உறவினர்கள் ரூ.15 லட்சம் பெற்று ஏமாற்றியதாக மாவட்ட காவல் கண்கா... மேலும் பார்க்க