செய்திகள் :

"நாங்கள் ஒத்துக்கொள்ளவில்லை; அதனால் வேளாண் அமைச்சர் ஆக்குகிறோம் என்றார்" - யாரைச் சொல்கிறார் சீமான்?

post image

தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்து நேற்று (செப்.23) தேர்தல் பிரசாரம் செய்திருந்தார் சீமான்.

அப்போது பேசிய அவர், "என்ன நடக்குது இப்போ? இந்தத் தேர்தலயே எடுத்துக்கொள்வோம். அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வென்ற சத்தியபாமா அவர்கள் எதற்காக பதவி விலகினார்கள் என்று யாராவது ஒருவர் கேட்க வேண்டுமல்லவா?

இந்தக் கட்சியிலிருந்து அந்தக் கட்சிக்குப் போக வேண்டிய அவசியம் என்ன? தேவை என்ன? அதே பதவிக்கு மீண்டும் இதே நிலத்தில் போட்டியிட வேண்டிய அவசியம் என்ன? தலைவர் யார்?

சீமான்
சீமான்

ஊழல் சக்தி என்றார். அதைத் தீய சக்தி என்றார். தீய சக்தி என்று சொல்லப்பட்ட கட்சியில் ஓட்டு வாங்கி வென்றவர்களைத்தான் கட்சியில் வைத்துக்கொண்டு ஆட்சி அமர்திருக்கிறார்.

ஊழல் சக்தி என்று சொல்லப்பட்ட கட்சியில் வென்று வந்தவர்களைத்தான் கூடச் சேர்த்துக்கொண்டு இப்போது தேர்தலைச் சந்திக்கிறார். அவரிடம் போனால் என்ன, வாஷிங் மெஷின் வைத்திருக்கிறாரா? துவைத்துத் தூய்மைப்படுத்திவிடுவாரா?

இப்போது இரட்டை இலையில் நின்று வென்றவர்கள் விசில் சின்னத்தில் நிற்கிறார்கள். நீங்களே யோசித்துப் பாருங்கள். இந்தத் தேர்தல் ஒரு தனி மனிதருடைய சொந்த விருப்பத்துக்காக நடக்கிறதா?

அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவருக்கும் இப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராக நிற்பவருக்கும் என்ன வித்தியாசம்?

இந்த மண்ணில் எந்த மாற்றமும் நிகழவில்லை. இவர்கள் நிகழ்த்த போவதும் இல்லை என்று நான் சொல்கிறேன். ஒரே ஒரு மாற்றம்தான். வேட்டி, சட்டைக்குப் பதிலாக கோட், சூட்.

சீமான்
சீமான்

எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைத்தால் என்னை துணை முதலமைச்சர் ஆக்குவதாகச் சொன்னார் ஆதவ் அர்ஜுனா.

நாங்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்பதால் வேளாண்துறை அமைச்சர் ஆக்குகிறோம் என்றார். எங்களுக்கு உடன்பாடு இல்லை என வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டோம்" என்று பேசியிருக்கிறார்.

"ஜெம் வீரமணி வீடியோக்களோடு 2 ஆண்டுகளுக்கு முன்பே புகாரளித்தேன்" - ஆதாரத்தோடு காங்கிரஸ் ரஞ்சன் குமார்

பல ஆண்டுகளாக குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்த வழக்கில் பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி கைதாகியிருக்கிறார். இந்நிலையில், ஜெம் வீரமணி குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வீடியோ ஆதாரங்களுடன் பு... மேலும் பார்க்க

அமெரிக்காவில் ஈரான் குழு: அமெரிக்காவிடம் என்னென்ன நிபந்தனைகள் வைத்தோம்? - ஈரான் சொல்லும் பட்டியல்!

ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள ஈரான் அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு சென்றிருக்கிறது. அங்கே அமெரிக்க அதிகாரிகளுக்கும், ஈரான் அதிகாரிகளுக்கு தீவிரமாக ஈரான் போர் நிறுத்தம் குறித்து பேச்சு... மேலும் பார்க்க

``ஐ.நா சபை பயனற்ற அமைப்பாக மாறிவிட்டது" - அர்ஜெண்டினா அதிபர் கடும் விமர்சனம்!

ஐக்கிய நாடுகள் சபை தனது அடிப்படை கொள்கைகளில் இருந்து விலகி, பயனற்ற அமைப்பாக மாறிவிட்டது என அர்ஜெண்டினா அதிபர் ஜேவியர் மிலே (Javier Milei)கடுமையாக விமர்சித்துள்ளார். நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பொதுச... மேலும் பார்க்க

`குடியுரிமைச் சட்டத்தின் பின்வாசல் வழி... தேர்தல் ஆணையத்தின் சரிவு.!' | எம்.ஜி.தேவசகாயம் EXCLUSIVE

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)(ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி)கட்டுரையாளர் : எம... மேலும் பார்க்க

"ரஷ்யாவில் சீன அதிபருக்குத்தான்... ரஷ்யப் போரில் இந்திய மக்களும்..!"- ஐ.நாவில் ஜெலன்ஸ்கி பேச்சு

தற்போது அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டம் நடந்து வருகிறது.அந்தக் கூட்டத்தில் நேற்று ஜெலன்ஸ்கி பேசினார்.தற்போது உலகத்தில் நடந்துவரும் போர்களில் ரஷ்ய-உக்ரைன் போரும் மிக முக்கிய... மேலும் பார்க்க

`செல்வப்பெருந்தகை' வைத்த விமர்சனம் - பிரவீன் சக்கரவர்த்தி சொன்ன பதில்!

திருச்சி விமான நிலையத்தில் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரால் இந்தியாவின் ஜனநாயகமே பாதிக்கப்பட்டு... மேலும் பார்க்க