செய்திகள் :

நானா படேகர் : "ரத்தினத்தை இழந்த இந்திய சினிமா" - 90 படங்கள்; 50 ஆண்டுகளில் 3 தேசிய விருதுகள்

post image

இன்று காலை பழம்பெரும் நடிகர் நானா படேகர் மாரடைப்பால் 75 வயதில் காலமானார் என்ற சோகமான செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. கோவாவில் உள்ள அவரது வீட்டில் மயங்கிய நிலையில் காணப்பட்ட நானாபடேகர், அங்குள்ள மணிபால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டும் உயிரிழந்துவிட்டார். நானாபடேகர் படித்துக்கொண்டே தனது 13 வயதில் சினிமாவோடு தொடர்புடைய போஸ்டர்கள் வரையும் வேலையை செய்ய ஆரம்பித்தார். கடந்த 50 ஆண்டில் நானா படேகர் இந்திய திரையுலகின் மிகப்பெரிய இடத்தை பிடித்திருந்தார் என்று சொன்னால் மிகையாகாது.

1978 ஆம் ஆண்டு வெளியான மீமகமன் திரைப்படத்தில் துணை வேடத்தில் அவர் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் பின்னர் பல இந்தி மற்றும் மராத்தி படங்களில் நடித்தார், ஆனால் அவர் 1986 இல் வெளியான அங்குஷ் மூலம் புகழ் பெற்றார். அங்குஷுக்குப் பிறகு, நானா படேகர் 1980கள் மற்றும் 1990களில் மோஹ்ரே, பரிந்தா, பிரஹார்: தி ஃபைனல் அட்டாக் (இவர் இயக்கியவர்), ராஜு பன் கயா ஜென்டில்மேன், திரங்கா, கிராந்திவீர், அக்னி சாக்ஷி, காமோஷி: தி மியூசிகல் போன்ற பல பிரபலமான திரைப்படங்களில் நடித்தார்.

2000 களின் முற்பகுதியில், அவர் துணை வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். சக்தி: தி பவர், பூட், பிளஃப்மாஸ்டர், வெல்கம், ராஜநீதி மற்றும் பிற திரைப்படங்களில் அவரது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினார். மறைந்த நடிகர் கடைசியாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான ஓ'ரோமியோவில் நடித்திருந்தார்.

சுமார் 50 ஆண்டுகள் நீடித்த அவரது சினிமா வாழ்க்கையில், நானா படேகர் மூன்று தேசிய விருதுகளை வென்றார். பரிந்தா மற்றும் அக்னி சாக்ஷி ஆகிய இரண்டு சிறந்த துணை நடிகருக்கான விருதுகளும், கிராந்திவீருக்காக ஒரு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்தது. ஃபிலிம்ஃபேர் விருதுகளைப் பொறுத்தவரை, பரிந்தாவுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதையும், அங்கார் மற்றும் அபஹரன் படத்திற்காக சிறந்த வில்லன் விருதுகளையும், கிராந்திவீரனுக்காக சிறந்த நடிகருக்கான விருதையும் வென்றுள்ளார். 2013 ஆம் ஆண்டில், திரைப்படம் மற்றும் கலைத் துறையில் அவரது அர்ப்பணிப்புக்காக பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இந்தியத் திரையுலகம் நிச்சயமாக ஒரு ரத்தினத்தை இழந்துவிட்டது.

கோவாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த விழாவில் நானா படேகர் கலந்து கொண்டு பேசுகையில், கோவா முதல்வரின் செயல்பாட்டை வெகுவாக புகழ்ந்து பேசினார். அப்போது எல்லோரும் என்றாவது ஒரு நாள் (இறந்து) போக வேண்டும். நான் நாளை இங்கு இருப்பேனா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு நபரின் வாழ்க்கையும் இறுதியில் அந்த நிலையை அடையும். ஆனால் அது நிகழும் முன், நான் என்னையே கேட்டுக் கொள்ள வேண்டும். நான் என்ன செய்ய விரும்புகிறேனோ அதைச் செய்ய முடியுமா?" என்று பேசினார். அவர் பேசிய 4 நாட்களில் அவர் கோவாவிலேயே இறந்து போனார்.

பாலிவுட் இரங்கல்

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,''நானாஜியின் மறைவுச் செய்தி மிகவும் வருத்தமாக இருக்கிறது. நடிக்கவைக்க அதிகம் செய்யத் தேவையில்லாத அபூர்வ நடிகர்களில் அவரும் ஒருவர். அந்த குரல், அந்தத் தீவிரம், ஒவ்வொரு நடிப்பிலும் அந்த நேர்மை. நீங்கள் மறைந்துவிட்டீர்கள் என்று நம்புவது மிகவும் கடினம்''என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், "நான் சொல்ல முடியாத அளவுக்கு அதிர்ச்சியடைந்தேன். ஒரு லாரி என் மீது மோதியது போல் உணர்கிறேன். ஒரு சிறந்த நடிகராக, யாருடனும் ஒப்பிடமுடியாது. அவர் தனது தனித்துவமான பாணி மற்றும் நடிப்பின் மூலம் மக்களின் இதயங்களில் தனக்கென இடத்தைப் பிடித்தார். ஹவுஸ்ஃபுல் 5ல் அவருடன் இணைந்து பணியாற்றும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவு என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ், கியரா அத்வானி, நடிகை கங்கனா ரனாவத், ராம் கோபால் வர்மா, சுனில் ஷெட்டி, ரவீனா தண்டன், ஊர்மிளா மாதோன்கர், பிரபுதேவா, ஸ்மிருதி இரானி போன்ற பாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

'மும்பையின் நெருக்கடி எனக்கு பிடிக்காது' - புனே மலையடிவார பண்ணை வீட்டில் நானா படேகரின் இறுதிச்சடங்கு

இன்று காலை கோவாவில் மாரடைப்பு ஏற்பட்டு காலமான நடிகர் நானா படேகர் எப்போதும் அமைதியான சூழலில் வாழ வேண்டும் என்று நினைப்பவர். பொதுவாக நானா படேகருக்கு சினிமா படப்பிடிப்புகள் மற்றும் வேலை அதிகமாக மும்பையில... மேலும் பார்க்க

Nana Patekar: "நாளை உயிருடன் இருப்பேனா, இல்லையா? என்பது நிச்சயமில்லை" - வைரலாகும் நானா படேகர் வீடியோ

பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மாரடைப்பால் இன்று (அக்.8) உயிரிழந்திருக்கிறார். அவருக்கு வயது 75. கோவாவில் உள்ள தனது வீட்டில் சுய நினைவை இழந்து மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட நடிகர் நானா படேகர், ... மேலும் பார்க்க

Nana Patekar: '13 வயதில் ரூ.35 சம்பளம்' - பெயிண்ட்டராக சினிமா பயணத்தைத் தொடங்கிய நானா படேகரின் கதை

பாலிவுட் நடிகர் நானா படேகர்(75) இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். நானா படேகர் தனது இளமைக் காலத்தில் கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தார். இதனால் தனது 13 வயதிலேயே வேலை செய்ய ஆரம்பித்தார். கட... மேலும் பார்க்க

"இதயத் துடிப்பைக் கொண்டு வர 45 நிமிடங்கள் போராடினோம்" - நானா படேகரைக் காப்பாற்ற முயன்ற டாக்டர்கள்

பாலிவுட் நடிகர் நானாபடேகர் இன்று அதிகாலையில் கோவாவில் உள்ள அவரது இல்லத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை டாக்டர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அவரது இதயத் துடிப்பை மீண்டும் கொண்டு வர போராடினர... மேலும் பார்க்க

Nana Patekar: 75 வயதில் நடிகர் நானா படேகர் மரணம்; பலனளிக்காத CPR; மருத்துவமனை சொல்லும் காரணம் என்ன?

பாலிவுட் சினிமாவின் மிக முக்கிய நடிகர் மற்றும் இயக்குநர் நானா படேகர் (75). மராத்தி திரைப்படங்கள்தான் இவரது ஆரம்பப்புள்ளி. தமிழில் பொம்மலாட்டம், காலா ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் தென் மாந... மேலும் பார்க்க

"இந்தியாவில் அமைதியை உணரவில்லை" - நடிகர் சஞ்சய் தத்தின் கருத்தால் பாலிவுட்டில் சர்ச்சை

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சமீபத்தில் ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், ''இந்த நாட்டு மக்கள் மிகவும் அழகானவர்கள். இங்கு அமைதி நிலவ வேண்டும். இனி நம் நாட்டில் அந்த அமைதியை என்னால் உணர முட... மேலும் பார்க்க