செய்திகள் :

சொத்தில் ரூ.2490 கோடி இழப்பு; ஆனாலும் 'பணக்கார நடிகர்' அந்தஸ்தை ஷாருக்கான் தக்கவைத்து எப்படி?

post image

இந்திய நடிகர்களின் சொத்து விபரங்கள் பற்றிய விபரம் வெளியாகி இருக்கிறது. ஹுருன் இந்தியா நிறுவனம் இதனை வெளியிட்டுள்ளது. இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இந்திய அளவில் மிகப்பெரிய பணக்கார நடிகராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும், அவர் ஒரு வருடத்தில் அவரது நிகர சொத்து மதிப்பில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது ஒரு வருடத்தில் ஷாருக்கானின் நிகர சொத்து மதிப்பு ரூ.2490 கோடி குறைந்துள்ளது. ஷாருக்கானின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு ரூ.10,000 கோடியாகும். கடந்த ஆண்டு ஷாருக்கானின் சொத்து மதிப்பு ரூ.12,490 கோடியாக இருந்தது. ஆனால் தற்போது ரூ.12,490 கோடியில் இருந்து ரூ.10,000 கோடியாகக் குறைந்துள்ளது.

அமிதாப்பச்சன், சல்மான் கான்
அமிதாப்பச்சன், சல்மான் கான்

அவரது நிகர மதிப்பில் பெரும் சரிவு இருந்தபோதிலும், இந்தியாவின் பணக்கார நடிகர்களின் பட்டியலில் தனது முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. ஷாருக்கானின் சொத்து அவர் திரைப்படங்களில் இருந்து சம்பாதிப்பது மட்டும் அல்லாது, ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், நைட் ரைடர்ஸ் ஸ்போர்ட்ஸ் மூலமும் சம்பாதித்து வருகிறார். இப்பட்டியலில் அமிதாப் பச்சன், சல்மான் கான், ஹிருத்திக் ரோஷன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

அமிதாப்பச்சனுக்கு ரூ.4,000 கோடியும், நடிகர் சல்மான் கானுக்கு ரூ.3000 கோடியும், ஹிருத்திக் ரோஷனுக்கு ரூ.2500 கோடியும் சொத்து இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு பட்டியலில் இடம் பெற்று இருந்த ஷாருக்கானின் தொழில் பார்ட்னர் ஜூஹி சாவ்லா மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் பெயர் பட்டியலில் இடம் பெறவில்லை.

Radhika Apte: "அதனால் 4 நாள்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை!" - ராதிகா அப்தே

நடிகை ராதிகா ஆப்தே நடிப்பில் இப்போது 'லஸ்ட் ஸ்டோரீஸ் 3' திரைப்படம் வெளியாகியிருக்கிறது. ராதிகா ஆப்தே | Radhika Apteதனது திரைப்பயணத்தில் எதிர்கொண்ட மிகவும் அதிர்ச்சிகரமான அனுபவம் ஒன்றைக் குறித்து சமீபத... மேலும் பார்க்க

'பெருமையால் அழுகிறேன்..!'- புற்றுநோயை வென்று கதாநாயகியான வளர்ப்பு மகள்; நெகிழ்ந்த விவேக் ஓபராய்

பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயால் சிறுவயதில் தத்தெடுக்கப்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சஹாரா ஷா தற்போது அதில் இருந்து மீண்டு வந்து தனது முதல் நேபாளி திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்... மேலும் பார்க்க

பெண் மேலாளரின் துப்பட்டாவில் முகத்தைத் துடைத்த ஷாருக்கான்; என்ன சொல்கிறார்கள் நெட்டிசன்கள்?

மும்பையில் தற்போது விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. மும்பையில் உள்ள விநாயகர்களில் லால்பாக் ராஜா மிகவும் பிரபலம் ஆகும். இந்த விநாயகரைத் தரிசிக்க பாலிவுட் பிரபலங்கள், அரசியல்வாதி... மேலும் பார்க்க

'துவா'வுக்கு சகோதரி கிடைத்துவிட்டாள்: தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் தம்பதிக்கு மீண்டும் பெண் குழந்தை

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிகர் ரன்வீர் சிங்-ஐ காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கிறார். இரண்டாவதாக தீபிகா படுகோனே மீண்டும் கர்ப்பமாக இருந்தார். கடந்த ஏப்ரல்... மேலும் பார்க்க

சுஷாந்த் சிங் மேலாளர் திஷா சாலியன் மரண வழக்கு: "அவரை எனக்கு தெரியாது" - ஆதித்ய தாக்கரே திட்டவட்டம்

மும்பையில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ரஜபுத் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவரிடம் மேலாளராக இருந்த திஷா சாலியன் அதே ஆண்டு ஜூன் 8ம்... மேலும் பார்க்க

கத்ரீனா கைஃப்: பிரசவத்திற்குப் பின் எதிர்கொண்ட உருவக் கேலி; ₹350 கோடி பிராண்ட் மூலம் பதிலடி!

ஒரு பெண்ணின் அடையாளம் என்பது அவரது உழைப்பு, தொழில் முனைவுத் திறன், சாதனைகள் ஆகியவற்றில் அடங்கியுள்ளதா அல்லது அவர் காட்டும் உடல் எடையிலும் தோற்றத்திலும் அடங்கியுள்ளதா? பாலிவுட் திரையுலகில் இருபது ஆண்டு... மேலும் பார்க்க