செய்திகள் :

பகவான் கிருஷ்ணர் தர்ப்பணம் செய்த தலத்தில் வழிபட பித்ரு தோஷம் தீரும்... மகாளய அமாவாசை தலம்!

post image

மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில், 25 கி.மீ. தொலைவில் உள்ளது பூந்தோட்டம் என்னும் ஊர். இந்த ஊரிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் செதலைப்பதி அமைந்துள்ளது. இதையே திலதர்ப்பணபுரி என்று சொல்கிறார்கள். திலம் என்றால் எள். தர்ப்பணம் என்பது திருப்தி செய்தல். எள் கொண்டு பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்ய ஏற்ற தலம் என்பதால் இந்தப் பெயர் உண்டாயிற்று. தொடக்கத்தில் திலதர்ப்பணபுரி என்று அழைக்கப்பட்டு அதுவே திலதைப்பதி என்றாகி தற்போது செதிலைப்பதி என்று அழைக்கப்படுகிறது. அப்படி இந்தத் தலத்தில் என்ன விசேஷம்? வாருங்கள் பழைமையான அதன் தலபுராணம் குறித்து அறிந்துகொள்வோம்.

திலதர்ப்பணபுரி கோயில்

மகாபாரதப் போர் தொடங்கவிருந்த நேரம். போர் தொடங்கும் முன் வெற்றி காண பலியிடுவது வழக்கம். அதற்கு அனுகூலமான நேரம் எது என்பதை துரியோதனன், சகாதேவனிடமே கேட்டான். துரியோதனன் எதிரி என்று கருதாமல் மிக நேர்மையுடன் ``அமாவாசை அன்று களப்பலி கொடுத்து யுத்தம் தொடங்கினால் வெற்றி நிச்சயம்’’ என்று நாள் குறித்துக் கொடுத்தான் சகாதேவன்.

நிச்சய வெற்றியைக் கொடுக்கும் நாள் அது என்பதை அறிந்த பாண்டவர்கள், கிருஷ்ணரிடம் சரணடைந்தனர். கிருஷ்ணர் ஓர் உபாயம் செய்தார். ஆற்றங்கரையில் அமர்ந்து, அமாவாசைக்குரிய தர்ப்பணத்தைச் செய்யத் தொடங்கினார்.

அன்றைக்கு சதுர்த்தசி திதிதான். ஆனால், கிருஷ்ணர் தர்ப்பணம் செய்வதைப் பார்த்த மற்ற முனிவர்களும் தாங்களும் தர்ப்பணம் செய்யத் தொடங்கினர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சூரியனும் சந்திரனும் குழப்பமடைந்தனர். `ஒருநாள் முன்னதாகவே தர்ப்பணம் செய்வது தவறு’ என்பதை கிருஷ்ணருக்குச் சுட்டிக்காட்ட விரும்பிய இருவரும் ஒன்றாக இணைந்து பூமிக்கு வந்தனர்.

கிருஷ்ணர் புன்னகைத்தார். “நாங்கள் இருவரும் இணையும் பதினைந்தாவது தினமாகிய அமாவாசை வருவது நாளைதானே? இன்றே தர்ப்பணம் செய்வது தவறல்லவா?” என்று கேட்டனர்.

திலதர்ப்பணபுரி கோயில்

உடனே கிருஷ்ணர், “அமாவாசையன்று சூரியனும் சந்திரனும் இணைந்திருக்க வேண்டும் என்பது அவசியம் எனில், நீங்கள் இருவரும் இப்போது ஒன்றாகத்தானே நிற்கிறீர்கள்! ஆகவே இன்றைக்கே அமாவாசை நிகழ்ந்துவிட்டதே!” என்று சாதுரியமாகப் பதிலளித்தார்.

இங்ஙனம், சாமர்த்தியமாக அமாவாசையை முன்தினமே வரவழைத்து, பாண்டவர்களின் வெற்றிக்குக் கிருஷ்ண பரமாத்மா அடித்தளம் இட்ட வரலாறு நிகழ்ந்த தலம் திலதர்ப்பணபுரி என்கிறது புராணம்.

பொதுவாக சிவாலயங்களில் மூலவருக்கு எதிர்புறமாக வலது புறத்தில் சூரியனும், இடதுபுறத்தில் சந்திரனும் எழுந்தருளியிருப்பது மரபு. ஆனால், இத்தலத்தில் மட்டும் இருவரும் ஒன்றாக இணைந்து சுற்றாலையில் காட்சி தருகின்றனர். அருகில் மகாவிஷ்ணு, தேவி - பூதேவியுடன் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். வேறெங்கும் காண இயலாத அரிய அமைப்பு இது.

திருமாலின் வாக்கிற்கு இணங்கி, காவிரி தனது பாதையிலிருந்து பிரிந்து இத்தலத்தின் வழியாக ஓடியதாகக் கூறப்படுகிறது. அதனால் இந்த ஆற்றுக்கு ‘அரி + சொல் + ஆறு’ என்ற பெயர் ஏற்பட்டதாகவும், பின்னர் அது ‘அரிசிலாறு’ என மருவியதாகவும் கூறுகின்றனர். கிருஷ்ண பரமாத்மா அமர்ந்து தர்ப்பணம் செய்த இந்தப் புண்ணிய ஆற்றில் நீராடி, அதன் கரையில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

புராணக் காலத்தில் மந்தாரை மரங்கள் நிறைந்த வனமாக இருந்ததால், இவ்வனத்தில் எழுந்தருளிய ஈசன் ‘மந்தாரவனேஸ்வரர்’ என்று அழைக்கப்பட்டார். முக்திப் பேற்றை அருளும் தன்மையால் ‘முக்தீஸ்வரர்’ என்ற திருநாமத்தாலும் விளங்குகிறார்.

அழகிய லிங்கத்திருமேனியுடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ள இறைவன் சந்நிதிக்கு இடதுபுறத்தில், தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் அன்னை சுவர்ணவல்லி, ‘பொற்கொடியம்மை’ என்ற திருநாமத்துடன் காட்சியளிக்கிறாள்.

திலதர்ப்பணபுரி கோயில்

பொதுவாக, மறைந்தவர்களுக்காக அவர்களின் வாரிசுகளே உரிய நாளில் திலதர்ப்பணம் செய்யும் உரிமை பெற்றவர்கள். ஆனால் இத்தலத்தில், நம்மைவிட்டுப் பிரிந்த எந்த உயிருக்கும் யார் வேண்டுமானாலும், எந்த நாளிலும் தர்ப்பணம் செய்யலாம் என்பது தனிச்சிறப்பு. ஏனெனில், இங்கே சூரிய-சந்திரர் எப்போதும் இணைந்தே இருப்பதால், தினந்தோறும் அமாவாசை திதியாகவே கருதப்படுகிறது. இதனால்தான் இது ‘நித்ய அமாவாசைத் தலம்’ என்று போற்றப்படுகிறது.

ராமாயணக் காலத்தில், ஶ்ரீராமர் இத்தலத்திற்கு வந்து தனது தந்தை தசரதருக்கும், தனக்காக உயிர்துறந்த ஜடாயுவிற்கும் திலதர்ப்பணம் செய்ததாக புராணம் சொல்கிறது.

ராமர் தர்ப்பணம் செய்தபோது, சீதை தன் கைகளால் பிடித்திருந்த நான்கு பிண்டங்களும் நான்கு லிங்கங்களாக உருமாறி நிலைத்துவிட்டன என்று தலபுராணம் கூறுகிறது. இன்றும் அந்த லிங்கங்களைக் கோயில் சுற்றாலையில் தரிசிக்கலாம். அவற்றிற்கு எதிரே, தனது வலது காலை மடித்த நிலையில் வடக்கு நோக்கி அமர்ந்திருக்கும் ஶ்ரீராமரை தரிசிக்கலாம். வேறெங்கும் காண இயலாத அரிய திருக்கோலம் இது. ராமர் மற்றும் லட்சுமணரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்ட லிங்கங்களும் தனியே உள்ளன.

இத்தலத்து கோஷ்டத்தில், லிங்கோத்பவருக்குப் பதிலாக மகா விஷ்ணு காட்சி தருகிறார். அவர் இங்கே பெருமாளாகவும் ராமராகவும் ஒரே தலத்தில் அருள்பாலிப்பதும் கூடுதல் சிறப்பாகும். இங்கே ஆதிவிநாயகர் மனித முகத்துடன் திருக்காட்சி அருள்கிறார். இவர், பிரதான ஆலயத்திற்கு வெளியே தனிச்சந்நிதியில், மூலவரை நோக்கியவாறு அமர்ந்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.

முத்திநிலை பெற சிவனருள் அவசியம்; அதற்கான வழிகாட்டி விநாயகரே என்பது நமது சமயவியல் கோட்பாடு. அதற்கு எடுத்துக்காட்டாக இந்த அமைப்பு விளங்குகிறது.

முன்னோர்களின் மனக்கேதம் தீரவும், அவர்களின் ஆசியைப் பெறவும், வாழ்வில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய அரிய திருத்தலம் இந்தத் திலதைப்பதி. வாய்ப்பிருப்பவர்கள் சென்று வழிபட்டு வாருங்கள். பித்ரு தோஷங்கள் தீர்ந்து மங்கல வாழ்வு கிட்டும்.

கஷ்டப்படவேண்டும் என்று விதி இருந்தால்கூட அதை மாற்றி நல்வாழ்வு அருளும் சிவத்தலம் இதுதான்!

மகாளயபட்ச காலத்தை பித்ரு பட்சம் என்றும் சொல்வார்கள். பித்ருக்களின் ஆசியே நமக்கு நல் வாழ்வைக் கொடுக்கும். அதேவேளையில் நம் முற்பிறவி வினைகளும் நம் துன்பங்களுக்குக் காரணம். இந்த இரண்டையும் முற்றிலும் வில... மேலும் பார்க்க

மண்டலாபிஷேகம் நிறைவு: அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் ஆன்மிக பேரொளி!

மண்டலாபிஷேகம் நிறைவுமண்டலாபிஷேகம் நிறைவுமண்டலாபிஷேகம் நிறைவுமண்டலாபிஷேகம் நிறைவுமண்டலாபிஷேகம் நிறைவுமண்டலாபிஷேகம் நிறைவுமண்டலாபிஷேகம் நிறைவுமண்டலாபிஷேகம் நிறைவு மேலும் பார்க்க

சனி தசை: வெளியே சொல்ல முடியாமல் உள்ளூர அழுகிறீர்களா... பொங்கு சனீஸ்வரரை ஒருமுறை தரிசித்து வாருங்கள்

ஒருவரின் ஜாதகத்தின்படி சனி தசை தொடங்கினால் கஷ்டகாலமும் தொடங்கும். நம் முன்வினைக்கு ஏற்ப பலன்களைக் கொடுக்கும் நியாயாதிபதி சனிபகவான் கொடுக்கும் தண்டனைகளும் கடுமையாக இருக்கும். சிலர் வாழ்வில் விரக்திக்கே... மேலும் பார்க்க

இக்கட்டான தருணத்தில் முடிவெடுக்க முடியாமல் தவிக்கிறீர்களா... இந்த முருகன் கோயிலுக்கு வாங்க!

காஞ்சிபுரம் கோயில் மாநகரம். இங்கே இருக்கும் கோயில்களின் எண்ணிக்கை பல நூறு. அவற்றில் மகிமை வாய்ந்த பல திருத்தலங்கள் அமைந்துள்ளன. அப்படி ஒரு தலம் தான் குமரக்கோட்டம். காஞ்சிபுரத்தின் ராஜவீதியிலேயே அமைந்த... மேலும் பார்க்க

கேட்டவரம் தரும் மேலக்கோட்டையூர் ஸ்ரீமேகநாதேஸ்வரர் ஆலயத்தில் விளக்கேற்றி வழிபடலாம் வாருங்கள்!

பெரும்பாலும் சிவாலயங்களில் ஈசன் கிழக்கு நோக்கியே அருள்பாலிப்பார். ஆனால் மேற்கு நோக்கு ஈசன் அமர்ந்திருக்கும் ஆலயங்களும் உண்டு. அவை மிகவும் விசேஷமானவை என்பார்கள். ஒரு மேற்கு நோக்கிய சிவலிங்க தரிசனம் என்... மேலும் பார்க்க