செய்திகள் :

டோரதி: 'படத்திற்கு எதிர்ப்பு வந்தாலும் நான் கண்டுகொள்ளவில்லை, ஏனென்றால்..!'- கார்த்திக் சுப்புராஜ்

post image

மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற 'டோரதி' படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நேற்று (அக.7) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், "நான் நம்பும் இரண்டு விஷயங்களை இந்தப் படம் நிறைவேற்றி இருக்கிறது. ஒன்று நாம் பேசக்கூடாது, படம் பேச வேண்டும் என்று நினைத்தேன். அது நடந்துவிட்டது.

மற்றொரு விஷயம் சினிமா ஓர் ஆயுதம். அதனால் எதையும் மாற்ற முடியும். மக்களின் மனதை மாற்ற முடியும், சமூகத்தை மாற்ற முடியும் என்று நான் எப்போதும் நம்புவேன்.

Dorothy | டோரதி
Dorothy | டோரதி

'டோரதி' என்ற கதை எனக்கு எங்கு உருவானது என்றே தெரியவில்லை. திருநங்கைகளின் வாழ்க்கையை பட பண்ண வேண்டும் என்று மட்டுமே நினைத்தேன்.

பாலின பாகுப்பாடு இல்லாமல் மனிதர்களை மனிதர்களாகப் பார்த்தால் போதும். 'நீங்கள் குறு குறு என்று பார்ப்பதால் தான் நாங்கள் பிச்சை எடுக்கிறோம், பாலியல் தொழில் செய்கிறோம்' என்று ஜீவா அக்கா இந்தப் படத்தில் ஒரு டயலாக் சொல்லுவார்கள். அது உண்மை தான்.

நாம் அவர்களை சக மனிதர்களாகப் பார்க்க ஆரம்பித்திருந்தோமானால் அவர்கள் பிச்சை எடுக்கவோ, பாலியல் தொழில் செய்திருக்கவோ மாட்டார்கள். நான் தியேட்டருக்கு சென்று பார்த்தபோது நிறைய ஆண்களும், பெண்களும் அழுதார்கள்.

இதுவரைக்கும் நாங்கள் பார்த்த பார்வைக்கும், இனிமேல் நாங்கள் திருநங்கைகளைப் பார்க்கும் பார்வைக்கும் கண்டிப்பாக வித்தியாசம் இருக்கும்.

கார்த்திக் சுப்புராஜ்
கார்த்திக் சுப்புராஜ்

இந்தப் படம் எங்களுக்குள் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது என்று நிறைய பேர் சொன்னார்கள். அதுதான் இந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றியாக நான் பார்க்கிறேன்.

இந்தப் படத்திற்கு ஆரம்பத்தில் எதிர்ப்புகள் வந்தாலும் நான் கண்டுகொள்ளவில்லை. ஏன்னென்றால் நான் தியேட்டருக்கு சென்று பார்த்தபோது மக்கள் எங்களுக்கு அவ்வளவு ஆதரவு கொடுத்தார்கள்" என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Dorothy: "கார்த்திக் சுப்புராஜோட போன படம் மொக்கையாகத்தான் இருந்துச்சு!" - மிஷ்கின் ஓபன் டாக்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'டோரதி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் நடித்த இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் சக... மேலும் பார்க்க

Sivakarthikeyan: "I'm Not Self-Made, I'm People-Made; மக்களால் உருவாக்கப்பட்டவன் நான்" - எஸ்.கே

சிவகார்த்திகேயன், தற்போது சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் 'சேயோன்' படத்திலும், 'பார்க்கிங்' ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை சிவகார்த்திகேயன் நற்ப... மேலும் பார்க்க

முதல் குழந்தை முதல் குழந்தைதான்; 10 வருஷம் கழிச்சு அதுக்கு பார்ட் 2னு பெயர் வைப்போமா?- ராமராஜன் கலகல

கிராமத்து நாயகன் ராமராஜனின் பிறந்த நாள் நாளை (அக்டோபர் 8-ம் தேதி) வருகிறது. தமிழ் சினிமாவின் கதாநாயகன்களில் 'வெள்ளிவிழா' நாயகனாக இப்போதும் பேசப்படுகிறார். கடந்த 2024ல் 'சாமானியன்' படத்தின் மூலம் தனது ... மேலும் பார்க்க

'பெரும் மனநிறைவை கொடுத்த படம்' - 'டோரதி' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'டோரதி' திரைப்படம் செப்.25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜ... மேலும் பார்க்க

Jailer 2: 'மிஸ் டெல்லி... கதக் நடனம்...' - 'ஜெயிலர் 2' டிரெய்லரில் கவனம் ஈர்த்த Apeksha Porwal யார்?

ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'ஜெயிலர் 2' படத்தின் டிரெய்லர் நேற்றைய தினம் வெளியானது. படத்தைப் பற்றிய பல்வேறு தகவல்களையும், படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் பற்றியும் ... மேலும் பார்க்க

Love Always: "என்னுடைய முதல் வெப் சீரிஸ்!"- கொரிய வெப்டூனை தழுவி எடுக்கப்பட்ட சீரிஸில் நடிகை ஜெயசுதா

'வல்லமை தாராயோ', 'கே.டி என்கிற கருப்புதுரை' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் உருவாகியிருக்கிறது 'லவ் ஆல்வேஸ்' வெப் சீரிஸ். இதில் நடிகை கௌரி கிஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தி... மேலும் பார்க்க