செய்திகள் :

கரூர்: புல் அறுக்க போன 60 வயது மூதாட்டி... கழுத்தறுக்கப்பட்டு கொலையான அதிர்ச்சி சம்பவம்!

post image

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள லாலாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் இளஞ்சியம் (வயது: 60). இவர், மேல விட்டு கட்டியில் உள்ள தனது அக்கா குடும்பத்தினர் உடன் வசித்து வந்தார். அங்கு தங்கி ஆடு, மாடுகளை வளர்த்து வரும் அவர் தினந்தோறும் ஆடு மாடுகளுக்கு தேவையான தீவன புற்களை பிடுங்குவதற்காக லாலாபேட்டை ரயில்வே நிலையம் அருகே உள்ள வாழை தோப்பு பகுதிக்கு வருவது வழக்கம். அவ்வாறு, கால்நடைகளுக்காக தீவனப் புற்களை அறுப்பதற்காக வந்த அவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இரவு முழுவதும் அவரது உறவினர்கள் தேடி வந்த நிலையில் அதிகாலை மீண்டும் வாழைத்தோட்டத்திற்கு வந்து பார்த்தபோது அங்கு ரத்தக்கறை படிந்து இருந்தது. இதனையடுத்து, அருகில் தேடி பார்த்த போது புதர்கள்

நடுவே கழுத்து அறுக்கப்பட்டு இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து, லாலாபேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ilanchiyam

அங்கு வந்த போலீஸார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் மூக்கில் அணிந்திருந்த தங்க மூக்குத்தி பறிக்கப்பட்டது தெரியவந்தது. தீவனப்புற்களை அறுக்க வந்த மூதாட்டியை மர்மநபர் மூக்குத்தி பறிப்பதற்காக முயன்று அதில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தகவல் அறிந்த திருச்சி மத்திய மண்டல டி.ஐ.ஜி சிபிசக்கரவர்த்தி, கரூர் மாவட்ட எஸ்.பி ஹரிஹரன் பிரசாத் ஆகியோர் சம்பவ இடத்தில் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு விசாரணை செய்தனர். மேலும், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. 60 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், குளித்தலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திண்டுக்கல் பயங்கரம்: ‘பழிக்கு பழிதீர்த்த கும்பல்'; வெளிவந்த 10 வது நாளில் தீர்த்து கட்டிய கொடூரம்

.திண்டுக்கல் மாநகராட்சி ஒப்பந்ததாரரும் திமுக பிரமுகருமான 'பாத்ரூம்' முருகன், கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் கடத்தப்பட்டு ஓடும் காரிலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் முருகனின் கார் ஓட்டுந... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.15 லட்சம் மோசடி; தவெக அமைச்சருக்குத் தொடர்பா? - காவல்துறை விளக்கம்

கன்னியாகுமரி மாவட்டம், மேலசூரங்குடியைச் சேர்ந்த சகாயராஜா என்பவரது மகள் ஆன்சிலின் சுஜி (23) என்பவர், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி தனது உறவினர்கள் ரூ.15 லட்சம் பெற்று ஏமாற்றியதாக மாவட்ட காவல் கண்கா... மேலும் பார்க்க

காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று... மாரடைப்பு என நாடகமாடிய மனைவி - காட்டிகொடுத்த சாட்டிங்!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லோஹியா நகரில் வசித்து வந்தவர் தலிப்(30). இவரது மனைவி இல்மா(27). இவர் பியூட்டி பார்லரில் வேலை செய்கிறார். இத்தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. சம்பவத்தன்று வே... மேலும் பார்க்க

குஜராத்: "மனைவியைத் தூய்மையாக்குகிறேன்"- கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி சித்ரவதை செய்த கணவன்

குஜராத் மாநிலம் வாபியைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவரை விட்டுவிட்டு அங்குள்ள சொடிலா என்ற இடத்தைச் சேர்ந்த தனது ஆண் நண்பருடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார். அவர்கள் கடந்த சில மாதங்களாக அங்கு சேர்ந்து வாழ்ந்த... மேலும் பார்க்க

தருமபுரி: 23 வயது மருத்துவ மாணவிக்குப் பாலியல் தொல்லை; 17 வயது மாணவன் கைது

மருத்துவ மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த 17 வயது பாலிடெக்னிக் மாணவன் கைது செய்யப்பட்ட சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் தொல்லைவெளி மாவட்டம் ஒன்றில் ஓமியோபதி மருத்... மேலும் பார்க்க

ஆம்பூர்: பள்ளி மாணவனை விடுவிக்க லஞ்சம் கேட்டு மிரட்டல் - எஸ்.பி-யிடம் சிக்கிய சிறப்பு எஸ்.ஐ!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்துள்ள ராமாபுரம் கிராமத்தில், பொதுவழிப் பாதை பிரச்னை தொடர்பாக மார்க்கபந்து மற்றும் மணிமேகலை என்பவர்களின் குடும்பத்தினரிடையே தகராறு இருந்து வருகிறது. இருக்குடும்பத்த... மேலும் பார்க்க