செய்திகள் :

தேர்தல் ஆணையம்: ``இதனால்தான் இந்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது..!" - முன்னாள் ஆணையர் சொல்வதென்ன?

post image

தேர்தல் ஆணையத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோ அல்லது ஒருமித்த கருத்தோ இன்றி தனிச்சையாக எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் சட்ட விதிகளுக்கு எதிரானது என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ``இந்தியத் தேர்தல் ஆணையம் என்பது பல உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகும். தலைமைத் தேர்தல் ஆணையர் உட்பட எந்தவொரு தனி அதிகாரியும் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவர் அல்ல.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, மூன்று ஆணையர்களும் தங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைப்பார்கள்.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

ஆனால் இறுதி முடிவு என்பது ஒருமித்த கருத்தின் அடிப்படையிலோ அல்லது பெரும்பான்மை வாக்களிப்பின் அடிப்படையிலோதான் எடுக்கப்பட வேண்டும். மூன்றில் இரண்டு ஆணையர்கள் ஒரு நிலைப்பாட்டை எடுத்தால் அதுவே பெரும்பான்மையாகும். இரு ஆணையர்கள் வேறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகச் செயல்பட்டார் என்பதுதான் தற்போதைய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது

தேர்தல் நடைமுறைகளின் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பி, பலத்த விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஆனால், ஒருமுறை தேர்தல் முடிந்துவிட்டால் அதை யாரும் ரத்து செய்ய முடியாது. முடிந்த விஷயம் முடிந்ததுதான். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுகின்றன. அதற்காக முறையான நிர்வாக மற்றும் அரசியல் சாசன நடைமுறைகள் தொடங்கப்பட வேண்டும். யாராவது அதிகாரப்பூர்வமாக நடவடிக்கைகளைத் தொடங்கினால் மட்டுமே அடுத்தகட்ட செயல்பாடுகள் தெரியவரும்.

 ஓ.பி. ராவத்
ஓ.பி. ராவத்

வாக்காளர் சேர்க்கைக்கான 'ஃபார்ம் 6'-ல் செய்யப்பட்ட மாற்றங்கள் என்பது, குடியரசுத் தலைவர் அல்லது நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ ஒப்புதல் இன்றி தேர்தல் ஆணையம் தனது வரம்பை மீறி செயல்பட்டுள்ளதைதான் சுட்டிக்காட்டுகிறது. 6-ல் இரண்டு வகையான விண்ணப்பங்கள் உள்ளன. ஒன்று புதிய வாக்காளர்களுக்கானது, மற்றொன்று பழைய வாக்காளர்களுக்கானது. உதாரணமாக, 40 வயது நபர் ஒருவர் இதுவரை எங்குமே வாக்காளராகப் பதிவு செய்யாமல் புதிதாக விண்ணப்பிக்கும் போது, இத்தனை காலம் அவர் எங்கு இருந்தார் என்ற சந்தேகம் எழுவது இயல்பு.

அதற்காக அவர்களின் பெற்றோர் மற்றும் பிற கூடுதல் விவரங்களைக் கேட்கும் தனிப் படிவம் பயன்படுத்தப்படும்.
ஆனால், இந்த முறை தேர்தல் ஆணையம் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களுக்கும் பெற்றோர் குறித்த விவரங்களை கட்டாயமாக்கி, அந்தத் படிவத்தை அனைவருக்கும் பொதுவாக்கியுள்ளது. இது 'பாரம் 6'-ல் செய்யப்பட்டத் திருத்தத்திற்குச் சமம். எந்தவொரு படிவத்திலும் திருத்தம் செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை. அந்த அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உள்ளது. இதனால் தான் இந்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

``அலைக்கழிப்பு... கொள்முதல் செய்யப்படாமல் கிடக்கும் 6 லட்சம் மூட்டை நெல்" - அன்புமணி ராமதாஸ்

காவிரி பாசன மாவட்டங்களில் 6 லட்சம் நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் வீணாகிறது என அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``காவிரி பாசன மாவட்டங... மேலும் பார்க்க

`மாறுபட்ட கருத்துகள் எழுவது இயல்பு; கடந்த 10 மாதங்களில் நடந்ததை மட்டும்..!' - ECI விளக்கம்

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம் வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் 1.3 கோடி பெயர்கள் நீக்கப்பட்டது, 'படிவம் 6'-ல் விதிகளை மீறி மாற்றங்கள் செய்தது, தரவுத்தளத்தை மத்தியமயமாக்கியது, தேர்தல் ... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையம்: ``ஒரு நல்ல முயற்சி... ஆனால்" - எம்.பி கார்த்தி சிதம்பரம்

சென்னை விமான நிலைய நிர்வாகத்தை தனியார் அல்லது பிற அமைப்புகளின் நிர்வாகத்திற்கு மாற்றுவது போன்ற நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு முயன்று வருவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த நிலையில், மத்திய அரசின் இத்தக... மேலும் பார்க்க

"தவெக ஆட்சி வந்தது நல்லதுதான்!" - சொல்கிறார் நாதக பாத்திமா பர்கானா

2026 சட்டமன்றத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்த நாம் தமிழர் கட்சி, பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் எனச் சொல்லப்பட்ட நிலையில் எதிர்வரும் இடைத்தேர்தலில் மீண்டும் தனித்தேப் போட்டியிடுவதாக அறிவித்திருக்க... மேலும் பார்க்க

DMK: 'சீனியர்கள வச்சிட்டு எதுவும் செய்ய முடியாது' - விரக்தியடைந்த உதயநிதி.. பின்னணி என்ன?

த.வெ.க செயல்பாடுகளை எதிர்கொள்ள முடியாமல் தி.மு.க திணறிவருவதாகச் சொல்லப்படும் சூழலில், சீனியர்களை வைத்து கட்சி நடத்த முடியாமல் உதயநிதி திணறுவதாக சொல்கிறார்கள் உடன்பிறப்புகள். அதன் பின்னணி குறித்து அறிவ... மேலும் பார்க்க

"அமைச்சர் நிர்மல்குமார் கண்ணியக் குறைவாக பேசவில்லை.. பேசியது தி.மு.க-தான்! - விசிக எழில் கரோலின்

விடுதலை சிறுத்தைகள் கட்சிமீதான தே.மு.தி.க-வின் விமர்சனம், வி.சி.க-வின் இடைத்தேர்தல் நிலைப்பாடு உள்ளிட்ட விவகாரங்களை கேள்விகளாக்கிவி.சி.க துணைப் பொதுச்செயலாளர் ஏழில் கரோலினிடம் பேசினேன்."அமைச்சர் பதவிக... மேலும் பார்க்க