செய்திகள் :

"இதயத் துடிப்பைக் கொண்டு வர 45 நிமிடங்கள் போராடினோம்" - நானா படேகரைக் காப்பாற்ற முயன்ற டாக்டர்கள்

post image

பாலிவுட் நடிகர் நானாபடேகர் இன்று அதிகாலையில் கோவாவில் உள்ள அவரது இல்லத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை டாக்டர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அவரது இதயத் துடிப்பை மீண்டும் கொண்டு வர போராடினர். ஆனால் முயற்சி பலனலிக்கவில்லை. அவர் உயிரிழந்துவிட்டார்.

அதிகாலையில் நானா படேகருக்குக் கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அவர் புனேயில் இருக்கும் தனது மகனுக்கு போன் செய்து பேசியுள்ளார். இதையடுத்து அவரது மகன் மருத்துவக் குழுவைத் தொடர்பு கொண்டு உடனே செல்லும்படி கேட்டுக்கொண்டார். அவர்கள் வந்தபோது நானாபடேகர் மயங்கிவிட்டார்.

அவர் மனிப்பால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு இறுதி நேரத்தில் சிகிச்சையளித்த டாக்டர் சேகர் சல்கர் கூறுகையில், "45 நிமிடங்கள் தொடர்ந்து அவரது இருதயத் துடிப்பைக் கொண்டு வர முயற்சி மேற்கொண்டோம். ஆனால் அவரை மீண்டும் உயிர்ப்பிக்க முடியவில்லை.

இது தொடர்பாக மருத்துவ-சட்ட ரீதியான வழக்கு (MLC) பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரேதப் பரிசோதனையும் நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.

நானா படேகர்
நானா படேகர்

நானா படேகர் மறைவுக்கு பாலிவுட் இரங்கலும் அதிர்ச்சியும் தெரிவித்துள்ளது. புனேயில் இருந்து அவரது மகன் மல்ஹர் கோவாவிற்கு விரைந்துள்ளார்.

நானா படேகர் மறைவுக்கு கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''இந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக மட்டுமல்லாமல், கோவாவுடன் ஆழமான பிணைப்பைக் கொண்டிருந்த நெருங்கிய நண்பராகவும், அர்ப்பணிப்புமிக்க சமூக ஆர்வலராகவும் திகழ்ந்தார்.

இந்தத் துயரத்தின் தருணத்தில் நான் நானா படேகர் குடும்பத்துடன் இருக்கிறேன். நான்கு நாள்களுக்கு முன்பு கோவாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டிருந்தார். நானும் அங்குச் செல்லவிருந்தேன், ஆனால் வேறு சில பணிகளின் காரணமாக என்னால் செல்ல முடியவில்லை," என்று சாவந்த் கூறினார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''இந்தியத் திரைப்பட உலகின் மூத்த நடிகர் நானா படேகர் மறைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் மனவேதனையையும் அளிக்கிறது. அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நானாவும் நானும் மிகவும் நெருக்கமான நட்புறவைக் கொண்டிருந்தோம். மராத்தி மற்றும் இந்தித் திரைப்படங்கள் வாயிலாக, தனது சிறப்பான நடிப்பால் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக ரசனைமிக்க ரசிகர்களின் இதயங்களில் நானா படேகர் நீங்கா இடம் பிடித்திருந்தார்.

தனித்துவமான வசன உச்சரிப்பு பாணியால் பல திரைப்படக் கதாபாத்திரங்களை அவர் அழியாத்தன்மை கொண்டவையாக மாற்றியதுடன், தனக்கென ஒரு தனி அடையாளத்தையும் உருவாக்கிக்கொண்டார். அவரது மறைவு இந்தியத் திரைப்படத் துறைக்கு ஒரு பேரிழப்பாகும்.

தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு அவர் நீட்டிய உதவிக்கரம் பல குடும்பங்களுக்கு ஒரு பெரும் ஆதரவாக அமைந்தது. நானா ஒரு சிறந்த கலைஞராகவும் நடிகராகவும் மட்டுமல்லாமல், சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவராகவும் திகழ்ந்தார். மறைந்த அவரது ஆன்மா சாந்தியடையட்டும்'' என்று பதிவிட்டுள்ளார்.

1951-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி மகாராஷ்டிராவில் விஸ்வநாத் படேகர் என்ற பெயரில் பிறந்த நானா படேகர், 1978-ல் 'கமன்' திரைப்படத்தின் மூலம் இந்தித் திரையுலகில் அறிமுகமானார்.

'சலாம் பாம்பே' மற்றும் 'பரிந்தா' போன்ற திரைப்படங்கள் அவருக்குப் பெரும் திருப்புமுனையாக அமைந்தன. 'பரிந்தா' திரைப்படத்தில், நிழலுக தாதா அண்ணா சேத் கதாபாத்திரத்தில் அவர் வெளிப்படுத்திய தீவிரமான நடிப்பு, அவருக்குச் சிறந்த துணை நடிகருக்கான தேசியத் திரைப்பட விருதைப் பெற்றுத் தந்தது.

Nana Patekar: 75 வயதில் நடிகர் நானா படேகர் மரணம்; பலனளிக்காத CPR; மருத்துவமனை சொல்லும் காரணம் என்ன?

பாலிவுட் சினிமாவின் மிக முக்கிய நடிகர் மற்றும் இயக்குநர் நானா படேகர் (75). மராத்தி திரைப்படங்கள்தான் இவரது ஆரம்பப்புள்ளி. தமிழில் பொம்மலாட்டம், காலா ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் தென் மாந... மேலும் பார்க்க

"இந்தியாவில் அமைதியை உணரவில்லை" - நடிகர் சஞ்சய் தத்தின் கருத்தால் பாலிவுட்டில் சர்ச்சை

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சமீபத்தில் ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், ''இந்த நாட்டு மக்கள் மிகவும் அழகானவர்கள். இங்கு அமைதி நிலவ வேண்டும். இனி நம் நாட்டில் அந்த அமைதியை என்னால் உணர முட... மேலும் பார்க்க

Ramayana: 'ராமாயணா' நிகழ்வில் 'ஜெய் ஶ்ரீராம்' சொன்ன பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட்; வைரலாகும் வீடியோ

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கியிருக்கும் 'ராமாயணா' படத்தின் முதல் பாகம் தீபாவளி வெளியீடாக வருகிறது. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று நடைபெற்றது. Ramayana ... மேலும் பார்க்க

Oscars: "ஆஸ்கர் தேர்வில் அரசியல் இருக்கிறது!" - அனுராக் காஷ்யப் கடும் விமர்சனம்

ஆஸ்கர் விருதின் 'சிறந்த சர்வதேசத் திரைப்படம்' பிரிவுக்காக இந்தியாவின் அதிகாரப்பூர்வத் தேர்வாக மராத்தி படமான 'கோந்தல்' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பரிந்துரை குறித்துப் பிரபல பாலி... மேலும் பார்க்க

சொத்தில் ரூ.2490 கோடி இழப்பு; ஆனாலும் 'பணக்கார நடிகர்' அந்தஸ்தை ஷாருக்கான் தக்கவைத்து எப்படி?

இந்திய நடிகர்களின் சொத்து விபரங்கள் பற்றிய விபரம் வெளியாகி இருக்கிறது. ஹுருன் இந்தியா நிறுவனம் இதனை வெளியிட்டுள்ளது. இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இந்திய அளவில் மிகப்பெரிய பணக்கார நடிகராக அறிவிக்கப... மேலும் பார்க்க

Radhika Apte: "அதனால் 4 நாள்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை!" - ராதிகா அப்தே

நடிகை ராதிகா ஆப்தே நடிப்பில் இப்போது 'லஸ்ட் ஸ்டோரீஸ் 3' திரைப்படம் வெளியாகியிருக்கிறது. ராதிகா ஆப்தே | Radhika Apteதனது திரைப்பயணத்தில் எதிர்கொண்ட மிகவும் அதிர்ச்சிகரமான அனுபவம் ஒன்றைக் குறித்து சமீபத... மேலும் பார்க்க